Thursday, November 10, 2016

கணினியிலிருந்து அலைபேசி/ டேப்க்கு கோப்புகளை மாற்ற.

ஹலோ, எப்படி இருக்கீங்க? என்னது? நா யாரா? என்னங்க அநியாயம்? கொஞ்ச நாளா…. சரி சரி, மாசமா போஸ்ட் ஒண்ணும் போடலைதான். அதுக்குன்னு இப்படி என்னை மறந்துட்டா எப்படி?
எப்படி இருக்கீங்க? உங்க அலைபேசியை அப்க்ரேட் பண்ணியாச்சா? ரைட்டு!
கொஞ்ச நாள் முன்னாடி பாருங்க, என் அப்பாவுக்கு மெய்ல் பாக்க தோதா ஒரு டேப் வாங்கினேன். டேப் ந்னா என்னன்னு கேக்க மாட்டீங்க இல்லே? ம் நினைச்சேன். நீங்கதான் என் ப்ளாக் வாசிக்கறவர் ஆச்சே? அப்டேட்டடா இருப்பீங்க.
ரைட். இப்ப அப்பா மெய்ல் பாக்கிற நேரம் போக மத்தபடி அது என் கையிலதான் இருக்கு. எனக்கே ம்க்கும், ஆமா எனக்கே அலைபேசில மெய்ல் பாக்கிறது கஷ்டமாத்தான் இருக்கு. எப்ப பாத்தாலும் கணினியிலேயே பாத்துண்டு இருக்க முடியுமா?
இப்ப சின்ன பிரச்சினை ஒண்ணு வந்தது. இப்ப மறதி அதிகமாயிடுத்தா? முன்ன்ன்ன்ன்னே படிச்ச புத்தகமெல்லாம் இப்ப படிக்க முடியறது. எல்லாம் புதுசா இருக்கு! என் அபிமான எழுத்தாளர்களை மட்டும் நினைவு இருக்கு. இணையத்துல தேடிப்பாத்து இவங்களோட ஈபப் புத்தகங்களை கணினில டவுன்லோடிட்டேன். இப்ப டேப் வந்த பிறகு அதுல படிக்கலாம்ன்னு தோணித்து. சரி, இதை எல்லாம் எப்படி டேபுக்கு மாத்தறது? யூஎஸ்பில கனக்ட் பண்ணா விண்டோஸ் கடுப்படிக்கறது. சரியா வேலை செய்யலை.
ஏன்யா, டேபும் வைஃபைல மோடத்தோட கனக்ட் ஆகறது; கணினியும் மோடத்தோட இணைஞ்சு இருக்கு. ஏன் இது வழியா மாத்த முடியாதா?
இதுக்காக தேட ஆரம்பிச்சேன்.
சில ஆப் ஒரு வை மட்டும் வேலை செய்யறது. சிலது படம், இசை மட்டும் மாத்தறேங்கிறது.
கடைசில ப்ளஸ் நண்பர்களை கேட்டு ஒரு நல்ல ஆப் பிடிச்சேன். ஆனா இது எப்படி வேலை செய்யறதுன்னு பிடிபட கொஞ்ச நாள் ஆச்சு. என்ன செய்யறது? வயசாச்சு. முன்ன மாதிரி ஷார்ப்பா இல்லே.
ரைட் இப்ப டுடோரியலுக்கு வருவோம்.
கணினியில நிறுவ வேண்டியது: https://update.pushbullet.com/pushbullet_installer.exe
க்ரோமுக்கும் ஃபயர்ஃபாக்ஸுக்கு என்க்ஸ்டென்ஷன்ஸ் இருக்கு.

டேப் அல்லது ஆண்ட்ராய்ட் அலைபேசில நிறுவ வேண்டிய ஆப்
ஆண்ட்ராய்ட் வெர்ஷன் 5 க்கு மேலே இருக்கணும். அப்பதான் இன்ஸ்டால் ஆகும்.
ஆச்சா?
பைல் மாத்த ஒரு வழியை பார்க்கலாம்.
இப்ப ஆண்ட்ராய்ட் கருவியில போர்டல் ந்னு இருக்கிற ஆப் ஐ இயக்குங்க. உங்க கூகுள் அக்கவுண்ட் ஐ கொடுத்து செட் பண்ணுங்க. இல்லை ஃபேஸ்புக் அக்கவுண்ட் கூட கொடுக்கலாம்
வைஃபை மூலமா மோடத்தோட கனெக்ட் பண்ணுங்க. அப்படி செய்யலைன்னா செய்யட்டுமான்னு கேக்கும். சரின்னு சொல்லுங்க.  ஸ்கேன் ந்னு சொல்லும். படத்தை பாருங்க.





கணினில  portal.pushbullet.com க்கு போங்க. வாட்ஸ்ஸப் வெப் மாதிரியே ஒரு க்யூஆர் கோட் தெரியும். இப்ப உங்க ஆண்ட்ராய்ட் கருவில அதை போட்டோ பிடிங்க. ஹிஹிஹி பிடிக்க வேணாம். ஸ்கேன் ஐ தொட்டுட்டு சும்மா காமிரால காட்டினா போதும்.






ரைட். இப்ப அது இங்கே பைல்ஸ் ஹிஹிஹி மூலம் இல்லே, files… எல்லாம் இங்கே இழுத்து விடுங்கன்னு சொல்லு. விண்டோஸ் எக்ஸ்ப்லோரரை திறந்து மாத்த வேண்டியதை கண்டு பிடிச்சு, இந்த உலாவி விண்டோல இழுத்து விடுங்க. அவ்ளோதான். கட கடன்னு எல்லாம் மாறிடும்!
இன்னும் இருக்கு. அப்புறம் பாக்கலாமோ என்னவோ!  

1 comment:

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!