Thursday, November 18, 2010

மோடம்

ரைட், இப்ப மேடம் பத்தி...ச்சீ மோடம் பத்தி பார்க்கலாம்.

கணினி சார்ந்த எல்லா சாதனங்கள் மாதிரியே இதுலேயும் வகை வகையா இருக்கு. கடையிலே நீங்க பாட்டுக்கு போய் வாங்கிட்டு வந்து அப்புறம் கஷ்டப்படாதீங்க. எந்த கம்பனி உங்களுக்கு இணைய இணைப்பை கொடுக்கப் போகுதோ அவங்களை கேட்டு ஆலோசிச்சு வாங்கிக்கலாம். இந்த இண்டர்நெட் இணைப்புக்கு காசு தரணும், ஆமா! மாசா மாசம் பால்காரனுக்கு காசு கொடுக்கறா மாதிரி, கொடுக்கலேன்னா இணைப்பை வெட்டி விடுவாங்க. (மாசம் பாலுக்கு தர காசை விட இந்த பில் கம்மிதான்! ஹிஹிஹி!)

மோடம் ஒரு டெலிபோன் லைன் வழியா மத்த கணினிகளோட தொடர்பு வெச்சுகிட்டு தகவல் வாங்கித்தரும். இன்னும் டயல் அப் இணைப்பு வெச்சு இருக்கிறவங்க இருக்காங்க. மோடம்கிட்டே என்ன தொலைபேசி எண்ணை டயல் பண்ணனும்ன்னு எழுதிச் சொல்லிட்டா, இயக்கினதும் அது டயல் பண்ணி டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் டக் டக் டக் கீய்ய்ய்ங் கீய்ய்ய்ங்ன்னு எல்லாம் விசித்திரமா சத்தம் போட்டு அப்புறம் இணைப்பை வாங்கித்தரும். படு ஸ்பீடா 56 Kbps கேபிபிஎஸ் வேகத்தில (!) இணைச்சு ஒரு 5 கேபி மெய்ல் வரத்துக்குள்ளே போய் சின்ன குளியல் போட்டு வந்துடலாம். [56 ந்னாலும் 2-3 கிடைக்கறதே பெரிய விஷயமா இருந்தது!)
கூகுள்கிட்டே கேட்டுக்கூட பாத்துட்டேன். டயல் அப் மோடம் படம் கிடைக்கலை.



முதல்லே ஒரு தேர்வா இருந்த விஷயம் அப்புறமா வழக்கமா ஆயிடுத்து. கணினிக்குள்ளேயே மோடம் வெச்சு விக்க ஆரம்பிச்சுட்டாங்க. (அதான் இது.நன்றி எல்கே! இது இன்டர்னல் மோடம். அதான் ட்ரெஸ் போட்டுக்காம இருக்கு!)


இப்ப அநேகமா எல்லாமே ப்ராட் பேண்ட்தான். நடுவிலே ஐஎஸ்டிஎன் ந்னு ஒண்ணு வந்தது தெரியலை போனது தெரியலைன்னு பழைய ஹீரோ படம் மாதிரி காணாம போயிடுத்து! அப்புறம் கேபிள் டிஎஸெல்; ஏடிஎஸெல்.

மோடம் சீரியல் போர்ட் லே இணைக்கறதா இருக்கலாம்; இல்லை யூஎஸ்பி இணைப்பா இருக்கலாம்;  லான் லே இணைக்கறதா இருக்கலாம்.



இந்த படத்துல புத்திசாலித்தனமா செஞ்சு இருக்கிற விஷயத்தை பாருங்க. முதல்லே இந்த லான் வயர் வந்தப்ப இந்த குல்லா இல்லை. கண்ணாடி மாதிரி தெரியற பகுதியை  போர்ட்லே சொருகிட்டா அது க்ளிக் ந்னு போய் உக்காந்துக்கும். திரும்ப எடுக்கறதுக்கு மெனெக்கெடணும். சுலபமா கழலாம இருக்க அப்படி அமைப்பு. கண்ணாடி லீவர் மாதிரி தூக்கிக்கிட்டு இருக்கிறதை அமுக்கி லாக் ரிலீஸ் பண்ணி எடுக்கணும். பலரும் பொறுமை இல்லாமலோ இல்லை அறியாமலோ பிடுங்கி அதை உடைச்சுகிட்டு இருந்தாங்க. இப்ப அதுக்கு மஞ்ச கலர்லே குல்லா போட்டு இருக்கு பாருங்க! வயரை பிடுங்கப்பாத்தா ஆட்டோமேடிக்கா அதை அழுத்தவும் செய்வோம். அப்படி ஒரு தொளில் நுணுக்கம்!




மேலே ஏடிஎஸ்எல் மோடம், முன்னும் பின்னும்.

மேலும் வயர்ட், வயர்லெஸ் ந்னு இருக்கலாம்.கொம்பு மாதிரி நீட்டிகிட்டு இருக்கே அதனால இது வயர்லெஸ் உம் இருக்கு. லான் போர்ட் - ஈதர்நெட் உம் இருக்கு.




