Tuesday, January 4, 2011

பெரிய எழுத்து விக்கிரமாதித்யன் கதை....

ம்ம்ம் ... எல்லாம் நல்லா இருக்கு. ஆனா இந்த திரையைத்தான் சரியா பாக்க முடியலேன்னு புலம்பறவங்களுக்கு இந்த பதிவு. லீகல் டாகுமென்டோட பைன் ப்ரின்ட் எல்லாம் சர்வ சாதாரணமா கண்ணாடி இல்லாம படிச்சது ஒரு காலம். இப்ப கண்ணாடி போட்டும் சரியா தெரியறதில்லை. ம்ம்ம் எல்லாம் காலத்தின் கோலம். போகட்டும். சரியா பாக்க முடியலேன்னு ஒத்துக்கிட்டா பாதி பிரச்சினை சால்வ்ட். எனக்கு வயசாகலைன்னு பிடிவாதம் பிடிக்கிறவங்களுக்குத்தான்.... சரி சரி மேலே படிக்கலாம். எழுத்துக்களையும் மத்தத்தையும் பெரிசா பார்க்க பின் வர செய்தியை பாத்து செய்யுங்க.
ரொம்ப சுலபமா ரெசொலூஷனை குறைச்சா எல்லாமே பெரிசாகிடும். எப்படி செய்யறதுன்னா;
மேல்மேசை மேலே வலது சொடுக்கு > ப்ராபர்டீஸ் > செட்டிங்ஸ்
இங்கே நடுவிலே இடதுபக்கமா ஸ்க்ரீன் ரெசொலூஷன் ன்னு இருக்கு பாருங்க. அதில இருக்கிற பட்டனை பிடிச்சு இடது பக்கமா இழுங்க. என்ன தேர்வு கிடைக்கும் என்கிறது உங்க மானிட்டரை பொருத்தது. அதை இழுத்த பிறகு எப்படி இருக்குன்னு பார்க்க வலது கீழ் கோடியிலே அப்ளை ன்னு இருக்கீற பொத்தானை சொடுக்குங்க. உடனே திரை மாறிடும். இது உங்களுக்கு பிடிச்சா வெச்சுக்குங்க. இல்லைன்னா விடுங்கன்னு சொல்லும். சரியா தோணித்துன்னா யெஸ் பொத்தானை அழுத்த இந்த ரெசொலூஷனை அமைச்சுடும்.








இந்த ரெசொலூஷன் சமாசாரம் சிஆர்டி மானிட்டர்லதான் எதிர்பார்த்தபடி வேலை செய்யும். எல்சிடி மானிட்டர் ன்னா எப்படி தெரியும்ன்னு படத்தில பாருங்க. எழுத்தெல்லாம் கண் அராவியா போயிடும்!


ரெசொலூஷன் அப்படியே இருக்கட்டும். எனக்கு எழுத்து மட்டும் பெரிசா தெரிஞ்சா போதும்ன்னு நினைச்சா:
மேல்மேசை மேலே வலது சொடுக்கு > ப்ராபர்டீஸ் > அப்பியரன்ஸ்> ... இடது பக்கம் கீழே பான்ட் சைஸ் ன்னு இருக்கே அந்த பொட்டியை கீழே இழுத்து லார்ஜர் பான்ட்ஸ் ன்னு தேர்ந்தெடுத்து அப்புறமா அப்ளை பொத்தானை அழுத்துங்க.


இது போதும்ன்னா நல்லது. இல்லை சிலது மட்டுமே மாறுது. மத்த எழுத்தெல்லாம் அப்படியே இருக்குன்னா:
மேலே படத்திலே கீழே வலது பக்கம் தெரிகிற அட்வான்ஸ்ட் அப்பியரன்ஸ் தேர்ந்தெடுங்க.





DPI அளவை அதிக்கப்படுத்தினா எழுத்துக்கள் இன்னும் நல்லா தெரியும்.

எல்சிடி மானிட்டர்ல எழுத்துக்கள் இன்னும் நல்லா தெரிய க்ளியர் டைப்புன்னு ஒரு வசதி இருக்கு. அதையும் வசதியா சரி செஞ்சுக்கலாம்.
Start➪Control Panel➪Appearance and Personalization
இங்கே கீழே அட்ஜஸ்ட் க்ளியர் டைப் செட்டிங்க் ன்னு இருக்கு பாருங்க. அதை சொடுக்குங்க. இப்ப ரெண்டு பொட்டி தெரியுதா?



 இதிலே எந்த பொட்டியில எழுத்து நல்லா தெரியுதுன்னு பாத்து அத சொடுக்குங்க. இப்ப திருப்பியும் வேற ரெண்டு பொட்டி தெரியும். இப்படியே 2-3 தரம் செஞ்சா நமக்கு பிடிச்ச மாதிரி எழுத்து தெரியும்.
இது பழைய சிஆர்டி மானிட்டருக்கு பொருந்தாது.

4 comments:

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!