Monday, November 29, 2010

ctrl N C V A X Z

"ப்ரின்ட்" மேலே சொடுக்கும் போது கவனிச்சு இருப்பீங்க. பக்கத்திலேயே ctrl+Pன்னு எழுதி இருந்து இருக்கும். விண்டோஸ் நமக்கு என்ன சொல்லுதுன்னா நீங்க செய்ய நினைக்கிறதுக்கு ஒரு சுருக்கு வழி இருக்கு; ctrl விசையையும் கூட அதே நேரத்தில P எழுத்து விசையையும் அழுத்தினா இந்த கட்டளை வேலை செய்யும். இப்ப செய்து பாருங்க. Ctrl விசை எங்கே இருக்கு? இடது கீழ் கோடியிலே இருக்கு. வலது பக்கமும் ஒண்ணு இருக்கு. ரெண்டுத்துலே எதை வேணுமானா அழுத்தலாம்.

அட சுலபமா இருக்கே! இதுக்கு மெனுவை திறந்து அவஸ்தை பட வேண்டாமே! ஆமாம், நிரல்ல இருந்தா போதும் பல சுருக்கு வழிகள் இருக்கு. ஒரு சின்ன பட்டியல் பார்க்கலாமா?
ctrl+N new புதுசா ஒரு கோப்பை துவக்க.
ctrl+O open ஒரு கோப்பை திறக்க
ctrl+S save மாற்றங்களை சேமிக்க
ctrl+C copy தேர்ந்தெடுக்கறதை பிரதி எடுக்க
ctrl+X cut தேர்ந்தெடுக்கறதை வெட்ட
ctrl+V paste ஒட்ட
ctrl+F find தேட
அது சரி வெட்ட ஒட்ட இதெல்லாம் என்னது?
எல்லாத்தையும் மெதுவா பார்க்கலாம்.இப்ப லிஸ்ட்டை நாலு தரம் படிங்க!

இப்ப greatest.txt திறந்து வெச்சு இருக்கு இல்லையா? ctrl+N அழுத்துங்க. அதாவது ctrl விசையையும் N எழுத்து விசையையும் ஒரே நேரத்துல அழுத்துங்க. (இந்த ஒரே நேரத்துல அழுத்தறது என்பது இப்ப பிடிபட்டு போச்சில்ல?) விண்டோஸ் புதுசா ஒரு நோட்பேட் கோப்பை துவக்கிடும். அதில நம்ம எக்ஸைட்மென்ட்டை காட்ட டைப் அடிங்க! This is simply fantastic! ஹும்! ஒரு தரம் எழுதினா போதுமா? பத்து தரமாவது எழுதத்தோணுதே! மாஞ்சு மாஞ்சு பத்து தரம் எழுத வேணாம். இன்னும் சுலபமான வழி ஒண்ணை கொஞ்சம் பொறுமையா கத்துக்கலாம்.

2 comments:

  1. அழுத்தின அழுத்தல்லே கை சுளுக்கிக்கும். :P

    ReplyDelete
  2. ரொம்ப அழுத்தத்தில இருக்கிங்க போல இருக்கு!

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!