Saturday, August 24, 2013

புத்தக மின்னாக்கம் - அச்சிட....

ம்ம்ம்ம்... மின்னாக்கம் பத்தி இங்கேயா பதிவு எல்லாம் போட்டேன்? இல்லை, அது சித்திரம் பேசுதடியா?
என்ன இப்ப? இங்கேயே போட்டா போச்சு!
அதாகப்பட்டது பழைய புத்தகங்களை காமிராவால போட்டா எடுத்து அதை ப்ராசஸ் பண்ணி பிடிஎஃப் ஆக்கற வேலையில கொஞ்சம் குப்பை கொட்டி இருக்கேன். போன வாரத்துல அதுக்கு ஒரு புது வேலை வந்தது. உபநிஷத் நாடகங்கள் ன்னு ஒரு பழைய புத்தகம். மொத்தம் 8 நாடகங்கள். அதுல நாலு மட்டும் மோசமாக ஜெராக்ஸ் காப்பியா கிடச்சது. அதோட மூலப்ப்ரதி கிடைக்குமான்னு தேடிகிட்டு இருந்தப்ப ஒத்தர் லைப்ரரி காப்பி ஒண்ணு கொண்டு வந்து கொடுத்தார். அதை கொடுத்தவர் ப்ராசஸ் முடிஞ்ச பிறகு தனக்கு ஒரு ப்ரிண்ட் அவுட் வேணும்ன்னு கேட்டார். நானும் சரின்னு சொல்லிட்டேன்.
போட்டோ வேலை எல்லாம் அவர் கிட்ட சொன்னது போல ரெண்டு நாள்ல முடிஞ்சது. பிடிஎஃப் உம் பண்ணியாச்சு.
ஆனா இப்ப அவருக்கு ப்ரிண்ட் அவுட் எடுக்கறதுலதான் சிக்கல் வந்தது!
மொத்தம் கிட்டத்தட்ட 784 பக்கங்கள்.
அந்த காலத்து பப்ளிகேஷன். கொடுத்தவர் கொஞ்சம் வயசானவர். படிக்க கஷ்டம் இருக்கலாம்; அதனால் முடிஞ்ச வரை பெரிசா ப்ரிண்ட் ஆகணும்.
சாதாரணமா புத்தகம் ஜெராக்ஸ் பண்ணா ரெண்டு பக்கமும் (back to back) செய்வாங்க. ஒரு ஷீட்ல நாலு பக்கம் அடங்கும். அந்த லேஅவுட் தான் தோது படும். இல்லைன்னா நிறைய செலவாகும்.
ஜெராக்ஸ் செய்ததை பைண்டும் பண்ணனும் இல்லையா?
வழக்கம் போல பிடிஎஃப் பண்ண பிறகு ஸ்கேன் டெய்லரை திருப்பி இயக்கி அதுல மார்ஜின் இல்லாம சேமிச்சுகொண்டேன். ஒரே ஒரு பக்கம் மட்டுமே கொஞ்சம் அதிகமா கட் ஆகிடுத்து. மத்தபடி சரியா வந்தது.
இப்ப ஒவ்வொரு பக்கமும் தனித்தனி பைலா இருக்கு. இதை ப்ரிண்ட் பண்ண கிடைமட்டமா ஏ4 சைஸ்ல பக்கத்துக்கு ரெண்டு படம் வரணும். முன் பக்கங்களில இடது பக்கமும், பின் பக்கங்களில வலது பக்கமும் பைண்டு பண்ண மார்ஜின் வரணும்! இந்த கடைசி விஷயம்தான் ப்ரச்சினையா போச்சு!
வலையில கேட்டப்ப சில உதவி குறிப்புகள் கிடைச்சது.
Manikandan B போட்டோஷாப் வழியா செய்யச்சொன்னார். ஆனால் 400 சொச்சம் பக்கங்களுக்கு இது சரி வரலை.
Rathinam Padmanaban க்யூட் ப்ரிண்டர் மூலமா செய்யச்சொன்னார். அதுல இரண்டு இமேஜ் ஒரு பக்கத்துக்கு கொண்டு வர முடிஞ்சது. ஆனா மார்ஜின் செட் பண்ண வழி இல்லை.
(போகிற போக்கில அவர் பழைய அட்ப்பி அக்ரோபாட் ஐ இலவசமா தரவிறக்க சுட்டி கொடுத்தார். www.techspot.com/downloads/4683-adobe-acrobat-8-free.html )
வலையில் இன்னும் தேடி இந்த மென்பொருளை கண்டு பிடிச்சேன்.
FotoSlate4 தரவிறக்க http://cnet.co/1dzUkmZ
22.24MB Free to try (30-day Trial Period); $29.99 to buy

30 நாள் ட்ரயல். போதுமே! 

