Thursday, December 20, 2012

அன்ட்ராயர் - கொசுறு

நேத்து சென்னை போயிட்டு பேருந்துல திரும்பிகிட்டு இருந்தேன். ஒரு வயசான தம்பதி எய்ல்லுக்கு அந்தப்பக்கம் வலப்பக்க சீட்டுகளில் உக்காந்தாங்க. நடுவில போன் கால் வந்தது. அந்த பெரியவர் ஒரே ஆர்வத்தோட எடுத்தார். டயரி மாதிரி போனை பிரிச்சார். புத்தம் புது ஐபோன். எடுத்தவருக்கு என்ன செய்யணும்ன்னே தெரியலை. இப்படி அப்படி பார்க்கிறதுக்குள்ள கால் கட் ஆயிடுத்து.

அதுக்கப்பறம் அவர் பட்ட பாடு இருக்கே! :-)))) இப்படி தேய்ச்சு .. அப்படி தேய்ச்சு நிறைய ஐகான்கள் இருக்கிற ஸ்க்ரீனை ஒண்ணும் புரியாம பாத்து.... அப்புறம் எப்படியோ ஹெல்ப் ஓபன் பண்ணி படிச்சார். உடனே பையிலேந்து ஹெட்போன்ஸ் எடுத்து சொருகினார். ஏதோ நம்பர் ஒரு வழியா டயல் பண்ணார் போலிருக்கு.... பண்ணினப்பறம் போனை காதில் வெச்சுகிட்டார். ஹெட்போன்ஸ் மடில இருக்கு. அதை காதில வெச்சுக்கலை. ஒண்ணும் வெர்க் அவுட் ஆகலை. அப்புறம் அந்தம்மா ஹெட்போனை எடுத்து தன் காதிலே வெச்சுகிட்டாங்க. கிட்டத்தட்ட 15 நிமிஷம் இதே அவஸ்தை. அப்புறம் மூடி வெச்சுட்டாங்க.
 பாவம்!
 வலிய போய் உதவி செய்யலாமான்னு நினைச்சேன். அப்புறம் தேடி கண்டு பிடிக்கற சுவாரஸ்யம் போகக்கூடாதுன்னு கட்டுப்படுத்திக்கொண்டேன்.

நம்ம ப்ளாகுக்கு ஒரு விசிட்டிங் கார்ட் அடிச்சு வெசுக்கணுமோ!

Friday, December 7, 2012

மின்னாக்கம் -2 ஸ்கேன்டெய்லர்.


இந்த பதிவில நிறைய படங்கள் இருப்பதால பெரிசா தோணும். உண்மையில் அப்படி இல்லை.
---------------------------------------------------------------------------------------------------------------

ஸ்கேன் டெய்லர் சமாசாரம் பார்க்கலாம்.
இந்த மென்பொருள் இலவசம். விண்டோஸ், நிக்ஸ் ரெண்டுத்துக்கும் கிடைக்கும்.
புத்தகங்களை படமெடுத்த பிறகு நமக்கு பிம்பத்துக்கு இரண்டு பக்கங்கள் கிடைக்கும். இதை எல்லாம் மேலே ஸ்கேன்டெய்லர்லேயே ப்ராசஸ் செய்துக்கலாம். ந்யூ ப்ராஜக்டை மேலே இன்புட் போல்டர் புலத்தில ப்ரௌஸ் மேலே சொடுக்கி இந்த படங்கள் இருக்கிற போல்டரை காட்டிட்டா செலக்ட் ஆல் ன்னு சொன்னா எல்லா படங்களையும் அது எடுத்துக்கும்.ஒகே சொன்ன பிறகு அடுத்து DPI பிக்ஸ் செய்ய சாளரம் திறக்கும்எல்லாம் ஒரே மாதிரி வரணும் என்கிறதால இதில் எல்லாத்தையும் தேர்ந்தெடுத்து கஸ்டம் ன்னு சொல்லி 300*300 ன்னு கொடுக்கலாம்அப்ளை தட்டி ஒக்கே ன்னு சொல்லிடுவோம்.
இப்ப பாத்தா நமக்கு தேவையில்லாத படங்கள் சிலது சேர்ந்து இருக்குபடத்து மேலே வலது சொடுக்க தேர்வுகளில ரிமூவ் ஃப்ரம் ப்ராஜக்ட் ன்னு வருதுஇதை தேர்ந்தெடுத்தா நெஜம்மா நீக்கணுமான்னு உறுதிபடுத்திக்கிட்டு அதை நீக்கிடும். (இதை காட்ட வேணும்ன்னுதான் இப்படி செய்தேன்தேர்ந்தெடுக்கறப்ப கவனமா தேவையானதை மட்டும் தேர்ந்தெடுக்கணும்ஒரு வேளை வேண்டாத படம் வந்தா இப்படி நீக்கிடலாம்!)ரைட் இப்ப பாருங்கபழுப்பு நிறத்துல சில படங்கள்ச்சும்மா சாம்பிளுக்கு சிலது மட்டும் சேர்த்தேன்.

