Monday, November 8, 2010

சொடுக்கியோட பயன்...

சொடுக்கியோட பயனை சொல்லலை இல்லையா?
இந்த சொடுக்கி பரவலா ஆன பிறகுதான் கணினியே வெகு ஜன உபயோகத்துக்கு வந்தது. அதுக்கு முன் கணினி என்ன செய்யணும்ன்னு கட்டளை எழுத வேண்டி இருந்தது. ஒரு கமா விட்டுட்டாலும் வேலை நடக்காது. அந்த மாதிரி கட்டளை இல்லைன்னு சொல்லிடும்.பிறகு ஒரு திரையை காட்டி அதிலே ஒரு அம்புக்குறியும் காட்டி, அம்புக்குறியை இன்ன இடத்தில வெச்சு சொடுக்கினா இன்ன கட்டளைன்னு ஏற்பாடு செஞ்சாங்க. அதாவது கட்டளையை டைப் அடிச்சு உள்ளிடறதுக்கு பதிலா ஏற்கெனெவே எழுதி வெச்ச கட்டளையை ஒரு சொடுக்கால உள்ளிடறோம். அது சரி, எழுதி வெச்ச ஆசாமி கமாவை விட்டுட்டா என்ன ஆகும்?!

வலது, இடது, பட்டன்லே இடதுதான் வழக்கமா பயனாகும். அதனால சொடுக்குங்கன்னு சாதாரணமா சொன்னா அது இடது சொடுக்குதான். திரையிலே தெரியற ஒரு இடத்தை - பட்டனோ இல்லை உரையோ - சொடுக்குங்கன்னு யாரும் எழுதினா அது இடது சொடுக்குதான். வலது சொடுக்கு பலரும் பயன்படுத்தாட்டாலும் அது பல சமயம் உதவி பண்ணும். நாம் வேலை செஞ்சுகிட்டு இருக்கிற அந்த நேரத்திலே என்ன செய்ய வாய்ப்பு இருக்குன்னு அது காட்டும். அதாவது பிரதி எடுக்கலாம், ஒட்டலாம், வெட்டலாம் சேமிக்கலாம், இந்த வார்த்தையை கூகுள்ளே தேடலாம் ந்னு சில தேர்வுகளைக் காட்டும். ஒரு வரியை தேர்வு செய்து வெச்சு அப்புறம் பாத்தா வேற மாதிரி கூட இருக்கலாம். இதுக்கு கான்டெக்ஸ்ட் மெனு ந்னு பேர்.
மௌஸ் சக்கரம் திரையில மேலே கீழே நகர்த்தி பார்க்க உதவும். அதுவே சமயத்தில பட்டனாவும் வேலை செய்யும்.
இந்த மௌஸுக்கு சிலர் சில ப்ரோக்ராம் எழுதி அதோட செயல்பாட்டை மாத்தி இருக்காங்க.
மௌஸை நகத்தி ஒரே இடத்தில வெச்சா நாம அமைக்கிற நேரத்துக்கு அப்புறம் 3-5 செகண்ட் தானே சொடுக்கும்! வேணும்ன்னா இந்த வார்த்தை மேலே சொடுக்கி வர வலைப்பக்கத்த பாருங்க!

இத மாதிரி இன்னும் ஒண்ணு சொடுக்கியை ஏதோ ஒரு பக்கம் நகர்த்தி ஒரு செயலை செய்ய வைக்கிறது. Mouse gestures. அது அடுத்த வலைப்பக்கத்துக்கு போகவோ அடுத்த மெய்ல் ஐ பார்க்கவோ இருக்கலாம். பயர்பாக்ஸுக்கான அந்த மாதிரி ஒரு நீட்சியை இங்கே பாருங்க!

3 comments:

  1. grrrrrநீங்க இரண்டாவதாக் கொடுத்திருக்கும் இணைப்பைச் சொடுக்கினா என்னோட டாஷ்போர்டுக்குப் போகுது! ??????????????

    ReplyDelete
  2. அது அவங்க அவங்க டாஷ்போர்டுக்கு போகுது. சரி பண்ணிட்டேன். மன்னிக்க!

    ReplyDelete
  3. ஆனைக்கும் அடி சறுக்கும்! :))))))))) :P:P:P

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!