Saturday, November 30, 2013

ஆண்ட்ராய்ட் அப்டேட் -1

ஹலோ! நல்லா இருக்கீங்களா? உங்க ஊர்ல மழை உண்டா? எங்கூர்ல வழக்கமா நல்லா பெய்யும். போன் வருஷமும் சரியா இல்லை. இந்த வருஷமும் இது வரைக்கும் திருப்தியா இல்லே. என்ன செய்யறது? கலிகாலம்!

கிடக்கட்டும். நான் முன்னே ஒரு ஏர்டெல் ஹைஸ்பீட் யூஎஸ்பி டேடாகார்ட் வாங்கினேன். (ஹிஹிஹி! இந்த ஹைடெக் வார்த்தை எல்லாம்தான் இப்ப நமக்கு பழக்கமாயிடுத்தே!) அதை லாப்டாப்பில சொருகி உலாவிகிட்டு இருந்தேன்.

ஸ்மார்ட்போன் வாங்கின பிறகு இதிலேந்து சிம்கார்டை கழட்டி ஸ்மார்ட்போன்ல போட்டு அப்பப்ப உலாவிகிட்டு இருந்தேன். திடீர்ன்னு ஞானோதயம் ஆச்சு! ஸ்மார்ட்போன்ல போட்டா டேடா கம்மியாத்தான் ஆகிறது! முன்னே எல்லாம் ஒரு மாசத்துக்குள்ள அந்த மாச கோட்டா தீர்ந்து போய் ரிந்யூ பண்ண வேன்டி இருந்தது. ஸ்மார்ட்போன்லேயே உபயோகிக்க ஆரம்பிச்ச பிறகு மாசம் முழுசும் வருது! மொபைலுக்காக தனியா பலரும் தளங்களை வடிவமைக்கிறதும் காரணம். டேடா பறிமாற்றம் குறைவா இருக்கும்.

ரைட்! ஆனா இன்னொரு பிரச்சினை வந்தது. ஆண்ட்ராய்ட் கைபேசில சீசீசீக்கிரம் பேட்டரி டவுன் ஆக ஆரம்பிச்சது. இதென்னடாதுன்னு ஆராய்ஞ்சு இன்னொரு விஷயம் கண்டு பிடிச்சேன்! சிம் கார்டை  டிஸேபிள் பண்ணி வைக்கலாம். ரெண்டுத்துல ஒண்ணை உலாவ தேவையில்லாத சமயத்துல டிஸேபிள் பண்ணி வெச்சா பேட்டரி இன்னும் அதிகநேரம் வருது! இது சிம்பிள் லாஜிக்தானே!





செட்டிங்க் பட்டன் மேலே வலப்பக்கம் இருக்கு பாருங்க!


ட்யூயல் சிம் செட்டிங் மேலே இருக்கு. அதை அழுத்த....


மேலே ஏர்டெல். கீழே செல்ஒன். ஏர்டெல்லை ஆப் பண்ணி வெச்சிருக்கேன் பாருங்க. திருப்பி வேணும்கிற போது அதை ஆன் பண்ணி அப்படியே கீழே அம்பு காட்டற இடத்தில் டேடா கனக்ஷனுக்கு ஏர்டெல் ஐ தேர்ந்து எடுத்துக்கலாம்!




அப்புறம் நம்ம அபிமான இந்த வலைப்பூவை காப்பி அடிச்சு கூகுளான் ஒரு வலைத்தளத்தை ஆரம்பிச்சு இருக்கான். http://hwgo.com
பெண்களுக்கு கணினி பத்தி சொல்லிக்கொடுக்கறானாம். நாம எப்பவோ ஆரம்பிச்சாச்சு! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!