Wednesday, April 3, 2013

அன்ட்ராயர் - 9 செட்டிங்க்ஸ்- தொடர்ச்சி.

key words: android, ICS, beginners, elders, howto android phone.Tamil.


அடுத்து பவர் சேவிங்.
ஆண்ட்ராய்ட் கைபேசி இன்னும் இன்னும் அதிக வேகம், ஃபீசர்ஸ் ன்னு போகிறதுல நிறைய மின் சக்தியை சாப்பிடும்ன்னு முன்னேயே சொன்னேன். அதுக்காக சில ஆப்ஸ் இருக்கு. இப்ப இரண்டாவதா வாங்கின ஜெல்லி பீன்ஸ்ல (இல்லை இது ஜோலோ பீசரான்னு தெரியலை) 3 தேர்வுகள். ஒண்ணு கட்டுப்பாடு இல்லை. ரெண்டாவது ஸ்டேன்ட்பை - டாடா கனெக்ஷனை கட் பண்ணிடும். மூணாவது சூப்பர் லாங் ஸ்டேன்ட்பை. அதாவது எல்லா கனெக்ஷனையும் கட் பண்ணிடும். இத்தனை நிமிஷத்துக்கு அப்புறமா ஸ்க்ரீனை அணைச்சுடுன்னு செட் பண்ணலாம். அது ஆஃப் ஆகி 3 வது ஆப்ஷனும் செயலுக்கு வரும். பேட்டரி லோ ஆனா தானே இந்த ஆப்ஷனுக்கு போயிடும்.




அடுத்து டிஸ்ப்ளே. எவ்வளோ வெளிச்சம் வேணுமோ அவ்வளோ அமைச்சுக்கலாம். இதிலேயே தானியங்கியா வெயில்ல அதிகம், வீட்டுக்குள்ள குறைவுன்னு அமைக்க வசதி இருக்கு. இப்படி இல்லைன்னா எங்கேனும் வெளியே வெய்யில்ல போறப்ப ஸ்கிரீனை பார்க்கக்கூட முடியாது!
வால்பேப்பர் பல விதங்களில அழகழகா கிடைக்குது. அனிமேஷன், அனிமேஷன் இல்லாம.... நம்மோடா ஆதர்ச கடவுள் போட்டோவை வெச்சுக்கலாம். அல்லது நம் பேரன் பேத்திகளோடது...... இளைஞர்கள் அவங்க ஆதர்ச நடிகையோடது... எல்லாம் உங்க சாய்ஸ்தான். என்ஜாய்!
ஸ்லீப் இத்தனை நேரம் கழிச்சு டிஸ்ப்ளேவை அணைச்சுடு என்கிறது. கணினில திரை அணையறதுக்கும் கணினி இடை நிறுத்தத்துக்கு போகிறதுக்கு வித்தியாசம் இருக்கு இல்லே? அதே போலத்தான். (யப்பாடா! என்ன தமிழ் என்ன தமிழ்!)
டைப் அடிக்கிறோம். கைபேசி சின்ன கருவி. விசைப்பலகைக்கு இடம் போறாது. விசைகள் கிட்ட கிட்ட இருக்கறதால ஏ அடிச்சா எஸ் ன்னு என்டர் ஆகுது. என்ன செய்ய? அப்படியே கைபேசியை 90 டிகிரி சுழற்றி பிடிங்க! இப்ப திரை திரும்பி அலைன் ஆகி நெடுக்கே விசைகள் இன்னும் அதிக இடத்தோட தெரியும். இந்த தானியங்கி திருப்பத்தையும் இங்கே அமைச்சுக்கலாம்.
வயசாச்சு.... எழுத்துக்களை சரியா பார்க்க முடியலைன்னா எழுத்துருக்களையும் இங்கே பெரிசா அமைச்சுக்கலாம்.


ஸ்டோரேஜ் போன்லேயும், கூட இருக்கிற எஸ்டி கார்ட்லேயும் (அது என்னவா? அப்புறமா சொல்லறேன்) எவ்வளோ இடமிருக்கு; என்னென்ன அதை ஆக்கிரமிச்சுகிட்டு இருக்கு என்கிற விவரங்களை காட்டும். இதை பார்த்து இன்னும் டாடா சேமிக்கலாமா, இல்லை நீக்கணுமான்னு முடிவு செய்துக்கலாம்.

பேட்டரி சாய்ஸ்ல, அது எவ்வளோ சார்ஜ் இருக்கு; சார்ஜ் பர்சென்ட்டை மேலே டிரால காட்டணுமா, என்ன ப்ராசஸ் அதை அதிகமா யூஸ் பண்ணுதுன்னு காட்டும்.

ஆப்ஸ் செக்ஷன்ல எதெல்லாம் டவுன்லோடினோம், எது எஸ்டி கார்ட்ல இருக்கு; எது இயங்கிகிட்டு இருக்கு போல எல்லா விவரங்களையும் சொல்லுது.