புரிஞ்சுக்க சுலபமா இருந்தது. மைக்ரோசாப்ட் பப்ளிஷர்ல செய்ய முடியணும், அது எப்படின்னு கண்டு பிடிக்கறது சுலபமா இல்லை.
இடது பக்க பேனல்ல படங்களை லோட் செய்து கொண்டு வரலாம். வலப்பக்க பானல் டெம்ப்ப்லேட்டுக்கு.அதை சொடுக்க...வலது பக்க பேனல்ல பக்கத்தோட டெம்ப்லேட். முன்னாலேயே செய்து வெச்சிருக்கிற டெம்ப்லேட் நிறைய. அதுல கிடைமட்டமா இருக்கறதையும் இரண்டு படம் இருக்கறதையும் தேர்ந்தெடுத்தேன். அப்புறம் அதுல வலது சொடுக்கி வர மெனுல அட்ஜஸ்ட் பிக்சர். இது பக்கத்தை பெரிசா காட்டித்து. அதை நகர்த்த முடிஞ்சது.  இடது பக்கம் அதிக மார்ஜின் விட்டு முதல் டெம்ப்லேட் செய்து மெனுல அக்சப்ட் ன்னு சொல்ல அது ஏத்துக்கிச்சு. அதுல படங்களை ஏத்தறதும் ஈசிதான். 
இடப்பக்க பேனல்ல லோட் பிக்சர்ஸ்ல சொடுக்கி திறக்கிற விஸார்ட்ல போல்டரை காட்டணும். அதுல இருக்கிற படங்களை தேர்ந்தெடுக்கணும். இதெல்லாம் வழக்கம் போல. செலக்ட் ஆல், ஆட். பிறகு கீழ் பேனலுக்கு எல்லாம் வந்துடும். அதுல செலக்ட் ஆல் கொடுத்த பிறகு கீழே ஒரு செக் பாக்ஸ். இதுல செக் செய்ய அது தானா படங்களை தேவையான புது பக்கங்களை உருவாக்கி போட்டுடும். அப்புறம் சேவ் ஆஸ் பிக்சர். ஜேபெக் ன்னு கொடுத்தேன். டிப் வகை அளவு ரொம்ப அதிகம்! 

பிறகு எல்லாத்தையும் நீக்கிட்டு புதுசா ஆரம்பிச்சு டெம்ப்லேட்ல வலது  மார்ஜின் அதிகம் விட்டு, பின் பக்க படங்களை எல்லாம் போடணும். அதை தனியா சேமிக்கணும்.
பக்கங்களை பழையபடி பிடிஎஃப் ஆக்க வேண்டியதுதான்! 
இதுல வந்த சிக்கல்கள் பத்தி பதிவு நாளைக்கு! 

5 comments:

 1. இப்போதைக்குக் கொஞ்சம் தலை சுத்தல். சில இடங்கள் புரியலை. மறுபடியும், மறுபடியும், மறுபடியும் படிக்கணும். ஆனால் அதைவிட செய்து பார்த்தால் தான் புரியும். :(

  ReplyDelete
 2. நான் மயக்கமாயிட்டேன்...யாராவது முகத்தில்
  தண்ணீர் தெளியுங்கோ ...

  ReplyDelete
 3. கீ அக்கா, ஆமாம் பயன்படுத்த ஆரம்பிக்கர வரை கொஞ்சம் என்ன நிறையவே புரியாதுதான். அதனாலேயே ரொம்ப சுருக்கிட்டேன்!
  வேணு அண்ணா, என்ன என்ன ஆச்சு??????

  ReplyDelete
 4. வழக்கம்போல அருமையான ட்யுடோரியல். எனக்கு மிகவும் உதவியாயிருக்கும். இது முன்னாலேயே தெரிந்திருந்தால் இந்த உபநிஷத் நாடகமாலாவை சற்று சிரமமில்லாமல் சேமித்திருப்பேன். என் "திறமைக்கு" கேனோபநிஷத் மட்டும் ஸ்கான் பண்ணி பிடிஎப் ஆக்க முடிந்தது. http://sdrv.ms/1dD1wPu
  தந்யோஸ்மி

  ReplyDelete
 5. வழக்கம்போல அருமையான ட்யுடோரியல்.தந்யோஸ்மி.
  என்ன கொஞ்ச நாள் முன்னாலே தெரிந்திருந்தால் இந்த உபநிஷத் நாடகமாலாவை பிடிஎப் ஆக இல்லாமல் நூல் வடிவிலேயே ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமியிடம் கொடுத்திருப்பேன். சாம்பிளுக்கு கேனோபநிஷத் http://sdrv.ms/1dD1wPu

  ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!