ரைட், அடுத்து பார்க்க வேண்டியது இடது பக்கம் இருக்கிற பலகம்.

முதல் தேர்வு சாய்வா இருக்கக்கூடிய படத்த நேராக்கசும்மா அப்படியே சொடுக்கினா வலது பக்கம் ஹைலைட் ஆகியிருக்கிற படம் மட்டுமே நேராக்கப்படும்அடுத்து வரக்கூடிய எல்லாப்படிகளுக்கும் அப்படித்தான்அதனால் கீழே ஸ்கோப் ஐ சொடுக்கி தேர்வில் எல்லாத்தையும் தேர்ந்தெடுக்கணும்பின் வலப்பக்கம் அம்புக்குறியோட இருக்கிற பட்டனை சொடுக்க எல்லா பக்கங்களுக்கும் அது செய்யப்படும்.அடுத்த படி பக்கங்களை வெட்டமுழு பக்கமா இருக்கலாம்அல்லது கடைசியா இருக்கிறது போல இரண்டு பக்கமாமூன்றாவதா இடப்பக்கம் ஒரு வேண்டாத ஒட்டோட ஒரு பக்கம்தானியங்கியா செய்வதே சரியாகவே இருக்கும்இருந்தாலும் அது அப்படி செய்த பிறகு ஒவ்வொரு படமா பார்த்து தேவையானால் சரி செய்யணும்.
 அடுத்தப்படி கோணல் சரி செய்யஅதான் முன்னேயே சரி செய்தோமேன்னாஇல்லைஅது வேறஇப்ப இரண்டு பக்கமா பிரிஞ்ச பிறகு திருப்பி சரி செய்ய வேண்டி இருக்கும்புத்தகங்களை பிரிச்ச பிறகு இரண்டு பக்கங்களும் சமமா இருக்கும்ன்னு சொல்ல முடியாது.

இதையும் தானியங்கியா செய்துடலாம்சரியாவே இருக்கும்.


அடுத்தப்படி செலக்ட் கன்டன்ட்அதாவது உரை பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை வெட்டிவிடும்இந்த படியில நமக்கு வேலை அதிகம் இருக்கும்தானியங்கியா செயல்பட்ட பிறகு நிறையவே சரி செய்ய வேண்டி இருக்கும்முதல் படத்தை பாருங்கதேர்வான இடம் ஊதா நிறத்துல இருக்குஇடது ஓரம் கருப்பா விளிம்பு தெரிவதால அதையும் சேர்த்துவிட்டதுவலது பக்கம் மற்ற பக்கங்களோட விளிம்புகள் கருப்பா தெரிவதால அதுவும்மேல் விளிம்பும் அப்படியேஆனால் கீழ் விளிம்பு அந்த பிரச்சினை இல்லாம இருப்பதால சரியா வெட்டுது பாருங்க. கீழே  அடுத்த படத்துல எல்லா பக்கத்திலேயும் அதன் தேர்வு சரியாவே இருக்குஇந்த படியில நாம் ஒவ்வொரு பக்கத்தையும் கவனமா பார்த்து சரி செய்யணும்எப்படி சரி செய்யறதுநாலு பக்கமும் ஊதா கோடு இருக்கு இல்லேஅவை சொடுக்கியால பிடிச்சு இழுத்தா இழுத்த இழுப்புக்கு வரும்இழுத்து சரியான இடத்தில விடுங்க.


