Sunday, August 27, 2017

லிசன் அன்ட் ரைட்

நல்லா இருக்கீங்களா?
இன்னைக்கு சிலருக்கு ரொம்ப உதவியா இருக்கக்கூடிய ஒரு மென்பொருளை பார்க்கலாமா?
என்ன வேணாமா? அதெல்லாம் கிடையாது. பார்த்தே ஆகணும்!
சிலர் ஒரு சர்வீஸா கேட்ட கேட்கிற சில உரைகளை - அதாங்க ஸ்பீச் - எழுத்திலே கொண்டு வருவாங்க. அது வேற மொழியில இருக்கலாம். ஆங்கில உரை ஒண்ணை தமிழ் உலகத்துக்கு கொண்டு வர செய்கிற முயற்சியா இருக்கலாம். அல்லது தமிழ்ல இருக்கிற உரையை மத்தவங்களும் பயன் பெறட்டுமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில ஆங்கிலத்தில செய்யறதா இருக்கலாம். எப்படி இருந்தாலும் அந்த மாதிரி முயற்சிய பாராட்டனும் இல்ல? பாராட்டுவோம்.
இவங்களுக்கு ஒரு உதவியா ஒரு மென்பொருள்.
சாதாரணமா இப்படி செய்யறப்போ அந்த விடியோவையோ அல்லது ஆடியோவையோ இயக்க விட்டு ஒரு லைன் கேட்டதும் பாஸ் (pause) போட்டுவிட்டு அதை மொழிபெயர்த்து எழுதுவாங்க. அப்புறமா திருப்பி ஓட விட்டு அடுத்த லைனை கேட்பாங்க.
எளிமையான வார்த்தைகளா சின்ன சின்ன வரிகளா இருக்கற வரை ரொம்ப பிரச்சினை இருக்காது. ஆனா எல்லா ஸ்பீச்சுமே அப்படி இராது. சில சமயம் திருப்பி கேட்க வேண்டி இருக்கும். ரெகார்டிங் தெளிவா இல்லாம போனாலும் இப்படி திருப்பி கேட்க வேண்டி இருக்கும். தடதடன்னு பேசிண்டு போறவங்களுக்கு நிச்சயம் திருப்பி கேட்க வேண்டி இருக்கும்.
இங்கே பிரச்சினை என்னன்னா எப்படி ரீவைண்ட் செய்யறது? சாதாரணமா பாஸ் போட்டதை கர்சரை பிடிச்சு இழுத்து பின் பக்கமா விட்டு திருப்பி ஓட விட்டு கேட்கணும். அனேகமா இதை துல்லியமா எல்லாம் செய்ய முடியாது. நமக்கு தேவையானதுக்கும் முன்னே இருக்கிற கேட்டதை - ஏற்கெனெவே எழுதினதை திருப்பி கேட்க வேண்டி இருக்கும். இது ஒரு தரம் ரெண்டு தரம் நடந்தா ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லை. ஆனா அடிக்கடி நடந்தா? நிறைய நேரம் வீணாகும்.
ரைட். இங்க போய் மென்பொருளை தரவிறக்கி நிறுவுங்க. http://download.cnet.com/Listen-N-Write/3000-2170_4-75416316.html
அதை துவக்கினா மென்பொருளோட விண்டோ திறக்கும்.


கூடவே நோட் பேடும். (இந்த நோட் பேட் வேணாம்ன்னா வேணாம்ன்னு செட்டிங்ல மாத்தலாம். உங்க அபிமான டெக்ஸ்ட் எடிட்டரை நீங்களே துவக்கிக்கலாம்)


 'பைல்' போய் தேவையான பைலை திறந்து வேலையை ஆரம்பிக்கலாம்.

  
முன்ன மாதிரி பாஸ் போட்டு எழுதி ப்ளே போட்டு திருப்பி கேட்க ஆரம்பிக்கலாம். இங்கதான் மென்பொருளோட திறமை இருக்கு. திருப்பி ஆரம்பிக்கறப்ப அது விட்ட இடத்திலேந்து ஆரம்பிக்காது. இரண்டு அல்லது மூணு செகன்ட் முன்னேலேந்து ஆரம்பிக்கும்! ரொம்ப சுலபமா எழுதினதை சரி பார்த்துக்கலாம்; அல்லது திருப்பி கேட்டுக்கலாம். இன்னும் முன்னே சொன்னதை கேட்க ஷட்டில் பேக் பட்டன அமுக்க அமுக்க இன்னும் இன்னும் பின்னே போகும். சிம்பிள்!




