Thursday, November 25, 2010

நோட்பேட்-2

"அடடா! போயிடுச்சே! இன்னும் ஏதாவது எழுதலாம்ன்னு நினைச்சேனே" ன்னா ஒண்ணும் கவலை வேண்டாம். அதை திருப்பியும் திறக்கலாம். எப்படி?

அதை எங்கே சேமிச்சோம்? மேல்மேசைலே. பேருதான் மேல்மேசை; அதுக்கும் மேசைக்கும் ஒரு தொடர்பும் இல்லே! வேண்ணா ஒரு பென்சில அது மேலே வெச்சு பாருங்க! ஹிஹிஹி!

இந்த மேல் மேசை என்கிறது நாம் கணினியை துவக்கியதும் பார்க்கிற திரைதான். அதனால அங்கே இருக்கணுமே? நல்லா பாருங்க அங்கே இருக்கு! அதை ரெட்டை சொடுக்கு சொடுக்குங்க. அதாவது ஒரு தரம் சொடுக்கி உடனே இன்னொருதரம் சொடுக்குங்க. கோப்பு முன்னைப் போலவே திறக்கும்.

இந்த ரெட்டை சொடுக்கு சிலருக்கு கஷ்டமா இருக்கும். ஒரு தரம் சொடுக்கி இன்னொரு தரம் சொடுக்க நேரமாயிட்டுதுன்னா நாம எதிர்பார்த்த மாதிரி வேலை செய்யாது. அதே போல முதல் சொடுக்குக்கும் இரண்டாம் சொடுக்குக்கும் நடுவில சொடுக்கி கொஞ்சம் நகர்ந்துட்டாலும் கணினி அதை ரெண்டு ஒத்தை சொடுக்கா நினைச்சுக்கும்.

இந்த பிரச்சினையை ரெண்டு மூணு விதத்தில கையாளலாம்.

1.
From notepad

வலது சொடுக்கு செய்தா நாம் செய்யக்கூடிய செயல்களுக்கு அங்கே தேர்வோட மெனு கிடக்கும்ன்னு சொன்னேன் இல்லையா? கொஞ்சம் மூளையை கசக்கிகிட்டு யோசிங்க. ஆமாம் சொன்னேன். இப்ப இந்த கோப்பை திறக்கறது நாம் செய்யக்கூடிய செயல். அதனால மேல்மேசையிலே தெரியற கோப்போட சின்னத்து மேலே சொடுக்கியை வெச்சு வலது சொடுக்கு சொடுக்குங்க. அதில் முதல் தேர்வு ஓபன். அதை சொடுக்கினா கோப்பு திறக்கும்.

2. முன்னே செய்த மாதிரி ஸ்டார்ட்> ஆக்ஸசரீஸ் >நோட்பேட் இப்படிப்போய் நோட்பேட் ஐ சொடுக்கினா புதுசா ஒரு பொட்டி திறக்கும். இதில முன்னே எழுதின கோப்பை திறக்கலாம். எப்படி? பைல் மெனுவை திறந்து இரண்டாவது தேர்வை பாருங்க. ஒப்பன் ன்னு இருக்கும். அதை சொடுக்கினா முன்னே சேமிக்க ஒரு பெட்டி திறந்தது இல்லையா சற்றொப்ப .... ஹிஹிஹீ ... ஏறக்குறைய அதே மாதிரியான பெட்டி திறக்கும். அதிலே இடது பக்கம் பாருங்க. Desktop ன்னு தெரியுதா? அதை சொடுக்குங்க. இப்ப desktop லே இருக்கிற கோப்பு அடைவு எல்லாம் பட்டியலா தெரியும்.

From notepad

அதிலே நம்ம greatest.txt ஐ கண்டு பிடிச்சு அதை சொடுக்குங்க. Okன்னு ஒரு பட்டன் வரும். அதையும் சொடுக்குங்க. கோப்பு திறந்துடும். எவ்வளோ சொடுக்கு ஆச்சு பாருங்க! எட்டு சொடுக்குகள். யப்பாடா!

3. இப்படி ரெட்டை சொடுக்கு போட கஷ்டம்ன்னு எட்டு சொடுக்கு போடறத்துக்கு பதிலா வேற ரெண்டு வழியை கடை பிடிக்கலாம். முதலாவது இந்த சொடுக்கற வேகத்தை நமக்கு தகுந்தாப்போல மாத்திக்கலாம். இரண்டாவது சொடுக்கியை ஒரு தொடுப்பு -லிங்க் - மேலே வெச்சாலே அது தேர்ந்தெடுக்கற மாதிரியும் ஒரு தரம் சொடுக்கினாலே திறக்கிறா மாதிரியும் மாத்தி வெச்சுக்கலாம். எப்படின்னு அப்புறமா பார்க்கலாம்.

4. சொடுக்கி எவ்வளோ நேரம் கழிச்சு அடுத்த சொடுக்கை தனி சொடுக்கா கணக்கு பண்ணும் என்கிறதை மாத்த முடியும். நம்மால் வேகமா அடுத்த சொடுக்கு சொடுக்க முடியலைன்னா இதை அதிகமாக்கினா சரியாப்போயிடும். அதை உடனடியா சோதிச்சும் பாத்துக்கலாம். எப்படி என்கிற விவரம் அப்புறமா.

5.
From notepad

முன்னே செய்த மாதிரி ஆரம்பிச்சு வித்தியாசமா ஸ்டார்ட்> டாகுமென்ட்ஸ் போய் பார்த்தா அங்கே நம்ம கோப்பு உக்கார்ந்திருக்கும். சொடுக்கினா திறந்துடும். இது ஒரு நல்ல எளிமையான வசதி.

6. முன்னே செய்த மாதிரி ஸ்டார்ட்> ரன் போய் கட்டளை notepad.exe .... ஹிஹி இப்படியும் திறக்க முடியும்ன்னு சொல்லறத்துக்காக...

ஒரு வழியா திருப்பியும் திறந்தாச்சா? அதுல எதுவும் மாற்றம் செய்யும் முன்னே மத்த விஷயம் பார்க்கலாம்.

2 comments:

  1. முன்னே செய்த மாதிரி ஸ்டார்ட்> ரன் போய் கட்டளை notepad.exe .... ஹிஹி இப்படியும் திறக்க முடியும்ன்னு சொல்லறத்துக்காக...//

    ஹிஹிஹி, இதை முன்னாடி பார்க்கலை, நாங்க இப்படித் தானே செய்வோம்! :P

    ReplyDelete
  2. ஹிஹிஹி, இதை முன்னாடி பார்க்கலை, நாங்க இப்படித் தானே செய்வோம்! :P //
    உங்களை மாதிரி பாப்பாங்களுக்கு எல்லாம் :P

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!