இப்ப கொஞ்ச நாளா 3ஜி வந்த பிறகு
வயர்லெஸ் மொபைல் மோடம் விக்கிறாங்க. பார்க்க இது ஒரு பென் ட்ரைவ் மாதிரி இருக்கும். இப்போதைக்கு வயர்லெஸ் இணைப்பு வேகம் வயர் இணைப்பை விட கம்மிதான்.



அப்புறம் மோடம்ன்னதும் நினைவு வந்தது.
இங்கே போய் படியுங்க: http://tinyurl.com/2uqbuxq
சரியா தெரியலைன்னா பயர்பாக்ஸ்லே அதியன் நீட்சியை பயன்படுத்தி பாருங்க.
தினசரி பாராயணம் பண்ணி பயன் பெறுக! :-)))))))

12 comments:

  1. link edukka mudiyalaiye?? :( thirumba parathu sari pannunga!

    ReplyDelete
  2. நல்லா எழுதறீங்க. ஆர்வத்துடன் படித்து வருகிறேன்.

    ReplyDelete
  3. athai copy paste paNNungka!
    link aa kotukkalai

    ReplyDelete
  4. தம்பி வாசுதேவன், நம்ம மோடம் இப்ப ப்ராட்பாண்ட் வந்தப்புறம் மாறினாலும் எதிர்பார்க்கிற நேரம் காலை வாரிவிட்டுடறது. அவர்கள் கிட்டயே கேட்டேன். இணையம் கிடைக்கறது இல்ல? அப்ப எங்க மோடம் பிரச்சினை இல்ல. உங்க கணினி தான் தப்பு செய்யறதுன்னு சொல்கிறார்கள். ஹ்ம்ம்ம்:)

    ReplyDelete
  5. http://www.microgateindia.net/uimg/56K_Internal_Modem.jpg

    internal modem padam

    ReplyDelete
  6. அக்கா, மொத்தத்திலே கனெக்ட் ஆனா சரி. அப்புறம் ஏன் வேகம் இல்லை என்கிறதுக்கு பல காரணங்கள். அவங்க பக்கம் நிறைய இணைப்பு கொடுத்துட்டா மொத்த இணைப்பிலே நம்ம பங்கு குறைவாகிடும். அதுக்கு ஒண்ணும் செய்ய முடியாது. பொலிடிகல் ப்ரெஷர்லே கொடுத்துடுவாங்க!;

    ReplyDelete
  7. எல்கே நன்றி. சேர்த்துடறேன்.

    ReplyDelete
  8. internal modemum network connectionkku than illaiya?? அப்புறம் lan cardம் அதுக்குத் தானே?? இரண்டில் ஒன்று இருந்தால் போதுமா? அல்லது இரண்டுமே வேண்டுமா?? வெளியே modem/router எது இருந்தாலும் லான் கார்டை அதில் இணைக்கிறோம். உள்ளே மோடம் இருந்தால் இணைய இணைப்புக்குத் தொலைபேசியில் இணைச்சால் போதுமா? தொலைபேசியில் பேசும்போது தொந்திரவு இல்லாமல் இருக்குமா? அல்லது தொலைபேசியின் கேபிளை மட்டும் இணைக்கலாமா??

    ReplyDelete
  9. athai copy paste paNNungka!
    link aa kotukkalai..

    grrrrrrrrrrrrr

    தம்பி வாசுதேவன், நம்ம மோடம் இப்ப ப்ராட்பாண்ட் வந்தப்புறம் மாறினாலும் எதிர்பார்க்கிற நேரம் காலை வாரிவிட்டுடறது. அவர்கள் கிட்டயே கேட்டேன்//
    வல்லி சொல்றது சரிதான், இன்னிக்குக் காலம்பர இணைக்கவே முடியலை! :)))))))) நம்ம ராசியோனு நினைச்சேன். துணைக்கு ஆள் இருக்கிறதைப் பார்த்தா சந்தோஷமா இருக்கு!

    ReplyDelete
  10. இன்டர்னல் மோடம்பத்தி சொன்னது அந்ந்ந்ந்ந்த கால டயல் அப் பத்தி.
    இப்ப ப்ராட்பேண்ட் மோடம் வெளியெதான் இருக்கும். அதிலேதான் லான் (local area network) இணைப்பு கொடுக்கிறோம். அதாவது நம்ம கணினி சர்வீஸ் ப்ரொவைடரோட வலையில ஒரு அங்கமாயிடும்!

    ReplyDelete
  11. டயல் அப் லே கனெக்ட் பண்ணா போன் பேச பயன்படுத்த முடியாது.ப்ராட் பேன்ட் லே இந்த பிரச்சினையை தவிர்க்க ஒரு ஸ்பிட்டர் கொடுக்றாங்க. அதனால் போன் மோடம் ரெண்டுமே ஏக காலத்தில வேலை பண்ணும்.
    வேகம் இல்லைன்னு தோணினா பழைய கனெக்ஷன்னா இணைக்கிற டெர்மினலை கழட்டி ஒரு ரப்பர் - ஆமாம் பென்சிலோட பயன்படுத்தற ரப்பர்- போட்டு தேய்ச்சு திருப்பி மாட்டிப்பாருங்க.

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!