Saturday, April 6, 2013

அன்ட்ராயர் -அப்பாடா ஒரு வழியா முடிஞ்சது!

சில குறிப்புகள்:
இதுதான் ஆன்ட்ராய்ட் பத்தின கடைசி பதிவுன்னு நினைக்கிறேன். விட்டுப்போன சில விஷயங்கள் (ஓ, அது நிறைய இருக்கு; இங்க எழுதணும்ன்னு நினைச்சு விட்டுப்போன விஷயங்கள்) சில டிப்ஸ்...

சாதாரணமா அன்ட்ராய்ட் கைபேசி வாங்கறவங்க கூட வாங்கக்கூடிய விஷயங்கள் ரெண்டு. ஒண்ணு ஸ்க்ராட்ச் கார்ட். அதாவது ஸ்க்ரீனுக்கு ஒரு பாலிமர் மேலொட்டி. க்ளாஸ்ல ஸ்க்ராட்ச் ஆகாம தடுக்குதாம். அதாவது த்யாகம் பண்ணி ஸ்க்ராட்சை தான் ஏத்துகிட்டு …. கொஞ்ச நாள்ள - என் பையரோட ஆண்ட்ராய்ட்ல அப்படித்தான் இருக்கு - ஸ்க்ராட்ச் கார்ட்லேயே நிறைய கீறல்கள் விழுந்து அன்சகிக்கபிளா இருக்கும்! எப்ப இப்படி ஆகிறதோ அப்ப அதை - ஸ்க்ராட்ச் கார்டை மாத்தணும்ன்னு பேர். ஆனா இப்படி நடக்குமா என்கிறது சந்தேகமா இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா ஸ்க்ராட்ச் விழுகிறதாலே பழகிப்போயிடும். யாரும் சொன்னாத்தான் ஸ்க்ராட்ச் அதிகமா இருக்குன்னு தெரியும்! பார்வை கொஞ்சம் கொஞ்சமா மோசமாகி ஒரு நாள் திடீர்ன்னு "அட! சாளேஸ்வரம் வந்துடுத்து" என்கிற மாதிரி!
இப்படி ஆகாமல் பார்த்து பார்த்து அதை மாற்றிவிடுவது நல்லது. அல்லது வாங்கறப்பவே கொரில்லா க்ளாஸ் ஸ்க்ரீனா பாத்து வாங்கிக்கலாம். கொரில்லா க்ளாஸ்? விக்கில தேடிப்பாருங்க. சுவையான சமாசாரம். ஏறத்தாழ ஸ்க்ராட்ச் ஃப்ரூப் ன்னு வெச்சுக்கோங்களேன்.
ரைட். அடுத்து கைப்பேசியை வைக்க ஒரு நல்ல பௌச். கடையில கேட்டா எக்கச்சக்க விலை சொல்லுவாங்க. வேறு ஏதும் சின்ன கடையா பார்த்து வாங்குங்க. சூடு வெளியேற காத்தோட்டம் இருக்கணும். அழைப்பு வரும்போது காதில ஒலி விழணும். சுலபமா திறக்க முடியணும். அவ்வளோதான்.

