Sunday, October 30, 2011சரி இன்னைக்கு மீதி கூகுள் ப்ளஸ் சமாசாரம் எல்லாம் பாத்துடலாம்.


இதான் படம் போடற சமாசாரம். ஒண்ணும் புதிசு இல்லை. மேலே கூகுள் ப்லஸ் க்கு பக்கத்தில இருக்கிற வீடு ஐகானுக்கு அடுத்து இருக்கிற ஐகாம் படங்களுக்கானது. இடது பக்க மெனுவில கீழே யுவர் ஆல்பம்ஸ்.  நம்ம பிகாஸால ஏத்தற எல்லாமே பப்ளிக் ன்னு இருந்தா இங்கே வந்துடும்.
அதுக்கு மேலே போஸ்ட் படங்கள். நம்ம இங்கே  கூ+ ல  போஸ்ட் போட்டா அந்த படங்களும். கீழே பாருங்க. வலது பக்கம் மேலே சிவப்பு கட்டம் கட்டி படம் ஏத்த லிங்க் பட்டன் இருக்கு.
 விடியோக்களுக்கு தனி மெனு. போட்டோஸ் ஐகான் க்கு வலது பக்கத்திலே. இதுவும் பிகாஸாலேந்து போடுகிறது.அடுத்து கூகுள் ப்ளஸ் ன்னு ஐகான். இது எதுக்குன்னு ஆரம்பத்திலே புரியாது. நாம பாக்கிற வலை தளங்கள் ப்ளாக் பலதிலேயும் G + ன்னு ஒரு லிங்க் பார்க்கலாம். அதை சொடுக்கினா அந்த பதிவு இங்கே சேர்ந்ந்துடும். அதாவது நமக்கு பிடிச்ச வலை சமாசாரங்களை ஷேர் செய்கிற விஷயம் இது.
கடைசியா பஸ். பஸ் மூடிற வரை அது இங்கேயும் வந்ந்து கொண்டு இருக்கும். இங்கேயே அதை பார்க்கலாம். மெதுவா எல்லாரையும் இங்கே வர வழைக்கிற உத்தி போல இருக்கு!


சரி! மெய்ன் மெனுவுக்கு போனா அடுத்து வட்டங்கள். நேத்தே பாத்தாச்சு.
அடுத்து கேம்ஸ். இதில ஆன் லைன் கேம்ஸ் மாதிரி ஆடலாம் போல இருக்கு. நான் பார்க்கலை; சுவாரசியம் இல்லை.


ம்ம்ம் அவ்வளோதான். இன்னும் ஒரே ஒரு சின்ன சமாசாரம். வலையை தேடுகிற மாதிரி G+ லேயும் தேடலாம். உதாரணமா ஆந்த்ராய்ட் மொபைல் பத்தி g+ ல என்ன எழுதி இருக்குன்னு தேடலாம். தேடலை சேமிக்கலாம். எழுதினது பிடிச்சு இருந்தா ஆசாமியை பாலோ பண்ணலாம்; வட்டத்தில சேர்க்கலாம்.


கூகுள் ப்ளஸ் சமாசாரம் முடிஞ்சது. சின்ன பசங்க சின்ன பொண்ணுங்க எல்லாம் கொஞ்சம் கை தட்டுங்க! :-)

19 comments:

 1. இதை இப்போத் தான் பார்க்கிறேன். ம்ம்ம்ம் மறுபடி நண்பர்களை இந்த வட்டத்துக்குள்ளே இழுக்கிறதைப் பார்க்கணும். அது என்னமோ இழுத்தா, இழுத்தவங்க ஐகான் கையிலே/மவுசிலே கூடவே ஒட்டிண்டு போக மாட்டேங்குது. என்ன பிரச்னைனு புரியலை.

  ReplyDelete
 2. தெளிவா சொல்லி இருக்கீங்க திவாஜி.
  எனக்கே புரியுதே. :)))))))

  ReplyDelete
 3. எனக்கும் புரிஞ்சது. ஆனால் பப்ளிக் ப்ரைவேட் விஷயத்தில ஜாக்கிரதையா இருக்கணும். என்னைச் சொல்லிக்கறேன்:)

  ReplyDelete
 4. எல்லோருக்கும் நன்றி!

  ReplyDelete
 5. தற்போது தான் இந்த விவரங்களை முதல் முதலாக தெரிந்து கொண்டேன்

  நன்றி திவா சார்

  ReplyDelete
 6. ஒரு கேள்வி

  தினமும் -----------added you on Google+ என்று வருகிறதே

  இப்படி வராமல் இருக்க என்ன வழி என்று சொல்லுமாறு

  பணிவுடன் கேட்டு கொள்கிறேன்

  ReplyDelete
 7. அட! பிரியா பாட்டியா இல்லாட்டாலும் இங்கே வந்துட்டீங்களே! நல்வரவு.
  -added you on Google+ என்கிறது சாட் ரிக்வெஸ்ட் மாதிரிதான். கண்டுக்காம விடலாம். ஒன்னும் ஆகிடாது. டெலீட் பட்டந்தான் இருக்கே! வராம தடுக்க முடியும்ன்னு தோணலை!

