Saturday, December 21, 2013

வாட் அன் அடாசிடி!

 ஹலோ எல்லாரும் நல்லா இருக்கீங்களா? குளிர் தாங்க முடியுதா? குடிக்க வெந்நீரா கிடைக்குதா? ரைட்!
இன்னைக்கு ரெக்கார்டிங் பத்தி பார்க்கலாம்.
அட! அதான் ஒரு ரெகார்டிங் ஸாப்ட்வேர் விண்டோஸ்லேயே இருக்கேன்னு சொல்லறீங்களா? அதான் தெரியுமே! அதோட பயன்பாட்டுல கொஞ்சம் லிமிடேஷன் இருக்கு. தீபாவளி நல்லா ஆச்சா ந்னு கேட்டு ஒரு வாய்ஸ் பைல் தயார் பண்ணி அனுப்பிடலாம். இந்த சீசன்ல இன்ன சபால இந்த பாட்டு அருமையா பாடினாங்கன்னு சொல்லி நாம பாடி ரெகார்ட் பண்ணி அனுப்பிடலாம்.
ஆனா இதை எல்லாம் அப்புறம் எடிட் பண்ண முடியாது! சொன்னது சொன்னதுதான். திருவாதிரை களி எப்படிம்மா பண்ணறதுன்னு ரெசிப்பி கேக்கும் நாட்டுப் பெண், “எழுதி அனுப்பிடுங்கோம்மா, இங்க நோட்ஸ் எடுத்துக்க ஒண்ணுமில்லை!” ந்னு சோம்பேறித்தனப்பட்டா, மருமகளை பழிவாங்க ரெசிபி டிக்டேட் பண்ணி சவுண்ட் பைலா அனுப்ப ரெடி பண்ணிபிட்டு “அடாடா! அடுப்ப மூட்டிக்கோ ந்னு முதல்ல சொல்ல மறந்து போய்டேனே!” ந்னு தோணித்துன்னா ஒண்ணும் பண்ண முடியாது. திருப்பித்தான் ரெகார்ட் பண்ணனும்.
ஸோ நமக்குத்தேவை ஒரு ஆடியோ ரெகார்டர், எடிட்டர்.
என்டர் அடாசிடி!
வழக்கம் போல விலையில்லா... ஹிஹிஹி...  இலவச டவ்ன்லோட்தான். ப்ரீவேர்!

ஒரு லிங்க் கொடுத்தா அப்படியே பிடிச்சுண்டு இன்ஸ்டாலே முடிச்சுடுவீங்களே! (நீங்க யாரு! இந்த பதிவுகளை படிக்கிறவராக்கும்!) அதனால அதப்பத்தி ஒண்ணும் சொல்லலை. கூடவே இதையும் பார்த்து ப்ளக் இன்னும் சொருகிண்டா ரொம்ப நல்லது! குறிப்பா லேம்!

ரைட். இன்ஸ்டால் பண்ணியாச்சு. நமக்குத்தேவை மைக் அல்லது ஹெட்போன். அதான் ஸ்கைப் க்காக வாங்கி வெச்சு இருக்கோமே! அதே போதும். எதை ரெகார்ட் பண்ணனுமோ அதை தயாரா வெச்சுக்கலாம். பேப்பர் அல்லது வலைப்பக்கம்... இல்லை மனசுலேந்து நேரடியா பேசறதுனாலும் சரிதான்!
அடாசிடியை திறந்தா இப்படி இருக்கும்.


