Tuesday, May 21, 2013

கூகுள் ப்ளஸ் குறிப்புகள்


கூகுள் ப்ளஸ் குறிப்புகள்:

Keyboard Shortcuts.
உங்கள் ஓஎஸ் மற்றும் உலாவி பொறுத்து இது வேலை செய்யலாம்; செய்யாமல் இருக்கலாம். (என்ன வானிலை அறிக்கை மாதிரி இருக்கா? ட்ரை பண்ணி பாருங்க!)
சீக்கிரம் நேவிகேட் செய்ய பயனாகும்:
      ஸ்க்ரால் டவுன் செய்ய - ஸ்பேஸ்பார்
      மேலே ஸ்க்ரால் செய்து போக - ஆல்ட் + ஸ்பேஸ்பார்
      அடுத்த இடுகை J
      முந்தைய இடுகை K
      பின்னூட்டம் ஆரம்பிக்க என்டர்
     பின்னூட்டம் முடிக்க ஆல்ட் என்டர்

நாட்டிபிகேஷன் -
       பப்ளிக் - யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
        எக்ஸ்டெண்டட் சர்கிள் - உங்கள் வட்டங்களில் உள்ள எல்லாரும் + அவர்களது வட்டங்களில் உள்ள எல்லாரும்.
        குறிப்பிட்ட சர்கிள் - அதில் உள்ளவர் மட்டும் (ஒன்றுக்கு மேற்பட்ட சர்கிள்களை தேர்ந்தெடுக்கலாம்.)
        நண்பர் மட்டும் - + இட்டு, இடைவெளி இல்லாமல் அவரது கூகுள் பெயரை இடவும்.
        ஈமெய்ல் - 100 மெய்ல் ஐடி வரை சர்கிள்ள இருக்கிறவங்களுக்கு நேரடியாக அனுப்பலாம்.

Post Style Options
தடிமனான எழுத்துகள்ளுக்கு இடைவெளி இல்லாமல் ஸ்டாரை * இடவும். *இது போல*
சாய் எழுத்துக்களுக்கு இடைவெளி இல்லாமல் அன்டர் ஸ்கோர் _ இடவும். _இது போல_
அடித்த எழுத்துக்களுக்கு இடைவெளி இல்லாமல் கோடு - இடவும். -இது போல-

hashtags கவனத்தை ஈர்க்க. 
 உதாரணமாக ...
      கூடுதலாக உணர்ச்சிகளை காட்ட # ரொம்ப பிடிச்சது!
      வகைப்படுத்த #அரசியல்
       ஒரு குழுவின் கவனத்துக்கு # தீனிதின்னி க்ரூப்

Monday, May 6, 2013

அண்ராய்ட் ஆப்ஸ்


keywords: android, apps, jelly beans

அண்ராய்ட் ஆப்ஸ் பத்தி திருப்பியும் ஒரு பதிவு.
அண்ட்ராய்ட் ல டைப் செய்யறதைப்பத்தி பேசறப்ப கஷ்டமா இருந்தா 90 டிகிரி திருப்பி வெச்சுக்குங்க; நீள வாட்டில விசைப்பலகை திரும்பி நிக்கும்ன்னு - இது போல - எழுதிய நினைவு. இந்த ஓரியண்டேஷன் போர்ட்ரெய்ட், லாண்ட்ஸ்கேப் ன்னு இரண்டு வகை. சாதாரணமா போனை நாம பிடிக்கிறது அகலம் கிடைமட்டமாகவும் நீளம் செங்குத்தாகவும்- போர்ட்ரெய்ட் - ஆளை படம் பிடிக்க இப்படித்தானே வைப்போம்? 90 டிகிரி சுழட்டி அகலத்தை செங்குத்தா பிடிக்கறது லாண்ட்ஸ்கேப். கடற்கரை மாதிரி இடங்களை படமெடுக்க பயன்படுத்துவோம். போனை நிலை மாத்தறப்ப இது போல ஓரியண்டேஷனை திருப்பறது அண்ட்ராய்டோட பாராட்டத்தக்க ஒரு குணம்.

ஆனா இதுவே சில சமயம் பிரச்சினையையும் எரிச்சலையும் உண்டு பண்ணலாம். உதாரணமா படுத்துகிட்டு ஒரு கதை படிச்சுகிட்டு இருக்கோம். கூல் ரீடர்ல ஈபப் பார்மேட்ல கூலா படிச்சுகிட்டு இருக்கும் போது புரண்டு படுக்கிறோம். ஓரியண்டேஷன் மாறிடும்!
இதே போல இன்னும் சில நேரங்களில இந்த ஓரியண்டேஷன் மாறாம இருந்தா நல்லதேன்னு நினைப்போம்!

இதற்கான ஆப் அடாப்டிவ் ரொடேஷன் லாக். (adaptive rotation lock). வழக்கம் போல கூகுள் ப்ளே ஸ்டோர்லேந்து இதை ( http://tinyurl.com/bme79p7 ) தரவிறக்கி நிறுவின பிறகு அதை நமக்கு தோதா அமைச்சுக்கலாம். நல்ல தேர்வு அடாப்டிவ் லாக். இது போனை திசை திருப்பினா உடனே ஓரியண்டேஷனை மாற விடாம என்ன செய்யணும்ன்னு நம்ம கேட்கும். ஒரு ட்ரான்ஸ்பரன்ட் ஐகான் திரையில சில வினாடிகள் தோன்றும். அதை தொட்டா மாத்தவிடும். இல்லாட்டா மாத்தவிடாது; பழைய ஓரியண்டேஷனிலேயே இருக்க வைக்கும்.

மத்த தேர்வுகளை பாத்து அது நல்லதுன்னு தோனின்னா அதையே அமைச்சுக்குங்க. அடிக்கடி ஓரியண்டேஷன் மாறினா அது சிஸ்டமுக்கு ஸ்ட்ரெய்ன்; பேட்டரிக்கு ட்ரெய்ன்!

 எப்பவுமே போர்ட்ரெய்ட், எப்பவுமே லாண்ட்ஸ்கேப், இதுல இட வலம் மாத்தின்னு பல தேர்வுகள் இருக்கு.
ஹாப்பி பெட் ரீடிங்க்! வரட்டா?