Wednesday, June 10, 2015

இரட்டை சொடுக்கும் மௌஸ்! - double clicking mouse

ஹலோ! நல்லா இருக்கீங்களா? பாத்து ரொம்ப நாளாச்சு! என்ன செய்யறது? வயசாச்சு; முன்ன மாதிரி நிறைய எழுத முடியறதில்லே! இருந்தாலும் நமக்காக கொஞ்சம் கஷ்டப்பட்டாவது பதிவு போட வேண்டாமா? அதான்.
சமீபத்தில ரெண்டு மூணு பிரச்சினைகள். தீர்வு கண்டதை உங்களோட பகிர்ந்து கொள்ள ஆசை!
முதலாவது ஹார்ட்வேர் சமாசாரம். சுமார் அஞ்சு வருஷம் முன்னே வாங்கின சொடுக்கி... அதாங்க மௌஸ்... கொஞ்சம் பிரச்சினை கொடுக்க ஆரம்பிச்சது. அதாவது ஒத்தை சொடுக்கு சொடுக்கினா ரெட்டை சொடுக்காகிடும். உள்ளே இருக்கிற ஸ்ப்ரிங்க் கொஞ்சம் வயசானதால உருமாறிப்போய் சொடுக்கு ஆஸ்த்ரேலியா கிரிகெட் பிட்ச் மாதிரி பௌன்ஸ் ஆகும். என்னதான் சொடுக்கி சல்லீசா கிடைக்குதுன்னாலும் ஓல்ட் ஈஸ் கோல்ட் ந்னு அப்படியே வெச்சுக்க தோணுமா தோணாதா? எப்படியாவது இதை சரி செய்ய முடியுமான்னு பார்த்தேன்.
இதென்னடா சோதனைன்னு நொந்துகிட்டே வலையில மேஞ்சா..
தீர்வு ஒண்ணு: மௌஸை கழட்டி ஸ்பிரிங்கை கொஞ்சம் நிமித்தணும். ஹும்! கழட்டி போட்டாப்போச்சு! எப்படி கழட்டறதுன்னு மேய்ஞ்சா என் மாடல் சொடுக்கியப்பத்தி ஒத்தர் எழுதி இருந்தாரு. இதை சீல் பண்ணி வெச்சிருக்காங்க, கழட்ட முடியாது. கழட்டப்பாத்தா உடைஞ்சுடும் போல!
சரி வேற தீர்வு?
ஹும்! கண்டு பிடிக்க முடியாட்டா எதுக்கு தொண்டுக்கிழமா இருக்கிறது?
ஆட்டோ ஹாட்கீ நு ஒரு வஸ்து! இங்கே போய் இதை http://ahkscript.org/download/ahk-install.exe தரவிறக்கி நிறுவுங்க!
நிறுவலப்ப UNICODE or ANSI ந்னு கேட்டுதுன்னா UNICODE ந்னு தேர்ந்தெடுங்க!
ரைட்!
அடுத்து ஸ்க்ரிப்ட் எழுத வேண்டியதுதான்! பயப்படாதீங்க. ரொம்ப சிம்பிள்!

டெஸ்க்டாப்ல வலது சொடுக்கு சொடுக்குங்க! சொடுக்கியோட இடது பட்டந்தானே பௌன்ஸ் ஆகுது? அதைத்தான் அதிகமா யூஸ் பண்ணறோம். அதனால அதான் சீக்கிரம் கெட்டுப்போகும்.  அதனால வலது சொடுக்குல பிரச்சினை இல்லை.






மெனுல ந்யூ கண்டுபிடிங்க. அது மேல சொடுக்கியை கொண்டு போனா மெனு விரிஞ்சு ஆட்டோ ஹாட்கீ ஸ்க்ரிப்ட்ன்னு காட்டும் அதுல சொடுக்குங்க. டெஸ்க்டாப்ல புதுசா ந்யூ ஹாட் கீ ஸ்ரிப்ட்ன்னு காட்டும். இதுக்கு இப்ப பேர் வெக்கலாம். உங்களுக்கு இஷ்டமான பேர்தான். தொ.கி ஸ்க்ரிப்ட்ன்னும் கொடுக்கலாம். என்ன, கடைசில அது ahk extension நோட முடியனும். உதாரணமா tho_ki.ahk


ரைட் பாதி வேலை ஆச்சு! இப்ப இதுல எதையாவது எழுதணுமே? கவலை வேணாம். இதை காப்பி பேஸ்ட் பண்ணலாம்.  இந்த ஐகான் மேல திருப்பியும் வலது சொடுக்கி எடிட் ஸ்க்ரிப்ட் தேர்ந்தெடுங்க.


 நோட்பேட்ல இது திறந்தா வெற்றி... வெற்றி!
இப்ப காப்பி பேஸ்ட்!
#NoEnv  ; Recommended for performance and compatibility with future AutoHotkey releases.
; #Warn  ; Enable warnings to assist with detecting common errors.
SendMode Input  ; Recommended for new scripts due to its superior speed and reliability.
SetWorkingDir %A_ScriptDir%  ; Ensures a consistent starting directory.
~LButton::return  ; Set A_PriorHotkey.
#If A_PriorHotkey != "" && A_TimeSincePriorHotkey < 150
LButton::return  ; Block hotkey.

இந்த 150 என்கிறத உங்க சௌகரியத்துக்கு மாத்திக்கலாம்.  இது கணினிக்கு என்ன சொல்லுதுன்னா சொடுக்கியோட இடது பட்டன்லேந்து 150 மில்லி செகண்டுக்குள்ள இன்னொரு சிக்னல் வந்தா கண்டுக்காதே! இப்ப உங்க சொடுக்கியைப்பொறுத்து இந்த 150 மாறும். மாத்தி மாத்தி திருத்தி சௌகரியமானதை வெச்சுக்கலாம்.
பைலை சேமிச்சு மூடுங்க! வலது சொடுக்கி ரன் ஸ்க்ரிப்ட் ஐ தேர்ந்து இயக்கலாம். முடிஞ்சது வேலை.
இன்னொரு சின்ன இம்ப்ரூவ்மெண்ட் செய்யலாம். ஒவ்வொரு முறை
யும் கணினி துவங்கும் போது இதை வலது சொடுக்கி ரன் ஸ்க்ரிப்ட் ஐ தேர்ந்து இயக்கறதுக்கு பதிலா கணினி துவங்கும் போதே இதுவும் துவங்க வழி செய்யலாம். அது எப்படிசுலபம்தான்! ஸ்டார்ட் பட்டனை அழுத்தி ஆல் ப்ரோக்ராம்ஸ்ஸ்டார்ட் அப் எக்ஸ்பேண்ட்
இப்ப திறக்கிற பைல் எக்ஸ்ப்லோரர் விண்டோல இந்த ஸ்க்ரிப்டை காப்பி பேஸ்ட் பண்ணுங்க. முடிஞ்சது வேலை!




அப்புறமா சந்திக்கலாமா?