இப்ப மேலே இடது பக்கம் பட்டன்களை மட்டுமே பாருங்க! பாக்கவே அழகா இருக்கில்ல? :-) ஆறு பட்டன்ல ஆறாவது பிங்க் ப்ரௌன் பட்டந்தான் ரெகார்ட் செய்ய அமுக்க வேண்டியது. மீதி எல்லாம் தெரிஞ்சிருக்கும். முதல்ல இடைநிறுத்தம், ப்ளே, எண்ட், ஆரம்பத்துக்கு போக, கடைசிக்கு போக. ரைட்!
ரிகார்டிங்கை ஆரம்பியுங்க. கீழே ரெண்டு ரிகார்ட் தெரியுதே. ரெண்டும் ரெண்டு ஸ்டீரியோ தடங்கள். வலது ஒண்ணு, இடது ஒண்ணு. நாம பேச பேச இது ரெகார்ட் ஆகிறது தெரியும். பேசி முடிச்சதும் எண்ட் பட்டனை அமுக்கி முடிக்கலாம். அப்புறம் சேவ் ந்னா அது .ஏயூ பைலா சேமிக்கப்படும். பிறகு நமக்கு தேவையான பார்மேட் ஆக், வேவ், எம்பி3 ந்னு சேமிக்க பைல்> எக்ஸ்போர்ட் ஐ தேர்ந்தெடுத்து சரியான வகையை தேர்ந்தெடுத்து சேமிச்சுக்கலாம். அப்புறம் அதை இயக்கி பாத்துட்டு அனுப்ப வேண்டியவங்களுக்கு அனுப்பிடலாம். பாவம் அவங்க!
நாமா இடத்தை தேர்ந்தெடுக்காட்டா அது அடாசிடியை நிறுவின போல்டர்லேயே சேவ் அகும். எங்கடா காணோமே ந்னு தேடாதீங்க!
ரைட், இப்ப எடிட்டிங்க்.
நமக்கு நோட் பேட்ல காபி, கட், பேஸ்ட் செய்ய தெரிஞ்சா அதேதான் இங்கேயும்! அதே கண்ட்ரோல் சி, எக்ஸ், வி!
மேலே இருக்கிற படத்துல இடத்தை தேர்ந்து எடுத்து இருக்கேன். அதுக்கான கர்சர் செலக்‌ஷன் முன்னிருப்பா ஆகும்; இடத்தை சொடுக்கினா போதும். இல்லைன்னா அதோட ஐகான் மேலே ரெகார்ட் பட்டனுக்கு வலப்பக்கம் I மாதிரி இருக்கு பாருங்க, அதே!
ஒரு பீஸை தேர்ந்தெடுக்க அது எங்கே வருதுன்னு க்ராஃப் மேலே வர நேரத்தை பாத்து குறிச்சுக்கொள்ளணும். ஆரம்பிக்கவும், முடிக்கவும் இடத்தை குறிச்சுக்கணும். முதல் இடத்தை சொடுக்கணும். ஷிப்ட் விசையை அமுக்கிக்கொண்டு இரண்டாவது இடத்தை சொடுக்கினா நடுவில இருக்கிற துண்டு செலக்ட் ஆயிடும். என்ன? இது வேர்ட்ல அல்லது நோட்பேட்ல ஒரு சில வார்தைகளை தேர்ந்தெடுக்கற மாதிரித்தானே இருக்கு? ஆமாம். அதே போலத்தான்!
இப்ப கண்ட்ரோல் சி ந்னா காபி ஆகும். கண்ட்ரோல் எக்ஸ்ன்னா வெட்டப்படும். எப்படி இருந்தாலும் தேர்ந்தெடுத்த இடம் காணாமல் போய் க்ராஃப் திருப்பி ஒண்ணா ஒட்டப்படும்!
கண்ட்ரோல் வி யும் அதே மாதிரித்தான்னாலும் நாம பார்க்கிற விளைவு வேறயா இருக்கும்.