சரி அடுத்த படிமார்ஜின். (படம் கீழே) முந்தைய படில தேவையில்லைன்னு வெட்டினதால இப்ப வெள்ளையா மார்ஜின் சேர்க்கணும்இல்லாட்டா புத்தகம் சரியா வராதுபடிக்க கஷ்டமா இருக்கும்இந்த படியில் எவ்வளவு மார்ஜின் வேணும்கீழேமேலேபக்கவாட்டிலேன்னு தேர்ந்தெடுத்து அம்புக்குறியோட உள்ள பட்டனை சொடுக்கி மார்ஜின் அமைக்க ஏறத்தாழ வேலை முடிஞ்சதுஆமாஒவ்வொரு படியிலேயும் அப்ளை டு பட்டனை சொடுக்கி ஆல் ன்னு தேர்வு செய்யறிங்கதானேஇல்லாட்டா ஒரு படம் மட்டுமே ப்ராசஸ் ஆகும்!இந்த படியில கீழே இன்னொரு தேர்வு இருக்கு பாருங்க
. அலைன்மென்ட். இதால எல்லா பக்கங்களையும் ஒரே அளவா அமைக்கலாம்சில அத்தியாயங்கள் முடிகிற பக்கத்தில -உரைப்பகுதி கன்டென்ட் பாதி பக்கம்தான் வரும்இல்லையாஅதனால இந்த படி வேணும்.


கடைசியா இருக்கிற படி அவுட்புட்இங்க முதல் தேர்வு டிபிஐ அமைக்கிறதுநாம 300*300 ன்னு முன்னேயே தேர்ந்து எடுத்து இருக்கறதால அதையே அமைக்கலாம்
அடுத்து மோட்ப்ளாக் அன்ட் வைட் என்கிறது எல்லாம் உரைகளுக்குமானதுபடம் இருந்தா அந்த பக்கத்தை க்ரே ஸ்கேல்கலர் ல அமைக்கலாம்படம் உரை இரண்டும் இருந்தா மிக்ஸ்ட்இப்படி செய்யாட்டா பக்கம் கண்ணறாவியா இருக்கும்.சரி தேர்வுகளை முடிச்சு அம்புக்குறி பட்டனை தட்டிட்டு அடுத்த வேலையை பார்க்க போகலாம். இது வரை மென்பொருள் தேவையான மாற்றங்களை குறிச்சு வெச்சுதே தவிர வேறு செயல் எதையும் செய்யலை. அதனால இப்ப வேறு மாறுதல்கள் வேணுமானா பின்னே போய் தேவையான படிகளில மாறுதல்களை செய்யலாம். இப்ப இந்த பட்டனை சொடுக்கிய பின்னால்தான் எல்லா மாறுதல்களும் செய்யப்பட்டு படங்கள் முன்னே தேர்ந்தெடுத்த வெளியீட்டு அடைவுக்கு சேமிக்கப்படும். இத்தனையும் செய்ய நேரமாகும் என்பதால நாம் கணினியை வேலை செய்யவிட்டு விட்டு வேறு வேலையை பார்க்க போகலாம். வேலை முடிஞ்ச பிறகு அது மணி அடிச்சு தெரிவிக்கும்!

முடிவா ப்ராஜக்டை சேமிக்கிறது நல்லது. நமக்கு வேண்டிய படங்கள் எல்லாம் இப்ப  கிடைச்சுட்டாலும் பின்னால் எதேனும் மாற்றம் தேவையானால் ப்ராஜக்டை திறந்து மாற்றங்களை செய்யலாம். விடு பட்ட பக்கங்கள், விடுபட்டு போன படம் உள்ள பக்கங்களை படத்துக்காக திருத்த... இப்படி பல மாற்றங்கள் தேவையாக இருக்கலாம்.

