Tuesday, June 7, 2011

உதவி -2 -கூகுள் தேடல்...

உதவி கணினில எப்படின்னு பார்த்தோம்.
கணினில இருக்கிற ஹெல்ப் பக்கங்களில எல்லாத்துக்கும் உதவி இருக்கும்ன்னு சொல்ல முடியாது. பின்ன என்ன செய்யரதாம்? இருக்கவே இருக்கார் கூகுளார்! (சரி சரி உங்களுக்கு பிடிச்சு இருந்தா யாஹூ யார், பிங் யார் ன்னு சொல்லிக்குங்க!)
பொதுவா கூகுள் தேடலை பார்க்கலாம். உதவி வேறு ஒண்ணுமில்லை. என்ன பிரச்சனையோ அதை அப்படியே ஒத்தர்கிட்ட கேட்கிற மாதிரி டைப் அடிக்க வேண்டியதுதான்.

From google search

முதல் படத்தில பாருங்க! டைப் அடிக்கும்போதே அடுத்து என்ன வரலாம்ன்னு ஊகிச்சு காட்டுது. ஹெர்பிஸ் பத்தி தேடப்போய் அதுகாட்டும் பக்கத்தையும் இடது பக்கம் இருக்கிற தேர்வுகளையும் பாருங்க.

From google search

ஹெர்பிஸ் பத்தி படங்கள் வேணும்ன்னா அதையும் கொடுக்கும்; இடது பக்கக் தேர்வுகளில இமேஜஸ் சொடுக்கினா போதும்.

From google search

விடியோ வேணுமானா அதுவும் கொடுக்கும்.

From google search

மேலும் இருக்கிற தேர்வுகளையும் பாருங்க:

From google search

தமிழ்லேயும் தேடலாம்.தமிழ்ல டைப் அடிங்க, அவ்வளோதான்!

From google search

இதே போலத்தான் நமக்கு வேண்டிய தகவலும்.
அடிக்கடி வர ஒரு ஒரு பிழை செய்தி எரர் 404. கூகுள்ல எரர் 404ன்னு ஆங்கிலத்துல டைப் அடிங்க.

From google search

பதில் கிடைக்குது பாருங்க:
From google search

நம்ம பிரச்சினையை எளிதா டைப் பண்ணி பார்க்கலாம்.

From google search

அட பதில் வருது!

From google search

இன்னும் ஒண்ணு:

From google search

கூகுள் ஊகிக்காட்டா விடை இருக்காதுன்னு இல்லை. இதை பாருங்க, ஊகம் இல்லைன்னாலும் தட்டின பிறகு விடை வருது!

From google search

From google search

இதுல எங்காவது நமக்கு வேண்டிய விடை இருக்கும். ஒவ்வொண்ணா பார்த்தா விடை கிடைச்சுடும்.

எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமா வார்த்தைகள் உள்ளிடறோமோ அவ்வளவு அதிகமா நமக்கு வேண்டியது கிடைக்க சான்சஸ் இருக்கும்.

உதவி கிடைக்க இன்னும் வேற வழியும் இருக்கு. அடுத்த பதிவிலே பார்க்கலாம்.


7 comments:

  1. வரவர கூகிள் இருக்க பயமேன் சொல்ல ஆரம்பிச்சாச்சு எல்லாரும்... truly very handy

    ReplyDelete
  2. பாதி டெக்னிகல் கால் சென்டர் பொழப்பு ஓடறதே கூகிள் உதவியில்தான்

    ReplyDelete
  3. எல்கே, க்ளையண்ட் knowledge base ஒண்ணும் கொடுக்க மாட்டாங்களா?

    ReplyDelete
  4. சமயத்திலே கூகிளார் பொய்யும் சொல்லுவார். :P

    ReplyDelete
  5. ஏடிஎம்! கூகுள் தேவதா ன்னு சொல்லறவங்க நிறைய பேர்! :-))))

    ReplyDelete
  6. கீதக்கா என்ன சொல்லறோமோ அதேதான் கிடைக்கும்! :P:P:P:P

    ReplyDelete
  7. வணக்கம்.தங்களின் பதிவுகளை பற்றி வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன், நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!