கண்ட்ரோல் வி ஐ அழுத்த திடும்ன்னு ரெண்டு சானல் கீழே உருவாகி அதில பேஸ்ட் ஆகும்!
என்னடா இதுன்னு பயந்துக்க வேண்டாம்!
டெக்ஸ்ட் பைல்ல கண்ட்ரோல் வி செய்தா புது பீஸ் தேர்ந்தெடுத்த இடத்துல சொருகப்படும். ஆனா இங்கே அது சேர்க்கப்படும்.
வித்தியாசம் என்னன்னு கேக்கறீங்களா? கேளுங்க கேளுங்க! நீங்க புத்திசாலி! அதான் இப்படி எல்லாம் கேட்கத்தோணுது!
இப்படி சேர்த்த பிறகு ஒலிக்கோப்பை அதாங்க ஆடியோ பைல் - ஆரம்பத்துலேந்து ப்ளே பண்ணா இந்த இடத்தில ரெண்டுமே சேர்ந்து கேட்கும்! அதாவது மேல இருக்கிற ரெண்டு சானல், கீழ இருக்கிற ரெண்டு சானல்ல இந்த இடத்துல இருக்கிறது எல்லாம் சேந்து ஒலிக்கும்!
இதை நமக்கு தேவையான படி கையாளலாம். இந்த மாதிரி பேஸ்ட் செய்யறது ஒரு பேக் க்ரௌண்ட் இசையா இருக்கலாம். அப்ப நமக்கு அது தேவை.
இல்லை, தப்பா சொன்னதை சரியா திருப்பி ரெகார்ட் பண்ணி அதை இங்கே ஒட்டறோம்ன்னா.... ஒண்ணு மேலே இருக்கிற ட்ராக் ஐ வெட்டி வேண்டிய தூரத்துக்கு நகர்த்திடலாம். அல்லது இன்னும் சுலபமான வழி தேவையில்லாத நீக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து அதை மட்டும் ம்யூட் செய்யலாம்!

ஸ்க்ரீன்ஷாட் பாருங்க. மேலே சானல்களில் இருக்கற தப்பான ரெகார்டிங் தேர்ந்து எடுத்து இருக்கு. அதுக்கு கீழே புதுசா ரெகார்ட் செய்து இருக்கு. ஆமாம். பாஸ் போட்டுட்டு, அப்புறம் ரெகார்ட் செய்தா அது கீழே புது சானல்களிலத்தான் ரெகார்ட் ஆகும்! வேற இடத்துல புதுசா ரெகார்ட் பண்ணி கட்/ காபி பேஸ்ட் பண்ணாலும் அது பார்க்க இப்படித்தான் இருக்கும்.
ரைட், எடிட்> ரிமூவ் ஆடியோ> சைலன்ஸ் ஆடியோ தேர்ந்தெடுத்து சொடுக்கினா, அந்த இடத்துல இருக்கற ஆடியோ ட்ராக் காணாமப்போயிடும்! ப்ளேல இந்த இடம் வந்ததும் கீழே இருக்கிற ரெகார்டிங்க் மட்டுமே கேட்கும்!
இப்ப கீழ அதிகமா ரெகார்டிங் இருக்கு இல்லே? இந்த இடத்துல நாலு சேனல்ல இருக்கிறதும் கேட்கும். நமக்கு கீழே ரெண்டாவது வேவ் வேண்டாம். ரொம்ப சரி. முன்ன சொன்ன மாதிரி ஆரம்ப முடிவு இடங்களை தேர்ந்து எடுத்துட்டு, டெலீட் பட்டனை... அதாங்க, நம்ம விசைப்பலகையில் இருக்கிற டெலீட் பட்டன்!.. அதை அமுக்கிட்டா டெலீட் ஆயிடும்! ஸோ சிம்பிள்!
எல்லாம் முடிச்சு தேவையான பார்மேட்ல சேமிக்கிறப்ப எல்லாம் ட்ராக்கையும் மெர்ஜ் பண்ணிடவா - ஒண்ணாக்கிடவா- ந்னு கேட்கும். அதானே நமக்கும் வேணும்! ரைட் ந்னு சொல்ல சேமிச்சுடும்.
இப்ப நமக்கு ரெகார்ட் செய்ய, சேமிக்க, காபி/ கட் - பேஸ்ட் செய்ய தெரியும்! எடிட்டிங் என்கிறது அவ்ளோதானே? அவ்ளோதாங்க! வேலை முடிஞ்சது!
அடுத்த பதிவில கொஞ்சம் டிப்ஸ் ட்ரிக்ஸ் பார்க்கலாம்.
2014 ஆண்டுக்கோ பொங்கலுக்கோ வாழ்த்து ரெகார்ட் பண்ணி மக்களுக்கு அனுப்புங்க! ஹாப்பி ரெகார்டிங்!