பேசிக் பங்க்ஷன்னே நினைக்கிறேன். பாட்டு கேட்க இருக்கும் ம்யூசிக் ஆப் இல் இத்தனை நேரம் கழிச்சு ஆப் பண்ணிடுன்னு செட் செய்ய முடியும். தூங்கப்போகிறப்ப ஏதேனும் நல்ல இசை, தோத்திரம் ன்னு கேட்டுகிட்டு தூங்க நினைக்கிறவங்களுக்கு மிகவும் பயனுள்ளது. சும்மா ஒரு மந்திரத்தையே திருப்பித் திருப்பி கேட்கவும் லூப் செய்ய முடியும். இப்ப ஜம்ன்னு மெலிசா ஒலியை அமைச்சுட்டு கேட்டுகிட்டே தூங்கலாம். போனையே இத்தனை மணிக்கு ஆன் பண்ணு ஆஃப் பண்ணுன்னு செட் செய்ய முடியும்ன்னு முன்னேயே சொன்னேன் இல்லே? சொன்னேன். ரைட்!
கணினில ஏதாவது ஒரு சமயம் செஞ்சுகிட்டு இருக்கிற வேலையில ஏதானும் ஒரு ஆப்ஷன் வேணும்ன்னு நினைச்சா அதை எங்கே போய் தேடுவோம்? அஞ்சு செகண்டுக்குள்ள பதில் சொல்லுங்க. 1....2.....3.....4......5 போச் டைம் ஆயிடுத்து! போனாப்போறது நானே சொல்லறேன். வேலை களத்திலேயே ரைட் க்ளிக் செய்து பார்க்கணும். அதே போல இங்கே ஆண்ட்ராய்டிலேயும் …. திரையை சும்மா லேசா தொட்டும் தொடாமலும்ன்னு வழக்கம் போல செய்யாம, 3 செகண்டுக்கும் மேலே தொட்டுகிட்டு இருங்க. ஆப்ஷன் ஏதாவது வரும். அதே போல மூணு கிடைமட்ட கோடுகளை பார்த்தாலும் - ஒரு ஐகான், அல்லது நிலையான இடத்தில சித்திரம்..... அங்கே ஆப்ஷன்ஸ் இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கலாம். உதாரணமா திரையை தொட்டுக்கிட்டே இருக்க திரை பின் புலத்து படத்தை மாத்த ஆப்ஷன் வரும்!
நிறைய ஆப்ஸ் எல்லாம் தேவையில்லாம நிறுவ வேணாம். 60 லட்சம் ஆப்ஸ் இருக்க் என்கிறதுக்காக நாம் நிறுவணும்ன்னு ஒண்ணும் கட்டாயமில்லை!
அடிப்படையில இது லீனக்ஸ் ஓஎஸ் என்கிறதால விண்டோஸ் மாதிரி ஆன்டி வைரஸ் இல்லாம நெட் கனென்க்ஷனே கூடாது என்கிறது இல்லை. இருந்தாலும் மேய்கிற தளங்களுக்கு தக்க படி இதில முடிவெடுக்கலாம். அதே போல பேங்க் ட்ரான்ஸ்சாக்ஷன் போன்ற விஷயங்களை செய்வதா இருந்தாலும் செக்யூரிட்டி பத்தி யோசிக்கலாம்.
சாதாரணமா தேவையில்லை.
லீனக்ஸ்லேயே நிறுவல் முடிஞ்ச பிறகு சாதாரணமா விஷயம் தெரியாதவங்களை ஓரளவுக்கு மேலே சிஸ்டத்தை மாத்த விடாது. விஷயம் தெரிஞ்சவங்கதான் ரூட் பாஸ்வேர்ட் கொடுத்து மாத்தலாம். அதே போலத்தான் இங்கேயும். சாதாரண யூசர் விஷயம் தெரியாதவங்கன்னு அஸ்யூம் பண்ணிகிட்டு ரூட் செய்வதை கொஞ்சம் கஷ்டமா ஆக்கி இருக்காங்க. ரூட் செய்தா வாரண்டி போயிடும். இதுக்காகவே ரூட் செய்யாம இருக்கறது நல்லது.
சீப்பா இருக்கிற நெட் ப்ளானை யோசிச்சு வாங்கலாம். ஏன்னா அதுதான் ஆண்ட்ராய்டோட உயிர்நாடி.
இன்னைக்கு புத்தம் புதுசா இருக்கிற போன் ஆறு மாசத்துல அரத பழசா ஆயிடலாம்! (சரி சரி, கொஞ்சம் அதிக ஹைப்தான்) அதுக்கு மனசளவில தயாரா இருக்கணும். இருந்தாலும் அடிப்படை சேவைகள் மாறாது. நெக்சஸ் போன்னா அப்டேட் கிடைச்சுட்டே இருக்கும்ன்னு நினைக்கிறேன். கம்பனிகாரங்க வழக்கமா அவங்களோட ஹார்ட்வேருக்கு தகுந்தபடி கொஞ்சம் மாத்தி கஸ்டம் ரோம் போட்டு கஷ்டம் கொடுப்பாங்க. இவங்க அடுத்த வெர்சன் வந்தா அப்டேட் கொடுப்பாங்கன்னு சொல்ல முடியாது. பெர்ர்ரிய கம்பனிகளே அப்படி கொடுக்கிறதா தெரியலை! 15 மாசத்துக்காவது அப்க்ரேட் கொடுக்கணும்ன்னு ஒரு சட்ட திட்டமெல்லாம் வந்து அப்படியே காணாம போயிடுச்சாம்! அப்பதானே அடுத்தது வாங்குவாங்கன்னு ஒரு ஆர்க்யூமென்ட் இருக்கு.
பாத்து கவனமா கையாண்டா உங்க ஆண்ட்ராய்ட் கைபேசி அதிக நாள் உழைக்கும்! வாழ்த்துகள்!

3 comments:

  1. எனக்கும் சாளேஸ்வரம் வந்துடுசசான்னு செக்கப்புக்கு போயிருந்தேன். அப்புரம் டாக்டர் சொன்னார் அதுக்கு 13 வருஷத்துக்கு முன்னாடி செக் பண்னியிருக்கனும். இப்ப உங்க ஸ்க்ராட்சு கார்ட்டுக்கு தான் செக்கப் பண்னனும்னுட்டு சொல்லிபுட்டார் திவா சார். ஹாஹா. ஜோதிடர் விக்னேஷ்.

    ReplyDelete
  2. விக்னேஷ் ரொம்ப நாளா கண்களில் தென்படவேயில்லையே.

    ReplyDelete
  3. நீங்க ரெண்டு பேருமே இந்த வலைப்பூவுக்கு முதல் விசிட் போல இருக்கே! :-)))

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!