கொஞ்ச நேரம் வேலை செஞ்சு அப்பறமா ஆரம்பிக்கனும்ன்னா புக்மார்க் இருக்கு. மூடு முன்னே அதை செட் செய்யலாம். எப்பவும் இதோட விண்டோ மேலேயே இருக்கவும் செட் செய்யலாம். சில செகன்ட் பேசி எழுத டைம் கொடுத்து மேலே பேசறதையும் செட் செய்யலாம். எல்லாத்தையும் சோதனை செஞ்சு பாத்து பிடிக்கிற வகையில் செட் செஞ்சுக்கோங்க!
சுபம்!

Sunday, August 20, 2017

போட்டோ ஸ்கேனர்.



ரைட் இப்ப இன்னொரு சூப்பர் ஆப் ஒன்னை பார்க்கலாம். அது போட்டோ ஸ்கேனர்.
நிறைய பழைய போட்டோக்கள் ஆல்பமா வீட்டில இருக்கும். நமக்குத்தான் வயசாச்சா, எப்போவாவது அத எடுத்து பாக்கிறப்ப மலரும் நினைவுகள் சோக கீதத்தோட வரும். அட இது நம்ம பயல சின்ன்ன்னன்ன வயசில எடுத்தது. இப்ப அவன் இத பாத்தா... ஹிஹிஹி.. போட்டோ எடுத்து அனுப்பலாமான்னு தோணும்.
ரைட் செல்போன்தான் இருக்கே, எடுத்து அனுப்பி சர்ப்ரைஸ் பண்ணலாம்ன்னு அலைபேசிய எடுப்போம். போட்டோ எடுத்தா அதுல ஒரு க்ளேர் வரும். ச்சே! என்ன செய்யறது. எப்படி எடுக்கப்பாத்தாலும் அத தவிர்க்க முடியாது. அதுவும் ப்ளாஷ் இருந்தா கேட்கவே வேணாம்.
ஏன்னா அதோட சர்பேஸ் – பரப்பு அப்படி. வர வெளிச்சத்தை திருப்பி அனுப்பும். திரும்பி அது வரும் வழில காமிராவோட கண்ணு இருந்தா படத்தில க்ளேர் வரும். உதாரணத்துக்கு படத்தை பாருங்க.



லாமினேட் செஞ்ச டாகுமென்ட்ஸ் கதியும் இதேதான்.
இத தவிர்க்க ஒரு வழி கொஞ்சம் கோணலா எடுக்கறது. ஆனா படம் மோசமா தெரியுமே!
ம்ம்ம் வருத்தப்படாதீங்க! இந்த ஆப் ஐ தரவிறக்கி நிறுவுங்க. பேரு போட்டோ ஸ்கேனர்.

ஆச்சா? இப்ப இதை துவக்குங்க. முதல்படி ப்ரேம்குள்ள படத்தை கொண்டு வரது. அடுத்து ஒரு படம் எடுக்கலாம். 


இப்ப இந்த ஆப் தானே அதை அனலைஸ் பண்ணிடும். அடுத்து இந்த வட்டத்துக்குள்ள முழு வெள்ளை வட்டம் வரா மாதிரி போனை அட்ஜெஸ்ட் செய்ப்பான்னு சொல்லும். ஒரு அம்புக்குறியும் போட்டு எந்த முழு வெள்ளை வட்டம்ன்னு காட்டும்.


ரைட். இப்ப போனை நகத்தி சொன்னதை செய்யுங்க. தானா இன்னும் படம் எடுத்துக்கும். அடுத்த வட்டத்தை காட்டும். இதே போல நாலு மூலையும் செஞ்சா வேலை முடிஞ்சது! 




இப்ப ஆப் ஒரு படத்தை எடுத்துகிட்டு க்ளேர் இருக்கற இடத்தை மத்த படத்திலேந்து எடுத்து போட்டு நிரவி படத்தை தயார் செஞ்சுடும்.
நாம் ச்சும்மா அலைபேசியாலத்தானே எடுத்தோம்? அது சரியா செவ்வகமா வராம இருக்கலாம். அதை அட்ஜஸ்ட் செய்ய ஒரு வாய்ப்பு கொடுக்கும்.மூலைகளில இருக்கற வட்டங்களை தொட்டு இழுத்து படத்தில மூலைகள் வரவேண்டிய இடத்துக்கு இழுத்து விட்டு சரி செய்யலாம். அப்புறம் டன் சொன்னா ஆச்சு.


இப்ப பையனுக்கு போட்டோவை அனுப்பி அசத்துங்க!