இப்ப படங்களை பார்த்தால் கருப்பு வெள்ளையாக தெளிவாக இருக்கும். இவற்றை அடுத்து உங்கள் அபிமான மென்பொருளால மென்நூலாக மாற்ற வேண்டியதுதான். அது தனி டாபிக், தனி பதிவு!
Tuesday, December 4, 2012

அன்ட்ராயர் -5 ( android )


key words: android, ICS, beginners, elders, howto android phone.Tamil.
----------------------------------------------------------------------------

பபுச்சா என்று அன்பாக அழைக்கப்படும் கொல்லி மலை சித்தர், குருஜி, விவசாயி என்று பல அவதாரங்களை எடுக்கும் பலாபட்டரை ஷங்கர் ஆண்ட்ராய்ட் பத்தி வரலாறு, எதை வாங்கலாம் போன்ற பலதும் எழுதுகிறார். அவசியம் இதை படியுங்கள்.
------------------------------------------------------------------------
சரி, ஸ்மார்ட் போன் அதோட பேர் சொல்றா மாதிரி அடிப்படையில போன்தான். காமிரா உலாவி எல்லாம் எக்ஸ்ட்ரா பிட்டிங்தான்!

உங்க பழைய செல் போன்ல இருக்கிற டெலிபோன் நம்பர் எல்லாத்தையும் இதுல ஏத்தணுமே! அதுல எஸ்டி கார்ட் இருந்தா அதுக்கு பேக் அப் செஞ்சுட்டு கார்டை இதுல தூக்கிப்போட்டா முக்காவாசி வேலை முடிஞ்சது. பின்னால போன் நம்பர்களை சேர்க்க கான்டாக்ட்ஸ் ன்னு இருக்கிற ஐகானை தொட்டு உள்ளே போய் ஆப்ஷன்ஸ் வழியா உள்ளே வாங்கிக்கலாம். விவரங்களுக்கு படங்களை பாருங்க. ஒரு அப்ளிகேஷன்ல ஆப்ஷன்ஸ் எங்கே இருக்குன்னு கேக்கறீங்களா? நல்ல கேள்வி! android 4 ICS ல சாதாரணமா ஸ்க்ரீன்லேயே இருக்கும். இல்லைன்னா கீழ் படத்திலே கீழே வலது மூலையில 3 புள்ளிகள் ஒண்ணு மேல ஒண்ணா இருக்கு, பாருங்க, அதை அழுத்த ஆப்ஷன்ஸ் தெரியும்.


(மேலே) இம்போர்ட் எக்ஸ்போர்டை அழுத்துங்க.


(மேலே) எந்த இடத்துக்கு கான்டாக்ட்ஸ் இழுக்கணும்? செலக்ட் செய்து நெக்ஸ்ட் ஐ அழுத்துங்க.


(மேலே)  எங்கிருந்து கான்டாக்ட்ஸ் இழுக்கணும்? செலக்ட் செய்து நெக்ஸ்ட் ஐ அழுத்துங்க.


(மேலே) தேவையானதை மட்டுமோ எல்லாத்தையுமோ இழுத்துக்கலாம். செலக்ட் செய்து நெக்ஸ்ட் ஐ அழுத்துங்க.

அடிக்கடி பயன்படுத்தறது போனா இருக்கும்; அதனால அதோட ஐகானை அவசியமா ஹோம் ஸ்க்ரீன்ல வெச்சுக்கணும். அதை தொட டயல் பேட் வரும். நம்பரை ஒத்தவேண்டியதுதான். அது சரி! இந்த செல்போன் எல்லாம் வந்த பிறகு யாருக்கு எந்த நம்பர் நினைவிருக்கு? என் நம்பரே கூட எனக்குத்தெரியாது! யாரானா கேட்டா இப்ப உனக்கு மிஸ்ட் கால் கொடுக்கறேன், பாத்துக்கன்னு சொல்ல வேண்டி இருக்கு!

இதிலியே அடுத்து அடுத்து டேப்கள் இருக்கும். சாதாரணமா அடுத்த டேப் அடிக்கடி கூப்பிட்ட நம்பர்கள். அதுக்கு அடுத்து போன் நம்பர் புக். வலது பக்கம் ஏ, பி, சி தெரியும். தொடுகிற எழுத்துல ஆரம்பிக்கிற நபர்களோட எண்கள் தெரியும்கீழே பூதக்கண்ணாடி தெரிஞ்சா அது தேடல் உதவி. அதைத்தொட விசைப்பலகை திறக்கும் பெயரை உள்ளிட ஆரம்பிக்கும்போதே தேர்வுகள் தெரிய ஆரம்பிக்கும். எண்ணை தொட அது டயல் ஆகும். பேசும்போது ஸ்க்ரீன் ஆஃப் ஆயிட்டாலும் பேசி முடிச்சதும் டயலர் தெரியும். அதுல கீழே இருக்கும் சிவப்பு பட்டையை தொட கால் கட் ஆகும்.

