Saturday, January 4, 2014

வாட் அன் அடாசிடி! -2

போன பதிவில அடிப்படையா ரெகார்ட் செய்யறது கட் பேஸ்ட் டெலீட் எல்லாம் பாத்தோம்.
 இப்ப இன்னும் சிலதை பார்க்கலாம்.
ஒரு இடத்துல தப்பா சொன்னதை திருத்தறது எப்படின்னு பார்த்தோம். ஆனா ஏதேனும் விட்டுப்போச்சு அதை சேர்க்கணும் ன்னா என்ன செய்யலாம்? புதுசா சேர்க்க வேண்டியதை ரெகார்ட் செய்யலாம். அது இரண்டாவது தடத்துல ரெகார்ட் ஆகும் இல்லையா? இப்ப மேலே இருக்கிற தடத்துல அதுக்கு இடம் உண்டு பண்ணனும். இதுக்கு அதை வெட்டி தேவையான அளவு நகர்த்தணும். எப்படி வெட்டறது? படத்தை பாருங்க.வெட்ட வேண்டிய இடத்திலசொடுக்கி படத்தில உள்ளபடி மெனுவில ஸ்ப்ளிட் தேர்ந்தெடுத்து சொடுக்கினா ஆச்சு!


சரி இதை நகர்த்தணும்மே? அதுக்கு  முதல்ல சரியான கருவியை தேர்ந்தெடுக்கணும். சாதாரணமா இருக்கிற கர்சரால பிடிச்சு இழுத்தா அது நகராது, செலக்ட்தான் ஆகும். மேலே டைம் ஷிப்ட் டூல் ன்னு இருக்கே அதை சொடுக்குங்க. பிறகு இரண்டாவது துண்டில பிடிச்சு இழுத்தா அது நகரும். தேவையான அளவு நகர்த்திட்டு பழைய படி கர்சரை சொடுக்கிடா வேலை முடிஞ்சது!







ரெட்டை தலை அம்பு மாதிரி இருக்கறதுதான் டைம் ஷிப்ட் டூல்.




அடுத்து சேமித்தல். சாதாரணமா சேமிக்கறப்ப அது ப்ராஜக்ட்டா தான் சேமிக்கப்படும். இதை எப்படி பயன்படுத்தறது? நம்ம திருத்தங்கள் எல்லாம் முடிஞ்ச பிறகு பைல் மெனுல எக்ஸ்போர்ட் ஐ தேர்ந்தெடுக்கணும். 
 




 நான் முன்னே சொன்னபடி பிளக் இன் எல்லாம் நிறுவி இருந்தா, இப்ப படத்தில தெரிகிற தேர்வுகள் இருக்கும்.



தேவையான பைல் வகையை தேர்ந்தெடுத்தா அடுத்து இன்னும் சில விவரங்களை சேர்க்க வாய்ப்பு கொடுக்கும். 


அதுல ரெகார்டிங் செஞ்ச ஆர்டிஸ்ட்.. க்கும்....... நம்மபேரு இது ஒரு சீரியல் ரெகார்டிங்க்ன்னா எத்தனையாவது, அதாவது எண் ன்னு விவரங்களை சேர்க்கலாம். அடுத்து சேவ் ஐ சொடுக்க அது சேமிக்கப்படும். ம்ம்ம் முடிஞ்சா இன்னும் கொஞ்சம் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

1 comment:

  1. நாய்ஸ் ரிமூவல், கம்ப்ரஷ்ஷன் - உபயோகமான டூல்ஸ்
    எனக்கு குரல் ஏற்றத்தாழ்வு அதிகம். கம்ப்ரஷ்ஷன் மிகவும் உபயோகப்பட்டது.
    - சௌமியன்

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!