  ReplyDelete
 8. உடன் பதிலுக்கு நன்றி திவா சார்

  ஹ ஹா ;ஒரு 50 வருஷம் கழித்து சரி சரி ஒரு 24 வருஷம் கழித்து நாங்களும் பாட்டியாக வேண்டியது தானே

  உங்க நகைசுச்சுவை உணர்வுக்கு அளவே இல்லையா தொண்டு கிழம் என்று தலைப்பு வைத்து இருப்பதை தான்

  சொல்கிறேன்

  கீதா மாமி பதிவுகளை படித்து கமெண்ட்ஸ் போட்டு விட்டு அவர் யார் ப்ளாக் லில் follow செய்கிறார் என்று பார்க்கும் பொது வித்தியாசமான இந்த பதிவின் தலைப்பை பார்த்து அது நீங்களாகஇருப்பதை பார்த்து சற்று வியப்படைந்தேன் :)

  வளர்க தங்கள் கம்ப்யூட்டர் பணி!

  ReplyDelete
 9. :-))
  தொண்டுக்கிழங்களுக்குத்தான் ஆர்வம் இருக்கு. நேரம் இருக்கு. ஆனா சொல்லித்தர ஆளில்லை!

  ReplyDelete
 10. என்னுடைய சந்தேகம் எல்லாம்

  முந்தைய கூகிள் லில் நமது அனுமதி கேட்டு தான் வரும்

  இங்கே added you on Google+ என்று வருகிறதே

  நமது அனுமதி இல்லாமலே நம்மை அவர்களின் வட்டத்தில் சேர்க்க முடியுமா

  என்பது தான்

  ReplyDelete
 11. ஆனா சொல்லித்தர ஆளில்லை! //

  கண்டிப்பாக உங்களை போல் யாராவது வருவார்கள்

  அந்த குறையை முற்றிலும் நீக்குவார்கள் !

  ReplyDelete
 12. ஆனா சொல்லித்தர ஆளில்லை! //

  கண்டிப்பாக உங்களை போல் யாராவது வருவார்கள்

  அந்த குறையை முற்றிலும் நீக்குவார்கள் !

  ReplyDelete
 13. இங்கே added you on Google+ என்று வருகிறதே

  நமது அனுமதி இல்லாமலே நம்மை அவர்களின் வட்டத்தில் சேர்க்க முடியுமா என்பது தான்//
  அப்படி சேர்த்தாலும் ஒன்னும் பிரயோசனமில்லை. நாமா அவங்களை ஏதாவது வட்டத்துல சேத்து போஸ்ட் போடுகிற போது அந்த வட்டத்தை இன்க்லூட் செய்தாதான் அவங்க நாம எழுதறத பார்க்க முடியும். இல்லைன்னா பப்ளிக் ன்னு நாம போடறதை மட்டுமே பார்க்க முடியும்.

  ReplyDelete
 14. நன்றி திவா சார் ! சந்தேகம் தீர்ந்தது :)

  ReplyDelete
 15. சந்தேகம் தீர்ந்தது :)//
  ஆயிரம் பொற்காசுகள் எனக்கே!

  ReplyDelete
 16. கீதாமா வுக்கு பாதி கொடுத்துடுங்க!

  ஏன்னா உங்களை காட்டி கொடுத்தவர் அவர் தான் :)

  ReplyDelete
 17. ஏன்னா உங்களை காட்டி கொடுத்தவர் அவர் தான் :)//
  எட்டயப்பிகளுக்கு எல்லாம் கிடையாது. :P

  ReplyDelete
 18. ஏன்னா உங்களை காட்டி கொடுத்தவர் அவர் தான் :)//
  எட்டயப்பிகளுக்கு எல்லாம் கிடையாது. :P//

  grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  ReplyDelete
 19. ஓட்டுப் போடுங்கப்பா! எல்லாரும்!
  எங்கள் ப்ளாக் கின் இடப்பக்க மூலையில் இருக்கும் ஓட்டுப்பெட்டியிலே போய் எல்லாரும் உங்க வாக்குகளை எனக்கே, எனக்கு மட்டுமே அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒருத்தர் எத்தனை ஓட்டு வேணாப் போடலாம்னு சொன்ன எங்கள் ப்ளாக் என்னை ஒரு ஓட்டுக்கு மேல்(ஹிஹிஹி, எனக்குத்தான் அந்த ஒரு ஓட்டையும் போட்டேன், இன்னொரு ஓட்டும்போட்டுக்கலாம்னு பார்த்தா விடலை, அல்பம்)போட அனுமதிக்கவில்லை. இந்தப் பாரபட்சத்தை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன்.

  வோட் ஃபார் எனக்கே!

  சீக்கிரமாப் போய் வரிசையிலே நின்னு ஓட்டுப் போடுங்க!

  ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!