Friday, November 5, 2010

வணக்கம்!

இதை படிக்கிற எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்! கங்கை குளியல் ஆச்சா?

இந்தப்பயலுக்கு வேற வேலை இல்லையா, நேரம் இல்லை இல்லைன்னு சொல்லிகிட்டு இன்னொரு வலைப்பூ ஆரம்பிக்கிறானே ந்னு சிலருக்காவது தோணியிருக்கும்.
ஆன்மீகம் பதிவு மாதிரி இது தினம் ஒண்ணு என்ற ரீதியில் வராது. அதனால் நேரம் இருக்கும் போதும் தேவை இருக்கும்போதும் பதிவு போடுவேன், அவ்வளவுதான் (அப்பாடா ந்னு சிலர் பெருமூச்சு விடுவது கேக்குது :-)
அடிக்கடி யாராவது கணினி சார்ந்த கேள்விகளை என்கிட்டே கேட்கிறாங்க. அதுக்குன்னு நான் ஏதோ பெரிய கணினி மேதைன்னு அர்த்தம் இல்லை. நான் கொஞ்சம் பொறுமையா பதில் சொல்லறேன். தெரியலைன்னா தேடி படிச்சு தெரிஞ்சுகிட்டு பதில் போடுவேன். அதான் காரணம்.
பல வருஷங்கள் முன்னே என் அண்ணி கணினியைபயன்படுத்த முயற்சி செய்து கஷ்டப்பட்டப்ப என்கிட்டே சந்தேகம் கேப்பாங்க. கல்லூரி படிக்கற (வேற என்ன பொட்டி தட்ற படிப்புதான்!) அவங்க பொண்ணுகிட்டே கேக்கிறதுதானே என்பேன். "அவ எங்கே சொல்லித்தரா? பொறுமையே கிடையாது" ம்பாங்க.
இப்படி இன்னும் பலருக்கும் பிரச்சினை இருக்குன்னு தெரியும்.
அதனால்தான் இந்த வலைப்பூ.
பேர் என்ன வைக்கலாம்ன்னு பாத்தேன். ஏற்கெனெவே ஆன்மீகம் பார் டம்மீஸ்ன்னு இருக்கு. அதே மாதிரி வேணாம்ன்னு தோணித்து. பெரிசுங்களுக்கு கணினி ந்னு யோசிச்சேன். நீ மட்டும் என்ன சிறிசான்னு கேள்வி கேட்கப்போறாங்கன்னு தொண்டுகிழங்களுக்கு கணினின்னு வெச்சுட்டேன். அதுக்காக தொண்டு கிழங்கங்கதான் படிக்கணும்ன்னு இல்லை. என்னை மாதிரி இளைஞர்களும் படிக்கலாம். :-)

மெள்ள ஆரம்பிச்சு மெள்ள கணினி சமாசாரம் பாத்துகிட்டு மெள்ள போகலாம். என்ன அவசரம்? நடுவிலே யாரும் குறிப்பா சந்தேகம் கேட்டா அதுக்கு பொதுவா இங்கே விடை பார்க்கலாம்.
சரியா?
அனேகமா நாளை பார்க்கலாம். வரட்டா?

7 comments:

  1. Namasthe Thivaji.

    Welcome to teaching computers for mara mandai like me. :)))))
    I m here sitting in the first row. Now I am alone. Hope others will follow.

    Ashwin Ji

    ReplyDelete
  2. //என்னை மாதிரி இளைஞர்களும் படிக்கலாம். :-)
    // ha ha ha..:) good one Tiva anna!..:)

    ReplyDelete
  3. இன்னொரு வலைப்பூ ஆரம்பிக்கிறானே ந்னு சிலருக்காவது தோணியிருக்கும்//

    எனக்கு, எனக்குத் தோணிச்சே! நான் கேட்கிற கேள்விகள்ளே நீங்க தலையைப் பிச்சுக்காம இருந்தா சரி! :D

    ReplyDelete
  4. அட?? ஃபாலோ அப்பும் சேர்ந்து வராப்போல அட்ஜஸ்ட் பண்ணுங்க. கமெண்டைக் கொடுத்ததும் பாலோ அப் வருது! :P

    ReplyDelete
  5. என்னை மாதிரி இளைஞர்களும் படிக்கலாம். :-)//

    க்ர்ர்ர்ர்ர், அநியாயமா இருக்கே!

    ReplyDelete
  6. @ வாங்க அஷ்வின். பிள்ளையார் சுழி போட்டுட்டீங்க! நன்றி!
    @தக்குடு :-))
    @கீதா அக்கா: பிச்சுக்க தலையில ஒண்ணும் அதிகமா இல்லே! அப்புறம் சாதாரண கணினி வெச்சு இருக்கிறவங்களுக்குத்தான் பாடம். ஸ்பெஷல் கணினி வெச்சு இருக்கீறவங்க படிக்கலாம். ஆனா அவங்க பிரச்சினையை தீர்க்க முடியுமான்னு சொல்ல முடியாது!:-)

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!