Monday, January 17, 2011

இன்னும் ஸ்கைபி...

என்ன காணும் பொங்கலுக்கு கொ.பே./கொ.பே கூட எல்லாம் அரட்டை அடிச்சீங்களா?

கீழே இருக்கிற பதிவில யாரையும் நினைச்சுகிட்டு எழுதலைன்னு ஒரு டிஸ்கி முதல்ல போட்டுக்கிறேன்.

ஆரம்பத்திலே கொஞ்சம் கண்ணை கட்டி காட்டில விட்டாப்போல இருக்கும்தான். பிரச்சினையை சரி பண்ண இரண்டு பக்கமும் வழி இருக்கிறதால கொஞ்சம் சௌகரியம். விடியோ சாட் வரலைன்னா அப்படியே கீழே டெக்ஸ்ட் சாட் ல என்னப்பா செய்யணும்ன்னு கேட்டு சரி செஞ்சுக்கலாம். ஏதோ குழப்பம் விடியோ இல்லாம போயிடுத்து, ஆடியோ இல்லாம போயிடுத்துன்னா சங்கரி பாப்பாவை கூப்பிடவும் முடியலைன்னா பேசாம கால் ஐ துண்டிச்சுடலாம். அப்புறமா அவங்க திருப்பி கூப்பிடலாம் இல்லை நாமே கூப்பிடலாம்.

சாதாரணமா பிரச்சினை இருக்கறதில்லை. ஆடியோ அமைப்பு வேணா சரி செய்ய தேவை இருக்கலாம்.ஸ்பீக்கர், ஹெட்போன் இவற்றில சரியான தேர்வு இல்லாம போகிறதே வழக்கமா பிரச்சினை.

லாப்டாப்பிலே ஸ்கைபி ரொம்ப சௌகரியம். கூட வயர்லெஸ் மோடம் இருந்துடுத்துன்னா இன்னும் சௌகரியம். லாப்டாப்பயே இடத்துக்கு இடம் கொண்டு போய் படுத்த படுக்கையா இருக்கிற நம்ம (தொ.கி க்கு) அப்பா அம்மா வை "பார் உன் எள்ளு பேத்தியை" ன்னு காட்டலாம். அது பாட்டீ ன்னு கொஞ்சறதை கேட்டு அப்படியே உருகி போயிடுவாங்க. இட் இஸ் வொர்த் இட்!
வீட்டிலே வெச்சு இருக்கிற கொலுவை காட்டலாம். அவங்களும் அங்கிருந்து பாட்டு பாடி ஈ சுண்டல் வாங்கிக்கலாம். வீட்டு கன்னுக்குட்டி, நாய்குட்டி பூனைக்குட்டி எல்லாம் பாத்து கொஞ்சலாம். அட மல்லிச்செடி பூத்துடுத்தேன்னு ஆச்சரியப்படலாம். எனக்கு தெரிஞ்சு சிலர் விடிகாலை நெட் சார்ஜ் ஃப்ரீ நேரத்தில குழுவா சாஸ்திரப்பாடம் கேட்டுண்டு இருந்தாங்க. ஆமாம் க்ரூப் சாட்டிங்க் கூட முடியும்.

ஆரம்பத்திலே சுவாரசியமா இருந்து அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அலுத்து போயிடலாம். என்னடா இந்த கிழம் வந்து அடிக்கடி தொந்திரவு பண்ணறதுன்னு கொ.பே க்கள் நினைக்கலாம். திடீர்ன்னு பாத்தா நாம ஸ்கைபிலே லாக் பண்ணா அவங்க பேர் எதிரே ஒரு விளக்கும் வராது. அவங்க இணையத்திலே இல்லைன்னு அர்த்தமில்லே. ஏன் ஸ்கைபியிலே இல்லேன்னு கூட அர்த்தம் இல்லை. அவங்க ஒளிஞ்சுண்டு இருக்காங்கன்னு அர்த்தம். நாம விடுவோமா! அப்ப கூட அவங்க பேர் மேலே சொடுக்கி ஒரு சாளரத்தை திறந்து ஹலோ ஒளிஞ்சுண்டு இருக்கயான்னு கேப்போம்! ஹும், யாருன்னு நினைச்சே!