இதே போல கால் வரும்போது ஸ்க்ரீன் ஒளிர ஆரம்பிக்கும். நடுவில் இருக்கிற ஒளி வட்டத்தை வலது பக்கம் இழுத்துப்போக அங்கே கால் ஏற்றுக்கொள்ள இடம் வரும். அங்கே விட்டுவிட கால் கனெக்ட் ஆகும். இடது பக்கம் இதே போல ஏற்க மறுக்கிற இடம் இருக்கு. மேலே ஹோல்ட்.

பேசும் போது சரியா கேட்கலைன்னா வால்யூம் பட்டன் - அதான் (இடது) சைட்ல இருக்கே- அத பயன்படுத்தி சத்தத்தை அதிகமாக்கி கேட்கலாம். எதிர் முனை ஆசாமி அந்த காலத்து ட்ரங்கால் பேசறாமாதிரி சத்தம் போட்டா குறைச்சுக்கலாம்.

மின்னாக்கம்


நல்லாயிருக்கீங்களா? ரொம்ப நாளாச்சு பாத்து.

இன்னிக்கு மின்னாக்கம் பத்தி பேசபோறேன். பழைய நூல்கள் ஓலைச்சுவடிகள் இவற்றில் எழுதி இருக்கறதை பாதுகாக்கிற முயற்சியில சில வருஷங்களா ஈடுபட்டு இருக்கேன். 'புகைப்படம்' எடுக்கிற வழியில இதை முயற்சி செய்துகிட்டு இருக்கேன், இதற்கு முன் இருந்த பல வழிகளை விட நான் பின்பற்றிய வழி கொஞ்சம் நல்லா இருந்ததே ஒழிய இன்னும் திருப்தி ஏற்படலை. ஒண்ணாவது, புத்தகம் பழைய புத்தகம்தான் நான் ன்னு சொல்கிற விதத்தில வெறும் கருப்பு வெள்ளையா அமையாம பல சாயல்களில் இருந்தது. இரண்டாவது ஒவ்வொரு மென்புத்தகமும் ஒவ்வொரு மாதிரி இருந்தது. சிலதுல நல்லா ஜூம் செய்து பார்க்க முடியும். சிலதுல முடியாது. சிலதுல மொத்த கோப்பு அளவு குறைவா இருக்கும். சிலதுல அதிகமா இருந்தும் நல்லா இருக்காது. இப்படி ஒரு செந்தரமா இல்லாம இருந்தது.
தொடர்ந்து பல சோதனைகளை செய்துகிட்டு இருந்தேன்.

முதல் முன்னேற்றம் ஸ்கேன்டெய்லர் என்கிற மென்பொருள் தொடர்பானது. இதோட உள் பொதிந்த அன்பேப்பர் போன்றதை எல்லாம் தனித்த்னியே முன்னே பயன்படுத்த முயற்சி செய்து இருக்கேன். அவற்றில் இருந்த சிக்கல்களை எல்லாம் சரிசெய்து ஸ்கேன்டெய்லர் என்கிற இலவச மென்பொருளா இப்ப கிடைக்குது. முன்னே செய்த பக்கங்களை பிரிப்பது, சுழற்றுவது, கருப்பு வெள்ளையாக்குவது போன்ற பல படிகளை இது ஒண்ணே செய்து முடிக்குது. இது வேலையை சுலபமாக்கிவிட்டது. ஆகவே படங்களை ப்ராசஸ் செய்வது இப்ப படு சுலபமாகிவிட்டது.

இரண்டாவது முன்னேற்றம் காமிரா பத்தியது. ஸ்கேன் டெய்லரை பயன்படுத்தியும் இருந்த சில சிக்கல்களின் காரணம் புரிய வந்தது.

