Saturday, October 29, 2011

கூகுள் ப்ளஸ் -1

கூகுள் ப்லஸ் பத்தி இப்ப எல்லாரும் கேட்டுகிட்டு இருக்காங்க. நம்ம தொண்டு கிழங்கள்தான் இதுக்கு உதவணும். ம்ம்ம்ம்ம்... இது கூட செய்யாட்டி எப்படி? நம்ம ஜிமெய்ல் பேஜ்ல இடது மேல் மூலையிலே பாத்தா அங்கே ப்ளஸ் ஐகான் பார்க்கலாம்.



அதை சொடுக்கின்னா ப்ளஸ் பக்கத்துக்கு போயிடலாம்.


இடது பக்கம் நாம உருவாக்கின வட்டங்கள் இருக்கு. எப்படீ உருவாக்குகிறதுன்னு அப்புறம்
பார்க்கலாம். இதிலே தேர்வு செய்கிறது மட்டும்தான் அடுத்து தெரியுது. மேலே மித்ரான்னு இருக்கே, அது கீழே ஷேர் வாட்  இஸ் நியூ. இங்கே மித்ரான்னு ஏன் இருக்கு? அதைதான் இடது பக்கம் தேர்வு செய்திருக்கேன்.  இங்கேதான் டைப் அடிக்கனும். அடிச்சா தோற்றம் மாறிடும்.


அதுக்கு கீழே இருக்கிற இடத்தில நாம் தேர்ந்தெடுக்கிற வட்டம் இருக்கு. மேலும் வட்டங்களை கூடுதலாயும் சேர்க்கலாம். எல்லாம் முடிஞ்ச பிறகு ஷேர் பட்டனை அமுக்குங்க. முடிஞ்சது.

சரி வட்டம் எப்படி உருவாக்கறது?


இதிலே நாலாவது ஐக்கானை சொடுக்குங்க....


இங்கே மேலே கர்சர் இருக்கிற இடம் பாருங்க. நாம் யாரை எல்லாம் வட்டத்தில வெச்சு இருக்கோமோ அவங்க பட்டியலுக்கு ஒரு டேப்; நம்மளை மத்தவங்க வட்டத்தில வெச்சு இருந்தா அவங்களூக்கு ஒரு டேப்; இது வரை இந்த ரெண்டும் செய்யலைன்னா ஜிமெய்ல் அக்கவுண்ட் லேந்து அட்ரஸ் தேர்ந்தெடுத்து சேர்க்க மூணாவது டேப். கீழே வட்டங்கள் இருக்கு. இடது கோடியில காலி வட்டம். நான் முன்னேயே சில வட்டங்கள் உருவாக்கியதால இப்படி தெரியுது. இல்லாட்டா காலி வட்டம் மட்டுமே தெரியும். அப்புறம் மேலேந்து ஆசாமியை இழுத்து கீழே வட்டத்தில விட வேண்டியதுதான். ஒரே ஆசாமியை ரெண்டு மூணு வட்டத்திலேயும் சேர்க்கலாம்.



திருப்பி ஹோம் க்கு போகலாம். இப்ப நாம் உருவாக்கின வட்டம் எல்லாம் தெரியும். முன்னே சொன்னபடி செய்தி ஆரம்பிச்சு தேவையானா ஆட் மோர் ந்னு சொடுக்கினா இன்னும் சில வட்டங்களை சேர்க்கலாம். அப்புறம் ஷேர் பட்டனை சொடுக்கலாம். முடிஞ்சது.

இப்ப மத்தவங்களது போஸ்டை எப்படி பார்க்கிறது? அவரை நாம் எந்த வட்டத்தில வெச்சிருக்கோமோ அந்த வட்டத்தை ஸ்ட்ரீம் ல சொடுக்கினா அவர் போட்டதெல்லாம் பார்க்கலாம். கமென்ட் போடறது பஸ் மாதிரியேதான்.
எந்த வட்டமும் தேர்ந்து எடுக்கலைன்னா எல்லார் போஸ்டும் - நம்ம வட்டம், நாம யார் வட்டத்தில இருக்கோமோ அவங்க போட்டது எல்லாமே வந்துகிட்டு இருக்கும். இது கொஞ்சம் தொல்லைதான். பிடிக்காத போஸ்டை ம்யூட் பண்ணலாம். பிடிக்காத ஆசாமியை ப்ளாக் பண்ணலாம்.

அடுத்த போஸ்ட் ல மேலே அதிக சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்..

5 comments:

  1. ம்ம்ம்ம்ம் முயற்சி செய்து பார்த்துட்டுச் சொல்றேன். ப்ராக்டிகலா செய்தால் தான் புரியும்.

    ReplyDelete
  2. நான் ஒரு படம் போட்டிருந்தேன். என் நண்பர்கள் வட்டத்தில் நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள் யார் பார்த்டார்கள் என்று தெரியவில்லை.அபி அப்பா,தம்பி வாசுதேவன் மாட்டும் பஅர்த்திருக்கீறார்கள்

    ReplyDelete
  3. அக்கா, பஸ் மாதிரி இல்லாம நாமேதான் போய் பார்க்கணும். இன்னும்ம் பழகி இராது. சீக்கிரம் பழகிடும்.

    ReplyDelete
  4. நன்றி திவா சார்

    உபயோகமான தகவல்களால் இதை படிப்பவர்கள் அனைவரும் பயன் பெறுவார்கள் .

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!