Friday, 24 June, 2011

சொடுக் சொடுக்!

ரைட்! தொ.கி எல்லாரும் நிமிர்ந்து உக்காருங்க!
இன்னிக்கு நம்ம நமக்கு ரொம்ப பயனாகக்கூடிய ஒரு மென்பொருள் விஷயத்தை பார்க்கப்போறோம்.
இந்த சின்னப்பசங்களோ கிடுகிடுன்னு சொடுக்கியால சொடுக்கிக்கிட்டே போறாங்க. நமக்கோ அது கொஞ்சம் சேலஞ்சிங் ஆவே இருக்கு. சொடுக்கப்போனா சொடுக்கி -அதாங்க - மௌஸ் நகர்ந்து போயிடுது. ஒரு இடத்தில சொடுக்க நினைச்சது இன்னொரு இடத்தில சொடுக்கினதாயிடுது. ஒரு வஸ்துவை இன்னொரு இடத்துக்கு அழுத்துபோக பாத்தா அது நடுவிலே எங்காவது போய் சேர்ந்துடறது! இல்லை விரல்ல ஆர்த்ரைடிஸ் இருக்கறதால வலிக்குது. இல்லை ஒரு நாளுக்கு எவ்வளோதான் சொடுக்கறது? கணக்கு பண்ணா அது நூத்துக்கணக்கில போகும் போல இருக்கு! மேலும் கார்பல் டனல் சிண்ட்ரோம் மாதிரி நரம்பு பிரச்சினை இருக்கறவங்களூம் கஷ்டப்படுறாங்க. நடு நடுல பாவம் இந்த சொடுக்கியை இவ்வளோ சொடுக்கினா அதுக்கு வலிக்காதான்னு வேற தோணுது!

இப்படி விரல்கள்ல பிரச்சினை, நரம்பு பிரச்சினை, மூட்டு பிரச்சினை, எலும்பு பிரச்சினை, ஹிஹிஹி ... ஏதோ ஒரு பிரச்சினையால சொடுக்கியை பயன்படுத்த கஷ்டப்படறவங்களை உத்தேசிச்சு சில வசதிகள் செஞ்சு இருக்காங்க. லீனக்ஸ்ல இது இலவசமா கிடைச்சாலும் விண்டோஸ்காரங்க, பாவம் பரம ஏழையா இருக்கறதால, அதை விண்டோஸ்ல சேர்க்கலை. வெளியே காசு கொடுத்து வாங்கச்சொல்லறாங்க. ம்ம்ம்ம் அப்படி லேசில விட்டுடுவோமா? தேடித்தேடி இலவச மென்பொருள் ஒண்ணையும் பிடிச்சாச்சு.

முதல்ல உபுண்டுவை பாத்துடுவோம். ஹிஹிஹி! அது விண்டோஸை விட எவ்வளோ நல்லதுன்னு பின்ன எப்பதான் சொல்லறது?
உபுண்டுல எப்படி இந்த வசதியை செஞ்சுகறது? சிஸ்டம்> ப்ரிபெரன்சஸ் > அசிஸ்டிவ் டெக்னாலஜி இதெல்லாம் வரிசையா சொடுக்குங்க... இப்போதைக்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு... அப்புறம் இப்படி சொடுக்க கஷ்டமிராது..

From dwellclick

மௌஸ் ஆக்ஸஸபிலிடி ஐ சொடுக்குங்க....

From dwellclick

இனிஷியேட் க்ளிக் வென் ஸ்டப்பிங் பாய்ண்டர் மூவ்மென்ட் ன்னு தெரியுது இல்ல, அதுல பெட்டில சொடுக்கி ஒரு டிக் மார்க் ஏற்படுத்துங்க. எவ்வளோ நேரம் கழிச்சு அது க்ளிக்கணும், கொஞ்சம் நகர்ந்தா போதுமா இல்லை நிறைய நகரணுமான்னு எல்லாம் இங்கெ கீழே செட் பண்ணலாம். இதை கொஞ்சம் மெனெக்கெட்டு சரியா செட் பண்ணா அப்புறம் சும்மா கொஞ்ச நேரம் நின்னதுக்கெல்லாம் சொடுக்கு விழாது! சரியான இடத்திலதான் சொடுக்கறோமான்னும் நேரம் எடுத்து பாத்துக்கிடலாம்!

From dwellclick

எந்த மாதிரி சொடுக்கு விழணும்? வழக்கமா நாம செய்யற இடது சொடுக்கா? சிலருக்கு சொடுக்க வரும் ஆனா இந்த ரெட்டை சொடுக்குத்தான் பிரசினையா இருக்கும். அவங்க இங்கே ரெட்டை சொடுக்குன்னு அமைக்கலாம். இதுக்கு ஷோ க்ளிக் டை விண்டோ ன்னு டிக் அடிச்சா திறக்கிற சாளரத்திலே அட்ஜஸ்ட் பண்ணலாம்.

From dwellclick

From dwellclickஇதுவும் இல்லாம இன்னொரு வசதியும் இருக்கு. சொடுக்கியை எப்படி நகர்த்தறோம்ன்னு பாத்து தேர்வு செய்ய முடியும். இந்த படத்தில பாருங்க பட்டியலை. மேலே நகர்த்தினா சாதா ஒத்தை இடது சொடுக்கு ன்னு ஆரம்பிச்சு மத்ததும் இருக்கு. சொடுக்கியை கீழே நகர்த்தினா இழுக்கிற பாங்குக்கு  போயிடும். நிதானமா இழுத்துக்கிட்டே போய், தேவையான இடம் வந்ததும் சட்டுனு ஒரு மேல் பக்க இழுப்பு, அவ்வளோதான். இழுத்து விட்டாச்சு!From dwellclick


ம்ம்ம்ம் அப்புறம் விண்டோஸ்.
 நம்ம மாதிரி ஆசாமிங்களுக்காவே இங்கே ஒரு இலவச மென்பொருள் இருக்கு. தரவிறக்கி பயன்படுத்தலாம். எல்லா விண்டோஸ் லேயும் வேலை செய்யுதாம்...எக்ஸ்பி, விஸ்டா, 7 ... பயன்பாடு முன்னே சொன்ன மாதிரியேதான்.
ஹாப்பி சொடுக்கிங்!

4 comments:

 1. இதுக்கும் கொஞ்சமானும் சொடுக்கணும் இல்லை?? அது கூட இல்லாமல் தானாவே செய்யறாப்போல் இருந்தால் சொல்லுங்க.

  ReplyDelete
 2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! செட்டிங் பண்ண சொடுக்கித்தான் ஆகணும் அப்புறம் தேவையில்லை.

  ReplyDelete
 3. அப்புறமா ஒண்ணும் எழுதலை போலிருக்கு! பிசி! :(

  ReplyDelete
 4. ஹும்! என்ன செய்யறது! பிஸியேதான்!

  ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!