Friday, November 16, 2012

அன்ட்ராயர் - 1

key words: android, ICS, beginners, elders, howto android phone.

ரொம்ப நாளாச்சு இல்லே பாத்து? லொக், லொக்! நல்லா குளிருது. அந்த ஷாலை எடும்மா! ரைட், எப்படி இருக்கீங்க? சௌக்கியமா? நான் நல்லா இருக்கேன். லொக், லொக்!

எவ்வளோ நாள் கணினியை கட்டிகிட்டு அழறது? இன்னும் சிம்பிளா ஏதாவது இருந்தா தேவலைன்னு நினைச்சா.... ஒரு அன்ட்ராயர் வாங்கலாம்.

என்னது? அது ஏற்கெனெவே ஒரு டஜன் இருக்கா!

, நான் அந்த உள்ளாடையை சொல்லலை. ஆண்ட்ராய்ட் ன்னு சொல்லறாங்களே, அதைத்தான் சொன்னேன். அப்படித்தான் நம்மோட இன்னும் நாலு வருஷத்துல சேந்துக்கப்போற பல்லாஜி பாசுதேவ்மூர்த்தி பேர் வெச்சு இருக்கார். அது நல்லா இருக்கு. அதனால் அப்படியே வெச்சுக்கலாம்.

அதாவது இது கணினியும் இல்லை; சாதா செல்போனும் இல்லை; காமிராவும் இல்லை. ஆனா இது எல்லாமுமா இருக்கு. எல்லாமா இருக்கற இதுக்கு பரப்ரம்மம் ன்னு பேர் வெக்கக்கூட யோசிச்சேன். அப்புறம் வாணாம்ன்னு பல்லாஜி வெச்ச பேரையே வெச்சுட்டேன். இபப்டி நிறைய வேலையை செய்யறதாலே அத ஸ்மார்ட் போன் ன்னு சொல்லறாங்க. ஸ்மார்ட் கேர்ல் ன்னு நாம நம்ம பேத்தியை சொல்லறதில்லையா? அது மாதிரி.

அதாவது என்ன செய்யணும்ன்னா நம்ம பென்ஷன்லேந்து மாசா மாசம் ஒரு தொகையை பொண்டாட்டிக்கு தெரியாம சேத்து வெச்சு ஒரு பத்தாயிரம் பதினைஞ்சாயிரம் தேத்திடணும். சேத்தாச்சா? ரைட். அப்புறம் வலையில மேயணும். சாட்ல நாலு பேரை ஒபினியன் கேட்கணும். கூகுள் ப்ளஸ்ல ரெண்டு ப்ளச் விட்டு ஐபோன் அன்ட்ராயர் ரசிகர்களை எல்லாம் பகைச்சுகொண்ட பிறகு நாமா கடைக்கு போய் எத வாங்கலாம்ன்னு முடிவு எடுக்கணும்! அதானே நம்ம வழக்கம்? :-)

எத வாங்கலாம்ன்னு அப்புறம் பாக்கலாம். இப்ப அன்ட்ராயரை வெச்சுகிட்டு என்னெவெல்லாம் செய்யலாம்ன்னு பாத்துடலாம். அப்புறமா நம்ம தேவையை பாக்கலாம்.
அன்ட்ராயர் நம்ம கையில் வந்த பிறகு ச்சும்மா அத பாத்தா ஒண்ணும் அட்ராக்டிவ்வாவே இல்லாம இருக்கலாம். வெறும் கருப்பா ப்லாட்டா ஒரு கையடக்க கருவி. அது சும்மா வெளியே கிடந்தா என் பேத்தி கூட சீந்தறதில்லை.

எல்லாம் ஸ்விட்ச் ஆன் செய்யற வரைக்கும்!

அந்த ஸ்விட்ச் எங்கே இருக்குன்னு கடைக்காரரை நினைவா கேட்டு தெரிஞ்சுக்குங்க. அனேகமா நீளவாட்டுப்பக்கம் ஒண்ணுல (வலப்பக்கம்?) இருக்கும். கொஞ்சம் தடவிப்பாத்து ரெட்டை ஸ்விட்ச்சா இருந்தா அது ஒலிக்கான ஸ்விட்ச். சின்னதா வலது பக்கமா இருகிறது … ஆங் அதான். அமுக்குங்க. அட திரை ஜம்முன்னு ஒளிருதே! உடனே கைய வெச்சா ஒண்ணும் நடக்காது. திரைய பூட்டி வெச்சு இருக்கும். என் போனில தெரியர ஒளிவட்டத்தை தொட்டு... சும்மா தொடுங்க! ஒண்ணும் செய்யாது, பயமில்ல... வலப்பக்கமா இழுத்து பூட்டு மேலே விட்டா பூட்டு திறந்துடும்சிலதுல கீழே இழுக்கணுமின்னு சொல்றாங்க ரைட்!

இதோட முன் பக்கம் மூணு ஸ்விட்ச்தான் வழக்கமா தெரியும். இடது பக்கம் வளைஞ்ச அம்புக்குறி முன்னே இருந்த இடத்துக்கு போலாம்ன்னு சொல்லுது. இதுவே கீபோர்டு அல்லது மெனுவில இருந்தா அதை மூடச்சொல்லுது. நடுவில் கட்டம் கட்டமா இருக்கறது மெனு லான்ச்சர் ஸ்விட்ச். வீடு மாதிரி படம் போட்டது வீட்டு … சாரி ஹோம் ஸ்விட்ச். அதாவது எங்கே இருந்தாலும் இந்த முதல்ல தெரியற ஸ்க்ரீனுக்கு திரும்பி வந்துடலாம். கொஞ்சம் பழைய செட்டுன்னா இது மென் பொத்தான் .... ஹிஹிஹி .... ஸாப்ட் பட்டனா இருக்கும். இன்னும் லேட்டஸ்ட் ன்னா முன் பக்கம் திரையை தவிர ஒண்ணுமே இருக்காது. இந்த மூணுமே அதுலதான் கீழே இருக்கும். ரைட்! அடுத்தது? அடுத்த பதிவில...

7 comments:

  1. இன்னிக்குத்தான் பாக்கிறேண். எல்லாருக்கும் நன்றி!

    ReplyDelete
  2. இப்பத்தான் internet touch pad 4.3" வாங்கினேன் (Dec.2013) அத் வாங்கின பிறகு android OS ன்னு தெரிஞ்சது! உங்க அண்ட்ராயர் பதிவுகள் பார்த்த ஞாபகம் வந்தது - ஒண்ணொண்ணா படிச்சுத் தெரிஞ்சுண்டிருக்கேன்! மிக்க நன்றி!

    ReplyDelete
  3. அஹா! இதுக்குத்தான் இதெல்லாம் எழுதினேன்! நல்லது!

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!