ம்ம்ம் அப்புறம் என்ன? நம்ம கலைவண்ணத்தை காட்டலாமா? சின்ன வயசில பாட்டு பாடினதையும் சுவரெல்லாம் படம் வரஞ்சதையும் ஞாபக படுத்திக்கலாம். இப்ப நினைச்சாலும் அப்படி செய்ய முடியுமா? போர் பீபில் வில் லாஃப்.
கவலையே வேணாம்.
பெயின்ட் ன்னு ஒரு ப்ரோக்கிராம் விண்டோசோட இலவசமா கிடைக்குது. நம்ம தேவைக்கு இது போதும். என்ன பெரிய ரவி வர்மாவா நாம?
ஸ்டார்ட்> ஆக்சசரீஸ் ல இந்த பெய்ன்ட் நிரல் இருக்கு. அத திறக்கலாமா?
இப்படி ஒரு இடைமுகம் அதில.
இது என் விண்டோஸ் 7 ல இருக்கிற நிரல். எக்ஸ் பியை விட கொஞ்சம்
இன்னும் நல்லா இருக்குன்னு கேள்வி!
வரிசையா பார்க்கலாம்.
முதல்ல கிளிப்போர்டு. அது கீழே ஒரு அம்புக்குறி இருக்கா? இது எதுக்குன்னு நமக்குத்தான் தெரியுமே! அத சொடுக்கினா மெனு விரியும். ஆனா அது இப்ப தேவையில்லை. ஏதாவது ஒரு படத்தை வலையிலோ, இல்லை நம்ம திரையை படம் பிடிக்க செலக்ட் காபியோ அல்லது பிரிண்ட் ஸ்க்ரீன் கட்டளையோ நிறைவேத்திய பிறகு எதிலாவது அந்த படத்தை ஓட்டனுமே? அந்த படம் நம்ம கணிணியில தற்காலிக நினைவகத்தில இருக்கு. இதுக்கு க்ளிப்போர்ட் ன்னு பேரு. இதிலேந்து படத்தை எதிலாவது ஒட்டணும். இந்த பெயிண்ட் ஐ திறந்து அதிலே ஓட்டலாம். கீழே தெரியற வெள்ளை இடத்தில சொடுக்கி கண்ட்ரோல் வி அல்லது வலது சொடுக்கு பேஸ்ட்; அல்லது மேலே பாத்த கிளிப்போர்ட் சொடுக்கி அதிலே பேஸ்ட் கட்டளை. இதிலே எதை பண்ணாலும் சரிதான்.
அடுத்து இமேஜ். படத்தை மறு அளவாக்கவோ உல்டா பண்ணி போடவோ, பக்கவாட்டில திருப்பவோ பயன்படும். அதே சமயம் படத்தில குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுக்கவும் பயன்படும். தேர்ந்தெடுக்கிறதுல நீள்சதுரம் அல்லது கட்டுப்பாடில்லாமல் தேர்ந்தெடுக்க வாய்ப்புண்டு.
அடுத்து டூல்ஸ்.
இதில எழுத பென்சில் உண்டு! ரப்பர் உண்டு! தப்பா வரைஞ்ச்சுட்டா அழிச்சிடலாம்! இல்லை ஒரு பரப்பை அழிகிறதாலேயே படம் வரையலாம்.
ஒரு பக்கெட் உண்டு. இதில நமக்கு வேண்டிய வண்ணத்தை ரொப்பி ஒரு வட்டம் கட்டம் உள்ளே ஊத்தி நிரப்பலாம்!
எழுத்து கருவி உண்டு. படம் வரைந்து பாகங்களை குறின்னு சொன்னா பாகங்களுக்கு பேர் எழுதலாம்.
ஒரு கலர்பிக்கர். பார்க்க இங்க்க்பில்லர் மாதிரி. வேற படத்தில பாத்து அட, இந்த கலர் ரொம்ப நல்லா இருக்கேன்னு நினைச்சா அந்த கலரை சாம்பிள் எடுத்து பயன்படுத்தலாம்.
ஒரு பூதக்கண்ணாடியும் உண்டு. குறிப்பிட்ட இடத்தை பெரிசாக்கி வரையும் போது இன்னும் நல்லா வரையலாம்.
அடுத்த பொட்டி பிரஷ். நிறைய வகைகள் இருக்கு. கலர் பென்சில் மாதிரி, ஹைலைட் , ஏர் பிரஷ், அழகா எழுத பயன்படும் காலிக்ராபி பிரஷ் , க்ரேயான், மார்க்கர், ஆயில் பெய்ந்டிங், வாட்டர் கலர் பிரஷ் இப்படி பல வகை.
அடுத்து ஷேப்ஸ். பலவித வடிவங்கள். ஏதேனும் ஒண்ணை தேர்ந்தெடுத்து அப்புறம் கான்வாஸ் ல தீத்திப்பாருங்க! எப்படி பயன்படுத்தறதுன்னு புரிஞ்சுடும்.
அடுத்து கோட்டின் தடிமன்.
அடுத்து பின்புல முன்புலத்துக்கு ரெண்டு கலர். அடுத்து தொட்டுக்க நிறைய கலர்.. ரைட் போதும். இனிமே இஷ்டத்துக்கு எதையாவது தொட்டு கோடு வளைவு பெட்டி ... வரைஞ்சு அசத்துங்க. (ஏதாவது தப்பா வரைஞ்ச்சுட்டா கண்ட்ரோல இஜட் , அன் டூ செய்யலாம். ) பொட்டி வரைஞ்சு அத உல்டா பண்ணுங்க. ரப்பரால அழியுங்க. பொட்டில கலர் நிரப்புங்க. ஜாலியா பூந்து வெளையாடுங்க.
எனக்கு அனுப்புங்க, பிரசுரிக்கலாம்!

From paint |

அன்புள்ள திவாஜி.
ReplyDeleteபடிச்சாச்ச்.
:)))))
வரைஞ்சுட்டு அனுப்பறேனே!
ReplyDeleteவாங்க அஷ்வின், நலமா?
ReplyDelete@கீ அக்கா தாங்கீஸ்!
உற்சாகத் தகவல்களுகு நன்றி
ReplyDelete:-))
ReplyDelete