Friday, January 11, 2013

வலை இணைப்பு பிரச்சினைகள்.

கொஞ்ச நாளாகவே ரொம்ப படுத்தல். நாள் முழுக்க கண் சிமிட்டற மோடத்தை பாத்து ரொம்பவே கடுப்பாயிட்டேன். இன்னிக்கு அதை ஒரு வழி செய்யரதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
எல்லா வயரையும் கழட்டினேன். சுவத்தில இருக்கற டெலிபோன் வயர் டெர்மினல், ஸ்ப்லிட்டர், மோடம் இவைகளோட கனெக்ட் ஆகி இருக்கிற வயர்களை எல்லாம் கழட்டியாச்சு. அதை கூர்மையா பாத்தா தங்க நிறத்தில கம்பி தெரியும் இல்லையா? எல்லாம் இன்னும் தங்கம்தானா இல்லை பச்சையா இருக்கான்னு பாத்தேன். எல்லாமே தங்க மஞ்சள்தான். இருந்தாலும் எதுக்கும் இருக்கட்டும்ன்னு எல்லாத்தையும் சுத்தம் செய்தேன்.

அதெப்படின்னு கேட்கறீங்களா? ரப்பர் இல்லை ரப்பர்? அதான் பென்சில்ன்னு ஒரு வஸ்துவை நம்ம காலத்திலே நிறைய பயன்படுத்தினோமே? அட, இந்த காலத்து பசங்களுக்குத்தான் அது தெரியவே தெரியாதுன்னா நீங்களும் மறந்து போயிட்டீங்களா? சரி சரி, நினைவு வந்தாச்சில்லே? அந்த ரப்பரை - அது ஏது உன்கிட்டன்னு கேட்க்கறீங்களா? இதுக்காகவே வாங்கி வெச்சு இருக்கேன்! நடுவில குறுக்கே பேசப்படாது, சரியா?
பாருங்க எங்க விட்டேன்ன்னு நினவு வர மாட்டேங்குது!

ஆங்! அதான் ரப்பரை எடுத்து கம்பிங்க மேலே நல்லா தேய்ச்சேன்! ஒவ்வொன்னா கழட்டி தேய்ச்சுட்டு உடனே திருப்பி கனென்க்ட் பண்ணிட்டேன். அதுக்கு முன்னாலே சொருகு வாயையும் பார்த்தேன்; கம்பி எல்லாம் சுத்தமாத்தான் இருந்தது.
ஏன் ஒவ்வொன்னா கழட்டி திருப்பி சொருகணும்ன்னு கேட்டா, எந்த கம்பி எங்க போகணும்ன்னு பின்னாடி குழம்பிடக்கூடாதுன்னுதான். இப்படித்தான் ஒரு தரம்.... விடுங்க அது உங்களுக்கு எதுக்கு!

ரைட் எல்லாத்தையும் கழட்டி திருப்பி சொருகிட்டேன்.
இப்ப கணினி மோடம் எல்லாத்தையும் மின் சக்தி ஊட்டி திறந்தா....  டண்டடைண்!
கனெக்ட் ஆயிடுத்து! இப்ப டாரன்ட் 170 ல பறக்குது!
டாரன்ட் எதுக்குன்னு கேக்கறீங்களா? நாம் மெய்லை எழுத்து கூட்டி படிக்கிறதுகுள்ளே இங்க யாரும் இல்லைன்னு நினைச்சுகிட்டு கட் பண்னிடபோகிறதேன்னுதான்!