ஸ்கைபியிலே நாம நம்ம நிலையை காட்டறதுக்கு வசதி இருக்கு.  எல்லாம் பச்சை - ஓகே அரட்டைக்கு தயார். அதுல சிவப்பு வட்டம் - பிஸியா இருக்கேன், அப்புறம் பேசலாம். இந்த பச்சையிலேயே இன்னும் சில நிலைகள் இருக்கு. அது கொஞ்சம் குழப்படிதான். ஸ்கைபிமீ ன்னா உங்க பேரை தேடின யாரும் உங்களோட அரட்டை அடிக்கலாம். அவே என்கிறது கணினியை திறந்து வெச்சுட்டு டிபன் சாப்பிட போறவங்களுக்கு. இந்த நிலையில சாட், அழைப்பு எல்லாத்துக்கும் அறிவிப்பு வரும். நாட் அவைலபிள் ன்னா டிபன் சாப்பிட போன ஆசாமி அப்படியே எங்கேயோ போயிட்டார்ன்னு அர்த்தம். மத்தபடி இது அவே மாதிரிதான். என்ன வித்தியாசம்ன்னா ஸ்கைபி தானே இத்தனை நேரத்துக்கு அப்புறம் அவே ன்னு அமைச்சுடும். இன்னும் நேரம் போச்சுன்னா நாட் அவைலபிள் ன்னு சொல்லிடும். அவ்வளோதான்.




இதெல்லாம் இல்லாம இன்விசிபிள் ன்னு ஒரு தேர்வு இருக்கு. இதில இருக்கும்போது நாம ஒரு அரட்டையை துவக்கலாம். அது இணைப்பிலே இருக்கிற மத்தவங்களுக்கு நாம் இணைப்பிலே இருக்கிறதை காட்டாது. நாம் யாருக்கு செய்தி அனுப்பறோமோ அவங்களுக்கு மட்டும் போகும்.

இது அநியாயம்ன்னு தோணினா சில விதிகளை கடைப்பிடிக்கணும்.

சிவப்பு விளக்கா இருந்தா அவசரம்ன்னா ஒழிய அவங்களை அரட்டைக்கு கூப்பிடக்கூடாது. சந்தேகமா இருந்தா ஒரு அஞ்சல் அனுப்பி சாட் பண்ண நேரம் இருக்கான்னு தெரிஞ்சுக்கணும். இதெல்லாம் வலை நன்னடத்தைகள்.

10 comments:

  1. சரி, சரி, நல்லா இருக்கு, இதுவும், ஆனா இது எல்லாமே தெரிஞ்சதா இருக்கு, அதான்! :P

    ReplyDelete
  2. அப்பாடி இன்னிக்கு follow up option சரியா வந்திருக்கு. தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  3. ம்ம்ம் உங்களுக்கு தகுந்தபடி போஸ்ட் போட இடம் இல்லை. இது தொண்டுகிழங்களுக்குத்தானே? உங்களுக்கோ வயசு குறைஞ்சுகிட்டே போகுது!:P:P

    ReplyDelete
  4. http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_23.html

    ReplyDelete
  5. நன்றி எல் கேஎ. என்ன, போன வாரம் முழுக்க எக்கச்சக்க வேலையா போச்சு. எதுவும் படிக்க எழுதக்கூட முடியலை. குறிப்பா வார கடைசியிலே! அப்புறமா சேத்து வெச்சு படிக்கிறேன்.

    ReplyDelete
  6. வாங்க புலிகேசி! நல்வரவு.

    ReplyDelete
  7. கீழே இருக்கிற பதிவில யாரை நினைச்சுகிட்டு எழுதலைன்னு ஒரு டிஸ்கி முதல்ல போட்டுக்கிறேன்//

    hahahahaha, இப்போத் தான் வி.எ. ஊத்திட்டு வந்தேனா, இங்கே "யாரை நினைச்சுக்கிட்டு" என்ற இடத்திலே யாரையும் நினைச்சுக்கிட்டு" என்று வந்திருக்கணும் இல்ல?????

    ReplyDelete
  8. ரிவிஷன் பண்ணினதிலே கண்டு பிடிச்ச தப்பு! :P

    ReplyDelete
  9. சரி சரி கண்டுக்காதீங்க!

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!