அடுத்து பெர்சனல் செக்ஷன். இங்கே லொகேஷன் சர்வீஸ்; செக்யூரிட்டி; மொழி; பாக்டரி செட்டிங் க்கு மீட்டு அமைக்கிறது எல்லாம் இருக்கு.
லொகேஷன் சர்வீஸ்ல ஆப்ஸ் எல்லாம் இந்த லொகேஷனை அணுகலாமா என்கிற அனுமதி அமைக்கலாம். ஜிபிஎஸ் பயன்படுத்தி நம்ம இடத்தை கண்டு பிடிக்கணுமா இல்லை வைஃபை, செல் டவர் மூலமா கண்டு பிடிக்கணுமா ன்னும் அமைக்கலாம்.
அடுத்து செக்யூரிட்டி. திரையை பூட்ட, சிம்கார்டை பூட்ட .. இது போல பல அமைப்புகள்.

அடுத்து மொழிகள், இன்புட்.
வழக்கமா ஒரு ஆங்கில கீபோர்ட் இருக்கும். நாம் தமிழ் அல்லது வேற மொழி வேணும்ன்னு எதையாவது நிறுவி இருந்தா அதுவும் இங்கே தெரியும். உதாரணமா செல்லினம் என்கிற தமிழ் தட்டச்சு நிரலி நிறுவி இருந்தா அது இங்கே செல்லினம்ன்னு காட்டும். அதை தேர்ந்தெடுத்தா எங்கே எல்லாம் தட்டச்சறோமோ அங்கெல்லாம் செல்லினம் விசைப்பலகைதான் திறக்கும். அப்புறமா தமிழ் தட்டச்சு பத்தி பார்க்கிறப்ப இதை விவரமா பார்க்கலாம்.





இன்னும் மவுஸ் ட்ராக்பேட் இணைச்சு இருந்தா அதோட நகர்வையும் கட்டுப்படுத்தலாம்.
அடுத்து ரீசெட். இதில நம் அமைப்பை கூகுள் சர்வருக்கு பேக் அப் எடுக்கும் வசதி இருக்கு. ஒர் 'ஆப்' ஐ அழிச்சு அப்புறம் திருப்பி நிறுவினா பழைய செட்டிங் கொண்டு வர அமைப்பு இருக்கு. ஏதேனும் நிறையவே கோளாறு செய்துட்டோம்ன்னா பாக்டரி ரீசெட் செய்ய வாய்ப்பு உண்டு. இப்படி செய்தா புதுசா போன் வாங்கினப்ப இருந்த அமைப்பு மட்டுமே இருக்கும். வாங்கினப்பறம் நாம் நிறுவின ஆப்ஸ், அப்லோட் பண்ண பைல்கள், பேரன் பேத்திய எடுத்த போட்டோக்கள், விடியோக்கள் எல்லாம் போயிந்தே தான்! (இதுக்குத்தான் அடிக்கடி நம்ம கணினிக்கு பேக் அப் எடுத்துடணும். ) ஆக இது கடைசி ஆப்ஷன்தான்.

அடுத்து அக்கௌண்ட்ஸ். இதை நாம் முதல் உபயோகத்திலேயே அமைச்சோம். தேவையானா இன்னொரு அக்கௌண்டும் அமைக்கலாம்.
அடுத்து சிஸ்டம். தேதி நேரம், இத்தனை மணிக்கு இன்னின்ன நாள் கைபேசியை ஆஃப் பண்ணிடு/ ஆன் பண்ணிடு; ஏரோப்ளேன் மோட் ல போயிடுன்னு அமைக்கலாம்.

போன் பேசிவிட்டு அப்புறம் கால் கட் செய்ய பாத்தா ஸ்க்ரீன் காணாம போயிருக்கும். அப்புறம் அதை அன்லாக் பண்ணி, ரெட் பட்டனை தேடி … இந்த தொல்லை எல்லாம் இல்லாம பவர் பட்டனை அழுத்தினா கால் கட் பண்ணுன்னு ஆக்ஸசபிலிடில செட் பண்ணலாம். அதேபோல எவ்வளோ நேரம் அழுத்தினா திரை அதை உணரணும்ன்னும் செட் பண்ணலாம்.
டெவலபர் ஆப்ஷன்ல நாம போக வேண்டாம். கடேசியா (அப்பாடா!) போனைக்குறித்த விவரங்கள். ஆன்ராய்ட் வெர்ஷன் என்ன, லீனக்ஸ் கெர்னல் வெர்ஷன் என்ன, அப்டேட்ஸ் இருக்கா.... பல விஷயங்கள்.
அப்பாடா செட்டிங்க்ஸ் முடிஞ்சது!

2 comments:

  1. வானம் பாடிக்கு நன்னி! இன்னும் எழுதிக்கொல்லுவோம்!

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!