இதைப்பத்தி முதல்ல சொல்லிடறேன். அதிகமில்லை என்கிறதால இது கொஞ்சம் சுலபம்.
நல்ல தெளிவான பிம்பங்களா புத்தகம் இருக்க ஸ்கேன்டெய்லருக்கு தேவையான தெளிதிறன் 300டிபிஐ(DPI). அதாவது ஒரு இஞ்சுக்கு 300 புள்ளிகள். இவ்வளவு விவரம் வேணும். மென்பொருட்களாள இதை கொண்டுவரலாம்ன்னாலும் சட்டியில் இல்லாதது அகப்பையில் வராது என்பது போல மூல படத்தில் இல்லாத விவரம் வராது. ஒரு சின்ன ஏமாத்து வேலை போலத்தான் அது.
இப்ப வர சாதாரணமா ஒரு புத்தகத்தோட அளவு 7 இஞ்ச் உயரம் 4 ½ இன்ச் அகலம். பிரிச்சு வெச்சு படம் எடுக்கறதால பிம்ப அகலம் 9 இன்ச். ஆக பெருக்கினா 63 சதுர இன்ச். ஒருசதுர இன்ச்சுக்கு நமக்கு 300*300 90000 பிக்சல் வேணும். 63 க்கு 5670000 பிக்சல். மில்லியனால வகுத்தா தோராயமா மெகா பிக்சல். அதாவது 5.67 மெகாபிக்சல் காமிரா வேணும்.

அந்த காலத்து பல புத்தகங்கள் 9 இன்ச் உயரம். 6 இன்ச் அகலம். அதனால இதையே கணக்கு செய்யலாம். 9*12 = 108. இதுக்கு தேவை குறைந்தது 9.72 மெகாபிக்சல் காமிரா. இவ்வளவு சரியா காமிரா அமையாது! ஆனா நமக்கு தேவையானது இதுக்கு மேலேன்னு தெரிஞ்சுக்கலாம்!

அதிர்ஷ்டவசமா இப்ப இந்த கான்பிகரேஷன் காமிரா சுமார் 10 ஆயிரத்துக்கே கிடைக்குது. முன்னே 8 மெகாபிக்சல் காமிரா 13 ஆயிரத்துக்கு வாங்கினேன். (யாரும் காமிரா வாங்கறதா இருந்தா தைரியமா வாங்கலாம். நான் வாங்கினா ஒரு மாசத்துக்குள்ள விலை குறையும் என்கிறது நிச்சயம்!) இப்ப அதே விலைக்கு 16 மெகாபிக்சல் காமிரா வாங்கி இருக்கேன்!
மற்றபடி படமெடுக்கும் டெக்னிக் எல்லாம் அதேதான்; மாற்றமில்லை.

முன்னே தயார் செய்த அட்டைப்பெட்டி எனக்கு ரிடயர்மென்ட் கொடுன்னு கொஞ்சித்து. நல்லா உழைச்சுட்டே, போய் வா ன்னு அனுப்பிட்டேன்.
இப்ப சமீபத்தில பெட்டி தயார் செய்தப்ப நான்கு மூலைகளிலும் பொருத்த தகுந்தபடி மூணு பக்கம் உள்ள பை ஜாய்ன்ட் கிடைச்சது. (படத்தை பாருங்க) இது பெட்டி தயாரிப்பை சுலபமாக்கிவிட்டது. எந்த கடையில் இந்த மாதிரி ஜாய்ன்ட் கிடைக்கும்ன்னு தெரியலை. யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்க. பைப்பாலேயே ப்ரேம்வெர்க் மாதிரி செய்துவிட்டு எல்லா பக்கமும் டிஸ்யூ பேப்பர் சுத்தியிருக்கேன். இது இன்னும் அதிக வெளிச்சத்தை உள்ளே விடுது. கீழே வெள்ளை தெர்மோகோல் பலகம். மேலேயும். இதனால் வெள்ளை பேப்பர் ஒட்டறதை தவிர்த்துவிட்டேன். சிஎஃப்எல் பல்ப், பக்கவாட்டு வெள்ளை தடுப்பு, உள்ளே கண்ணாடி, இதில் எல்லாம் மாற்றமில்லை.
அடுத்து ஸ்கேன் டெய்லர்.