Wednesday, January 5, 2011

பெரிய எழுத்து விக்கிரமாதித்யன் கதை.... 2

கன்ட்ரோல் பானல்> டிஸ்ப்லே> அட்வான்ஸ்ட் வழியா போனா கிடைக்கிற சாளரத்திலே ஐடம் ன்னு இருக்கு பாருங்க. அதிலே கீழ் நோக்கிய அம்புக்குறியை சொடுக்கி ஒவ்வொண்ணா தேர்ந்தெடுத்து, அதுக்கு கீழே இருக்கிற பொட்டில எழுத்துரு அளவை மாத்திக்கலாம்.

From magnification

இங்கே விண்டோஸ் சாளரத்தோட ஒவ்வொரு இடத்திலும் எழுத்து அளவு என்ன இருக்கணும் ன்னு நிர்ணயிக்கலாம். செட்டிங்க்ஸ் இப்படி இருக்கலாம். தேவையானபடி மாத்திக்குங்க.

Format:    Item -    Size -    Font -              Font Size

Active Title Bar -     22 -   Trebuchet MS -   11
Icon -                       32 -   Tahoma -             10
Inactive Title Bar -  22 -   Trebuchet MS -   11
Menu -                    19 -   Tahoma -              10
Palette Title -          19 -   Tahoma -               9
Selected Items -      19 -   Tahoma -             10

ம்ம்ம்ம் .... இங்க பான்ட் அளவை மாத்துங்க. அவ்வளோதான். கணினி முழுக்க இருக்கிற எல்லா எழுத்துக்களும் பெரிசாவே தெரியும். அதுக்குன்னு மானிட்டர் மேலே சாம்சங்க் ன்னு எழுதி இருக்கிறது பெரிசா தெரியலைன்னு புகார் சொல்லக்கூடாது.

இன்னொரு விஷயம் டெஸ்க்டாப் தீம் ஐ மாத்தினா இது காணாம போயிடும். எல்லா டெஸ்க்டாப் தீம் உம் இப்படி பல எழுத்து அளவுகளை அனுமதிக்கும்ன்னு சொல்ல முடியாது.

இவ்வளவு செஞ்சும் உங்களுக்கு திரையில் இருக்கிறதை சரியா பார்த்து படிக்க முடியலைன்னா விசேஷ உதவி உங்களுக்கு தேவை. இதுக்கு ஆக்ஸ்ஸபிலிடி ஆப்ஷன்ஸ் ன்னு பெயர்.
Start➪Control Panel➪Accessibility Options.
use high contrast ஐ தேர்ந்தெடுங்க. பக்கத்திலே செட்டிங்க்ஸ் சொடுக்கினால் படத்திலே வலது பக்கம் தெரிகிற தேர்வுகளை பார்க்கலாம். ஒவ்வொண்ணா பரிசோதிச்சு எது சரி வருதோ அதை வெச்சுக்கலாம்.

From magnification


இரண்டாவதா ஒரு சின்ன பூத கண்ணாடி உதவியோட பார்க்கலாம். இல்ல இல்ல, நீங்க கடைக்கு போய் வாங்க வேணாம். எக்ஸ்பி யே ஒண்ணு வெச்சு இருக்கு. start ➪ Programs ➪ accessories ➪ accessibility ➪ Magnifier

From magnification

திரையின் மேலே ஒரு சென்டிமீட்டர் அளவில ஒரு பட்டை தெரியும். அதுல நம்ம சொடுக்கி எங்கெல்லாம் போகுதோ அந்த இடம் பெரிசா காட்டப்படும். இதை தேவையான படி மாத்திக்கலாம். படத்தை பாருங்க.

From magnification

பயர்பாக்ஸ் உலாவியிலே நோஸ்கிவின்ட் ன்னு ஒரு நீட்சி இருக்கு. சௌகரியப்படி உரை அளவை மட்டுமோ; உரை படம் அளவுகளையோ, ஒரு குறிப்பிட்ட தளத்துக்கோ, எல்லா தளங்களுக்குமோ அமைச்சுக்கொள்ளலாம். பின்னணி முன்னணி கலரைக்கூட மாத்திக்கலாம்!
இதை எல்லாம் பயன்படுத்தி கணினியை கண் பார்வை குறைந்த பெரியவங்களும் பயன்படுத்த முடியும்.

2 comments:

  1. இரண்டாவதா ஒரு சின்ன பூத கண்ணாடி உதவியோட பார்க்கலாம். இல்ல இல்ல, நீங்க கடைக்கு போய் வாங்க வேணாம். எக்ஸ்பி யே ஒண்ணு வெச்சு இருக்கு. start ➪ Programs ➪ accessories ➪ accessibility ➪ Magnifier //

    இலவசம் கொடுக்குதா?? :P சரியாப் போச்சு போங்க, இங்கேயுமா??? :)

    ReplyDelete
  2. இலவசமா? காசு கொடுத்து விண்டோஸ் வாங்கலை? :P

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!