Monday, April 1, 2013

அன்ட்ராயர் - 8


key words: android, ICS, beginners, elders, howto android phone.Tamil.
சரி, செட்டிங்க்ஸ் பத்தி பார்க்கலாம்!

செட்டிங்க்ஸ் ன்னு இருக்கிற ஐக்கானை தொட திறப்பது கீழே இருக்கிற சாளரம். முதல்ல தெரிவது வயர்லெஸ் மற்றும் நெட்வொர்க்.

இப்ப வர பெரும்பாலான ஆன்ட்ராய்ட் கைபேசிகள் 2 சிம் போடறாப்போலத்தான் வருது. அப்படி 2 சிம் போடறது சீக்கிரமா பேட்டரியை காலி பண்ணும்ன்னாலும் பலருக்கு பேச ஒண்ணும் வலைக்கு ஒண்ணும் பயனாகுது. இதுல போய் எதை எதுக்கு பயன்படுத்தணும்ன்னு நிர்ணயிக்கலாம். போன் செய்ய, மெசேஜ் செய்ய, டாடா கனக்ஷனுக்கு ன்னு எதை எதுக்கு பயன்படுத்தனும்ன்னு அமைச்சுக்கலாம்.



வைஃபை ஐ தொட தோன்றும் சாளரம் பக்கத்தில இருக்கிற ஃவைபை கனெக்ஷனை பட்டியல் போடும். தேவையானதை பாஸ்வேர்ட் கொடுத்து கனெக்ட் பண்ணிக்கலாம். இதுலியே விலான் கனெக்ட் ஆச்சுன்னா அதுலேயே - நம்ம டெலிபோன் லைன் ப்ராட்பேண்டிலேயே - வலையை மேயலாம். செல்போன் சர்வீஸ் வாங்கினா ஆன்ட்ராய்ட் கைபேசி இனாம் ன்னு வெளிநாட்டுல வியாபாரம் செய்யறவங்க, இதை டிஸேபிள் செய்து வெச்சு இருப்பாங்க! அவங்க சிம் கனெக்ஷன்ல மேயறதைத்தானே அவங்க விரும்புவாங்க! அப்பதானெ அவங்களுக்கு காசு கிடைக்கும்!

அடுத்து ப்ளூடூத். போன் பேச மானோ செட் சௌகரியம். அது வழியாவே கால் அடெண்ட் பண்ணலாம்; கட் பண்ணலாம். ஆனா அண்ட்ராய்ட்ல இருக்கிற பாட்டு கேட்க ரெண்டு காதுக்கும் பொருந்துகிற ஹெட்செட் வேணுமாம்! அநியாயம்ன்னு தோணித்து! மத்த ப்ளூடூத் சாதனங்களையும் இது வழியா கனெக்ட் செய்யலாம்.

டாடா பயன்பாடு அடுத்தது. நாம பாட்டுக்கு வலைய மேஞ்சுட்டு ரெண்டு நாள்ள காலி ஆகி, ஏன் கனெக்ட் ஆகலைன்னு சர்வீஸ் ப்ரொவைடர்கிட்டே சண்டைக்கு போகாம இதுல இன்னும் இருக்கா இல்லையான்னு பாத்துக்கலாம். அதிலேயே அதிக பட்சம் இவ்வளோன்னு எல்லாம் அமைக்கலாம். இவ்வளோ ஆச்சுன்னா எச்சரிக்கை கொடுன்னு சொல்லலாம்.

மோர் ல ஏர்ப்ளேன் மோட், விபிஎன், டெதரிங், வைஃபை டிரக்ட், மத்த வலை தொடர்பு விவரங்கள் அமைப்பு எல்லாம் பார்க்கலாம். ஏர்ப்ளேன் மோட்?

ஏரோப்ப்ளேன்ல ஏறினா அது கிளம்பறப்பவும் இறங்கறப்பவும் உங்க செல்போன் எல்லாம் அணைச்சுடுங்கன்னு விமான ஓட்டி கேட்டுப்பார். செல்போனோட மின்காந்த அலைகள் ப்ளேனோட எலக்ட்ரானிக்ஸோட விளையாடி ஏதாவது கோளாறா ஆயிடுமோன்னு கவலை. அப்ப ஸ்விட்ச் ஆஃப் பண்ணி அப்புறம் 10,000 அடி மேலே போனதும் இந்த ஏர்ப்ளேன் மோட் ஐ தேர்ந்தெடுத்துட்டா போதும். ஏர்ப்ளேன் மோட்ல உங்க வைஃபை, போன், டாடா கனெக்ஷன் எல்லாம் கட் ஆயிடும். அப்பாடா, நிம்மதி!

இப்படி நிம்மதியா இருக்கணும்னாக்கூட ஏர்ப்ளேன் மோட்ல வைக்கலாம். கால் தொல்லை இல்லாம இருக்கலாம். அல்லது ரோமிங்க்ல நமக்கு கால் வந்தா நாம் பைசா கட்டணும்ன்னு இருந்தாலும் இப்படி செய்யறது உண்டு.

பசங்க நம்ம படுத்தாம கொஞ்ச நேரம் இருக்கணும்ன்னு நினைச்சா இந்த மோட்ல போட்டுட்டு அவங்கிட்டே கொடுத்துடலாம். பசங்க பாட்டுக்கு கேம் ஆடலாம். ட்ரா ல வரையலாம். நாம நிம்மதியா இருக்கலாம். இல்லை நாமளே இசை கேட்கலாம்!
மதிய நேர குட்டித்தூக்கம் போடவும் இதை பயன்படுத்தலாம். முழுக்க ஸ்விட்ச் ஆஃப் செய்யத்தேவையில்லே. அதேபோல பேட்டரி சார்ஜ் முழுக்க போகாம இருக்கவும் இப்படி செய்யலாம். ஸ்விட்ச் ஆஃப் செய்யாத வரை சிம் கார்ட் டவரை கான்டாக்ட் செய்ய மின்சாரத்தை பயன்படுத்திகிட்டுத்தான் இருக்கும். ஏர்ப்ளேன் மோட்ல அது கான்டாக்ட் செய்யாது என்கிறதால சக்தி மிச்சமாகும். அதே போல டவர் சிக்னல் கிடைக்காத பகுதிகள் வழியா நாம் பயணம் செஞ்சுகிட்டு இருந்தாலும் மிகவும் பயனாகும். ஏன்னா டவர் திருப்பி கிடைக்கும் வரை போன் திருப்பித்திருப்பி முயற்சி பண்ணி நிறையவே சக்தியை செலவழிச்சுடும்!

ரைட் அடுத்து ஒலி. ஆடியோ ப்ரொபைல் இங்கே அமைக்கலாம். சாதாரணம், வெளியே, சைலன்ட் இப்படி பலதும் இருக்கு இல்லையா? அது. நமக்கு தேவையான அளவு ஒலி அளவையும் அமைக்கலாம். ரிங்க் டோன் போல பலதுக்கும். நிறைய மின்சார பசி இருக்கும் வைப்ரேஷனை செய்யணும்மா வேணாமான்னும் அமைக்கலாம்.
நாட்டிபிகேஷன், மெசேஜ், வாய்ஸ் கால், விடியோ கால் இப்படி எதுக்கு எந்த ரிங்க்டோன் வேணும்ன்னும் அமைச்சுக்கலாம். திரையை தொடறப்ப சின்ன வைப்ரேஷன் வேணுமா இல்லையான்னும் அமைக்கலாம். இப்படி இன்னும் சில...
அடுத்து பவர் சேவிங்.

No comments:

Post a Comment

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!