Thursday, December 20, 2012

அன்ட்ராயர் - கொசுறு

நேத்து சென்னை போயிட்டு பேருந்துல திரும்பிகிட்டு இருந்தேன். ஒரு வயசான தம்பதி எய்ல்லுக்கு அந்தப்பக்கம் வலப்பக்க சீட்டுகளில் உக்காந்தாங்க. நடுவில போன் கால் வந்தது. அந்த பெரியவர் ஒரே ஆர்வத்தோட எடுத்தார். டயரி மாதிரி போனை பிரிச்சார். புத்தம் புது ஐபோன். எடுத்தவருக்கு என்ன செய்யணும்ன்னே தெரியலை. இப்படி அப்படி பார்க்கிறதுக்குள்ள கால் கட் ஆயிடுத்து.

அதுக்கப்பறம் அவர் பட்ட பாடு இருக்கே! :-)))) இப்படி தேய்ச்சு .. அப்படி தேய்ச்சு நிறைய ஐகான்கள் இருக்கிற ஸ்க்ரீனை ஒண்ணும் புரியாம பாத்து.... அப்புறம் எப்படியோ ஹெல்ப் ஓபன் பண்ணி படிச்சார். உடனே பையிலேந்து ஹெட்போன்ஸ் எடுத்து சொருகினார். ஏதோ நம்பர் ஒரு வழியா டயல் பண்ணார் போலிருக்கு.... பண்ணினப்பறம் போனை காதில் வெச்சுகிட்டார். ஹெட்போன்ஸ் மடில இருக்கு. அதை காதில வெச்சுக்கலை. ஒண்ணும் வெர்க் அவுட் ஆகலை. அப்புறம் அந்தம்மா ஹெட்போனை எடுத்து தன் காதிலே வெச்சுகிட்டாங்க. கிட்டத்தட்ட 15 நிமிஷம் இதே அவஸ்தை. அப்புறம் மூடி வெச்சுட்டாங்க.
 பாவம்!
 வலிய போய் உதவி செய்யலாமான்னு நினைச்சேன். அப்புறம் தேடி கண்டு பிடிக்கற சுவாரஸ்யம் போகக்கூடாதுன்னு கட்டுப்படுத்திக்கொண்டேன்.

நம்ம ப்ளாகுக்கு ஒரு விசிட்டிங் கார்ட் அடிச்சு வெசுக்கணுமோ!

2 comments:

  1. ஆமாம்! கண்டிப்பாகத் தேவை! கிழங்களுக்கு மட்டும் இல்லை! நிறைய இளைஞர்களுக்குமே நிறைய விஷயம் தெரியல்லே! FaceBook, Twitter இவற்றிலேயே அவர்கள் உலகம்! அதனால் கண்டிப்பாய் உங்கள் பிளாக் எல்லாருக்கும் தேவை! உடனே விசிட்டிங் கார்டு அடிச்சுடுங்கோ!

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!