ஜிபோர்ட் தமிழ்



போஸ்ட் போட்டு ஒரு மாமாங்கம் ஆச்சேன்னு...ஹிஹி மாமாங்கம் எல்லாம் ஆகலை. இருந்தாலும் ரொம்ப நாளாச்சேன்னு ஒன்னு போடலாமான்னு.. ன்னு...ன்னு. நம்ம நிறைய பேருக்கு தமிழ்ல எழுத பிடிக்கும். அட! நம்ம தாய் மொழில நாம எழுதாம யார் எழுதுவாங்க? இருந்தாலும் பாருங்க இந்த அலை பேசியில .. அதாங்க செல் போன்ல,  தமிழ்ல எழுத கொஞ்சம்.... ஆமா கொஞ்சமே கொஞ்சம்தான், கஷ்டம். என்ன செய்யலாம்? என்னதான் ஹாண்ட் ரைட்டிங் வழி இருக்குன்னாலும்....
அட, பேச்சு டைப் ஆகும் என்கிறப்ப எதுக்குங்க டைப்பனும்? இல்லை தேய்க்கணும்?
ஆமா. கூகுளுக்கு ஒரு நமஸ்காரம் போட்டுட்டு வேலையை ஆரம்பிங்க. அலைபேசில நிறுவ வேண்டியது ஜிபோர்ட். இங்கே சுட்டி: https://play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin&hl=en
நூத்தி சொச்சம் எம்பி. பரவாயில்ல இல்ல?

இன்ஸ்டால் ஆயிடுத்தா? இப்ப இன்புட் ஐ கான்பிகர் செய்யலாமா?



செட்டிங்க்ஸ்ல லாங்குவேஜ் அன்ட் இன்புட் மெதட்க்கு போங்க. இது ஒவ்வொரு கம்பனி செல்போனிலேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். ஆனா அங்க போயிட்டா அப்புறம் வேலை ஒரே மாதிரிதான்.






இங்கே கூகுள் வாய்ஸ் டைப்பிங் ன்னு தெரியறதா? பாத்து வெச்சுக்குங்க.

 ஜிபோர்ட் ன்னு தெரியறதா? அதை அமுக்குங்க. 

லாங்குவேஜஸ் ஐ அமுக்குங்க. சாதாரணமா முதல் என்ட்ரி சிஸ்டம் மொழியை பயன்படுத்தச்சொல்லும். அதை நீக்குங்க.

 



அடுத்து ஆக்டிவ் இன்புட் மேதட்ல தமிழை கண்டுபிடிங்க. தமிழ் இந்தியா க்கு ஒரு செக். அப்புறம் ஸ்வைப் மாதிரி இங்க க்லைட் . அதாவது தேய்க்கற வழி. அது வேணும்ன்னா அதையும் செக் பண்ணுங்க.
 







திரும்பி வரலாம். மேலே செட்டிங்க்ஸ் ஐ ஒன்னும் செய்ய வேணாம். தமிழ்ல ஆப்லைன் டைப் வழி இன்னும் வரலை. ஆங்கிலத்துல ஆப்லைன் டைப் செய்ய முடியும்.
அதாவது தமிழ்ல பேசி டைப் ஆக இணையத்தில இருக்கணும். இப்பலாம் இது பெரிய பிரச்சினை இல்லை.
 



வாய்ஸ் டைப்பிங் ன்னு ஒன்னு முன்னே பாத்தோம் இல்ல? அதை தொட்டு உள்ளே போங்க. அங்கே லாங்குவேஜஸ் அமுக்கி உள்ளே போங்க.


தமிழ் தேர்ந்தெடுங்க.





ரைட்! ஆச்சா? சும்மா கொஞ்சம் டைப் செய்யலாமா? க்குள் ப்ளஸ்ஐ திறந்து ரைட் தேர்ந்தெடுங்க. ரைட் சம்திங்.... கீபோர்ட் வரதா? இப்ப அதில ஜிபோர்ட் தமிழுக்கு போகணும். ஸ்க்ரீன்ஷாட் பாருங்க.
போயாச்சா? இப்ப அங்கே தெரியற மைக்கை தொடுங்க. பேச ஆரம்பிக்கலாம்.




அதுக்குன்னு அந்த கால சிவாஜி கணேசன் வீர வசனம் பேசறா மாதிரி இல்லே. கொஞ்சம் நிதானம் வேணும். பேச பேச டைப் ஆகும். கொஞ்சம் தப்பு வரும்தான். பரவாயில்லை. நிறைய பேர் இதை பயன்படுத்த ஆரம்பிச்சா இம்ப்ரூவ் ஆயிடும். டைப் அடிக்கறதை விட இது பரவாயில்லை, இல்லியா?




போகிற போக்கில இன்னொன்னும் பாத்துடலாம். க வை தொட்டு இழுத்து ஆ தொட்டா கா வரும். அதே போல தொடர்ந்து இழுத்தா க்லைட் வழியில டைப்பலாம்.