Tuesday, December 21, 2010

டாரண்ட்...

டாரண்ட் லே தரவிறக்கறதைப்பத்தி பாத்தோம்.
இது ரொம்ப நல்ல வசதின்னாலும் பயன் படுத்தறது ஒரு மாதிரி இருக்கு. அது நல்லதா/ கெட்டதா, சரியா/ தப்பா ன்னு அவரவர்தான் முடிவு பண்ணிக்கணும்.
கூகுளாரை டாரன்ட் பத்தி கேட்டா பல தொடுப்புகள் கொடுப்பார். போய் பாத்தா ஆச்சரியமா இருக்கலாம். அங்கே லேட்டட்ஸ்ட் சினிமா படத்துலேந்து கணினி விளையாட்டு, இசை, விடியோ, டிவி நிகழ்ச்சிகள், மென்புத்தகம், படங்கள், காமிக்ஸ்  .....மென்பொருள் வரை எல்லாமே கிடைக்கும். காப்புரிமை மீறுவதா ஒரு புகார் எப்பவுமே இருந்துகிட்டு இருக்கு. பதிலுக்கு கேட்கிறாங்க: ஒரு புத்தகம் உங்ககிட்டே இருக்கு. கொஞ்சம் படிச்சுட்டு கொடுக்கிறேன் ன்னு யாரும் கேட்டா கொடுக்கிறோமா இல்லையா? ஒரு சிடி யை பாக்க கேட்க கொடுக்கிறோமா இல்லையா? அது போலத்தான் ஒரு கோப்பை பரிமாறிக்கறோம். இது தனிப்பட்ட நபர் - நபர் பரிவர்த்தனை. இதை கேள்வி கேட்க முடியாது. இது சட்ட விரோதம்  இல்லை என்கிறாங்க. பரிமாற்றம் சட்ட விரோதம் இல்லை. ஆனா உடைக்கப்பட்ட மென்பொருட்கள் நிறுவறது சட்ட விரோதம் இல்லையா?
சரி சரி தேடி இறக்கின கோப்பை நிறுவலாமான்னு நீங்க முடிவு பண்ணிக்கோங்க!
இருந்தாலும் இதில சில ஏமாற்றங்கள் இருக்கும்!
லேட்டஸ்ட் படம்ன்னு சொல்லி பழைய படத்தை ஏத்திவிடுவாங்க! கூடவே இலவச இணைப்பா ஒரு வைரஸும் வரும்!
தரவிறக்கினதை எப்பவுமே வைரஸுக்கு சோதிக்காம திறக்காதீங்க! இது பொதுவான விதி! கோப்பை வலது சொடுக்கினா வைரஸ் சோதனைக்கு தேர்வு வரும். சோதிச்சு பார்த்தே திறக்கவும். சோதிச்சு பார்த்தே திறக்கவும். என்ன தப்பா ரெண்டு தரம் எழுதிட்டேன்ன்னு நினைக்கிறீங்களா? :-) இதை எவ்வளோ தரம் சொன்னாலும் போதாது! அதான்!
பின்ன இந்த போலிகளை எப்படி கண்டு பிடிக்கிறது? சாதாரணமா இந்த டாரண்ட் தர எல்லா தளங்களிலுமே தரவிறக்கினவங்க விமரிசனம் செய்ய ஒரு வசதி இருக்கும். அங்கே போய் தரவிறக்கினவங்க என்ன சொல்லறாங்கன்னு பார்க்கணும். நாலஞ்சு பேராவது இது நல்லா இருக்குன்னு சொல்லனும். தரவு ஏத்தினவர் ஒத்தர் நல்ல இருக்குன்னு சொல்லிடுவார். அவரே இன்னொரு ஐடி லேந்து திருப்பியும் நல்லா இருக்குன்னு சொல்லுவாரா இருக்கும்! அதனாலதான் 4-5 பேராவதுன்னு சொன்னேன்!
சில சமயம் தரவிறக்கின பிறகு இதை திறக்க இவ்வளோ டாலர் கொடுத்தா விசை தரேன்ன்னு சொல்லும். சில சமயம் படத்தை பார்க்க இந்த மென்பொருள்தான் தரவிறக்கி பார்க்கணும்ன்னு சொல்லும். இதெல்லாமும் நடக்கும்.
இந்த மாதிரி கோப்புகளெல்லாம் பெரிசு என்கிறதால உங்களுக்கு இலவச நெட் நேரம் கொடுத்து இருந்தா அந்த நேரத்திலே தரவிறக்குங்க. இது கொடுக்கல் வாங்கல் சமாசாரம் என்கிறதால 100 எம்பி தரவிறக்க 200 எம்பி போல நெட் கோட்டா காலி ஆகிடும்ன்னு நினைவு வெச்சுக்கோங்க!
எந்த மென்பொருளை தரவிறக்கணும்னாலும் அந்த மென்பொருளோட மூல தளத்திலேந்தோ (அதாவது அடோபி ப்ளாஷ் அடோபி தளத்திலேந்து மாதிரி) சிநெட் டூகவ்ஸ் மாதிரி தரவிறக்க தளங்களிலேந்தோ தரவிறக்குங்க. அவங்க சோதித்துத்தான் தரவிறக்க தருவாங்க.

5 comments:

 1. ம்ம்ம்ம், பேசாம எதுவுமே தரவிறக்காம இருந்தால் பிரச்னையே இல்லை! :))))))) எதுக்கு வம்பு??

  ReplyDelete
 2. ஆமாம் க்யூரியாசிடி கில்ட் த கேட் பாங்க!
  ஒண்ணும் தரவிறக்காட்டா ஒண்னும் பிரச்சினை இல்லை. இருந்தாலும் வேற உலாவி, பல பயன்பாடுகள்ன்னு வேண்டி இருக்கே!
  சும்மாவான தரவிறக்காம தேவையான போது தேவையானதை மட்டும் தரவிறக்கறது நல்லது!

  ReplyDelete
 3. என்ன ஆச்சு? வெள்ளம் இன்னும் வடியலையா?? :P

  ReplyDelete
 4. வடிஞ்சாச்! போஸ்ட்டும் போட்டாச்!

  ReplyDelete
 5. ரெண்டரை மணி நேரத்திலே பத்து சென்டி மீட்டர் மழை!

  ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!