Thursday, August 21, 2014

ஆன்லைன் பர்சேஸ் .....

 
ஹலோ! ரொம்ப நாளாச்சு இங்க பதிவு போட்டு! அதனாலென்ன? ஏதாவது சின்ன பசங்களுக்கு நாம் சொல்லிக்கொடுக்க இருந்தா பதிவு போடறோம்; இல்லைன்னா இல்லை! சரிதானே?
சமீபத்துல ஆன்லை ல ஒரு விஷயம் வாங்க வேண்டி இருந்தது. அதான் நாம் பேத்தி பேரன்களுக்கு அவங்க பர்த் டே, பேத்தி டே பேரன் டே ந்னு எதாவது வாங்கித்தரோமே?
அதனால் ஆன்லைன் பர்சேஸ் எல்லாம் புதுசு இல்லை நமக்கு! ஹுக்கும்!
ஆனா இது புதுசு. வாங்க நினைச்ச பொருள் யூனிக். அதை நம்மை விட தொண்டான குழ தாத்தா ஒத்தர் கேட்டார். (என்னதான் நாம் தொண்டு கிழம் ந்னாலும் நமக்கும் ஒரு தொண்டு கிழம் இருப்பாங்க இல்லையா?) அதை இத்தாலில செய்யறாங்க. இத்தலி, ஸ்பெய்ன், யூகேல ஒரே ஒரு இடம் ந்னு குறிப்பா சில இடங்களில மட்டுமே கிடைக்குது. அமேசான் யூகே ல கிடசது. அதை வாங்கப்போய் கிடைத்த அனுபவத்தைத்தான் பகிர்ந்துக்கிறேன்.
--
அமேசான் இந்தியால இல்லாத அமேசான் யூகே ல இருக்கிற ஒரு பொருளை வாங்கணும். வழக்கம் போல அமேசான். இன் ல லாக் இன் பண்ணுங்க. அப்புறம் தலைப்புப்பக்கத்துல கீஈஈஈஈழே பாத்தா இந்த ஸ்க்ரீன்ஷாட்ல இருக்கா மாதிரி லிங்க் கிடைக்கும்.
 
 
மூக்குக்கண்ணாடிய அட்ஜெஸ்ட் பண்ணிக்கொண்டு, இதுல கடேசி லைன்ல பாத்து, யுனைடெட் கிங்டம் செல்க்ட் பண்ணா அமேசான் யூகே சைட்டுக்கு போலாம்.
ஹும் இது பழசு! இல்லை, நீங்க https://www.amazon.com அல்லது uk ஐ தட்டி அங்கே போய் உங்க amazon.co.in  ல கொடுத்து இருக்கிற மெய்ல் ஐடி பாஸ்வேர்ட் ஐ போட்டே லாக் இன் செய்யலாம்.
அதாகப்பட்டது முன்னேயே ரெஜிஸ்டர் பண்ணி இருந்தா, உங்க மெய்ல் ஐடி போதும். எந்த அமேசான் சைடுக்கு போய் லாக் இன் பண்ணாலும் நீங்க யார் எந்த ஊர் ந்னு தெரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்தாப்போல மீதி வேலை நடக்கும்.

வழக்கம் போல ஐடம் ஐ செலக்ட் பண்ணி செக் அவுட் பண்ணுங்க. எனக்கு நெட் பாங்கிங் வழி கிடைக்கலை. க்ரெடிட் கார்ட் அக்சப்ட் பண்ணுது. செக் அவுட் பண்ணறப்ப இந்திய ரூபா அல்லது யூரோ எதுல வேணுமானாலும் பணம் கொடுக்கலாம். அதுக்குத்தகுந்த பேங்க் அக்கவுண்ட் இருக்கணும். பேக்கிங், அனுப்ப,  இங்க இறக்க, கஸ்டம் ட்யூட்டி, அனுப்ப எல்லாம் சேத்து சார்ஜ் செய்யறாங்க. சுமை கூலி முக்காப்பணம்! வாங்கின பொருளோட விலை இதெல்லாம் சேத்து டபுள் ஆயிடுத்து!
எல்லாத்தையும் இப்படி வாங்க முடியாது. எதை எல்லாம் இப்படி வாங்கலாம்ன்னு ஒரு லிஸ்ட் இருக்கு. செக் அவுட் செய்யறப்ப முடியுமா முடியாதான்னு இந்தவிவரம் எல்லாம் வந்துடும்.

இதை கூகுள் ப்ளஸ்ல போட்டப்ப ஒரு நண்பர் இன்னொரு விவரம் கொடுத்தார். இந்த பக்கத்தை பாருங்க: http://www.shopandship.com/en/about/how-sns-works
இவங்களுக்கு 45 அமேரிக்க டாலர் கட்டினா அப்புறம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு (இது என்னன்னு விவரம் சைட்ல இல்லை!:( ) பொருளை வாங்க பயன்படுத்தலாம்.  New York, London, Shanghai, Istanbul, Dubai, Mumbai, Hong Kong, Johannesburg, Frankfurt, Milan நகரங்களில  நமக்கு ஒரு அட்ரஸ் கிடைக்கும். வாங்கற ஸ்டோரைப் பொறுத்து இதை பயன்படுத்திக்கலாம். பெரும்பாலும் உள்ளூருக்கு ப்ரீ சர்விஸ் இருக்கும். இங்கே வந்ததும் இவங்க பேகேஜை நமக்கு அனுப்பி வைப்பாங்க. அதுக்கு சார்ஜ் பண்ணுவாங்க. சுமை கூலி முக்காப்பணத்துலேந்து அரை பணமா ஆகும்ன்னு நண்பர் சொல்லுறார். 45 அமேரிக்க டாலர் கொஞ்சம் பெரிய தொகை என்கிறதால் அடிக்கடி வாங்க வேண்டி இருந்தா இது பயனாகலாம்! மேலே கொடுத்து இருக்கிற லிங்க்ல எதெல்லாம் வாங்க முடியும் ந்னு ஒரு லிஸ்ட் க்கு சுட்டி இருக்கு!
ஹாப்பி ஷாப்பிங்!