Friday, August 30, 2013

back saver!

மின்னாக்கத்தில போட்டோக்கள் எடுக்கிறப்ப எப்பவுமே ஒரு பிரச்சினை குனிந்து நிமிருவதுதான். கண்ணாடியை நிமிர்த்திவிட்டு பக்கத்தை புரட்ட குனிய வேண்டி இருக்கு. அப்புறம் காமிரா ஸ்க்ரீனை பார்க்க நிமிர வேண்டி இருக்கு.
இதை தவிர்க்க ரொம்ப நாள் முன்னேயே ஒரு ஐடியா யோசிச்சு வெச்சிருந்தேன். அதை சோதனை செய்து பார்க்க இன்னிக்குத்தான் வேளை வந்தது!
தாழ் பெஞ்சை நீக்கிட்டு கீழேயே உட்கார்ந்துட்டேன்.
இப்ப க,நி,ப,பு வுக்கு குனிய வேண்டிய அவசியம் இல்லாம போச்சு!
ம்ம்ம்ம்... ஆனா காமிரா ஸ்க்ரீனை பார்க்கணுமே!
அதுக்கு படத்துல காட்டி இருக்கறாப்போல ஒரு கண்ணாடியை செட் பண்ணிடேன்!
யூரேகா!



கண்ணாடிய தேவையான அளவு சாய்ச்சு வெச்சா அதுல காமிரா ஸ்க்ரீனோட பிரதிபலிப்பை பார்த்து பக்கம் முழுக்க அதுல வருதான்னு செக் செய்ய முடிஞ்சது. காமிரா விழாம இருக்க ஒரு கவுன்டர் வெய்ட் (இங்கே பேத்தியோட கிலு கிலுப்பை! ) அவ்ளோதான்!
இப்ப செஷன் மிடிஞ்சதும் முதுகு வலிக்கலை! வலது தோள்தான் ..... ஹிஹிஹி!
அடுத்து ப்ளாஸ்டிக் சந்திரா கிட்ட சொல்லி ஒரு ப்ரேமும் அதுல சைக்கிள் கியர் ஹாண்டில் பயன்படுத்தி காமிராவை கிளிக் பண்ண ஒரு சாதனம் செஞ்சு வாங்கணும்! அப்ப கையை தூக்க வேண்டிய அவசியம் இராது!

7 comments:

  1. காமிரா, கண்ணாடி, கிலுகிலுப்பை எல்லாம் இருக்கு. மின்னாக்கம் செய்யவேண்டிய புஸ்தகத்தைக் காணோமே

    ReplyDelete
  2. தேவ்ஜி, அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை. நன்றி!
    ஸ்வாமின், மேல் படத்துல பீரோல தெரியறது பாருங்கோ!

    ReplyDelete
  3. கிலுகிலுப்பை இல்லாததால், மின்னாக்கம் செய்ய முடியவில்லை. உங்களையும் பிடிக்க முடியவில்லை.
    இன்னம்பூரான்

    ReplyDelete
  4. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மானதிற்கு எனது வாழ்த்துக்கள்
    சென்று பார்வையிட இதோ-http://blogintamil.blogspot.com/2013/11/blog-post_10.html?showComment=1384047144990#c4502813204804188909
    --------------------------------------------------------------------------------
    வாருங்கள் அன்புடன்...புதிய பதிவாக என்னுடைய வலைப்பக்கம்
    உயிரில் பிரிந்த ஓவியமாய்(கவிதையாக)
    http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_10.html

    ReplyDelete
  6. விமரசிக்கும அளவு இன்னும புரிந்து கொள்ள முடிய வில்லை .

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!