Monday, November 19, 2012

கோளாறான எழுத்துரு சமாசாரம்...

சில சமயம் திடீர்ன்னு சில பிரச்சினைகள் வரும். ஏதாவது டாக்குமென்ட் எழுதறப்ப வித்தியாசமான ஒண்ணு எழுத வேண்டி வரலாம். சரியா ஶிவன் ன்னு எழுத தோணலாம். எப்படி எழுதறது? shன்னு அடிச்சா ஷ் தான் வரும்
இதுக்குத்தான் இன்சர்ட் காரெக்டர் ன்னு ஒரு வசதி இருக்கு. ஓபன் ஆபீஸ் - என்ன வேர்ட்டுல வேணுமா? சார் எதுக்கு சார் வீணா கர்மாவை சேத்துக்கணும். காசு கொடுத்து மைக்ரோசாப்ட் ஆபீஸ் வாங்கறதுக்கு இலவசமா கிடைக்கிற ஓபன் ஆபீஸை நிறுவுங்க சார். நீங்க நினைக்கிறபடியே எல்லாம் எழுத முடியும்.
என்ன சொன்னேன்? ஓபன் ஆபீஸ் ரைட்டர்- அதான் வேர்ட் க்கு ஈக்வல் - ல டாக்குமென்ட் மெனு ல இன்சர்ட் ல கீழே பாருங்க. Special Character ன்னு இருக்கா அதை சொடுக்குங்க. இப்ப நீங்க பயன்படுத்தற எழுத்துரு - என்ன? புரியலையா? ஃபான்ட் சார் ஃபான்ட். அதான். எழுத்துரு தொகுதில இருக்கற எல்லா எழுத்துருவும் தெரியும். நீங்க தேடறது அதுல இருக்கான்னு பாத்து தேர்ந்தெடுத்து ஓகே கொடுத்தா வேலை முடிஞ்சது.

ஶ வேணாம் ஶி வேணுமே ன்னு சொன்னா, பிரச்சனையே இல்லை. முதல்ல ஶ வை தேர்ந்தெடுத்துட்டு அப்புறம் பக்கத்திலேயே இருக்கு பாருங்க ி அத தேர்ந்தெடுத்தா ரெண்டும் ஒட்டிக்கும், ஓகே கொடுக்க டாக்குமென்ட் ல என்டர் ஆயிடும்.






சரி. இப்படி இல்லாம நமக்கு தெரியாத எழுத்துரு வேணும்ன்னா?

ச்சும்மா க்ரீக் ஆல்பா ன்னு வெச்சுக்கலாமே? இத எப்படி எழுதறது?

என்னய்யா இப்படி கோளாறா எல்லாம் கேட்டா எப்படி? ஆல்பா ன்னு எழுதறது ன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான். இருந்தாலும் α ன்னு எழுத எப்படின்னு கொஞ்சம் யோசிக்கணும்.

இதுக்கு க்ரீக் எழுத்துரு என்ன நம்ம கணினில இருக்குன்னு தெரிஞ்சுக்கணும். கூகுளாரை கேட்டா சொல்லபோறாரு. நீங்க கேட்கச்சொல்லி கஷ்டப்படுத்தாம நானே சொல்லறேன். அது எந்த ஆங்கில எழுத்துருவிலேயுமே கூட இருக்கு. முன்னே சொன்ன மாதிரி எழுத்துருக்கள் பட்டியலை பாத்தா முதல்ல பேசிக் latin, அப்புறம் latin 1, latin extended ன்னு latin ஆ போய் அப்புறம் பேசிக் க்ரீக் வரும் ஆங்! அதுல பாருங்க, ஆல்பா இருக்கும். டபுள் க்ளிக் அல்லது தேர்ந்தெடுத்து ஓக்கே, முடிஞ்சது கதை.

இது போகட்டும். இன்னும் அட்வான்ஸ்ட் ஆ போகலாம். பின்ன தொண்டு கிழம்ன்னா சும்மாவா? மத்தவங்களுக்கு போறும் என்கிறது நமக்கு போறுமா?
கணக்கு எழுத எனக்கு மேக்ரான் வேணும்ன்னு கேட்கிறவங்களுக்கு என்ன செய்யலாம்?

முதல்ல மேக்ரான்னா என்னய்யா?
Ȳ  ȳ  T̄  t̄
இதில மேலே சின்ன கோடு போட்டு இருக்கே, கோவில்ல கொடுக்கிற விபூதியை சின்னதா அரை சென்டிமீட்டர் இட்டுக்கிறா மாதிரி அதான் மேக்ரான். இதே போல இன்னொன்னு ஓவர் லைன். இது முக்கால் சென்டிமீட்டர். 
Y̅  y̅   T̅   t̅
ரெண்டுத்துக்கும் சடில் வித்தியாசம் இருக்கு இல்லே?
மேக்ரான் மேலே போடற சின்ன கோடு. ஒவர்லைன் கொஞ்சம் பெரிசு.
இத எப்படி தெரிஞ்சுக்கிறதுன்னா.... விஷயம் ஒண்ணுமில்லை. கூகுள்ள macron ன்னு டைப் பண்ணா சொல்லிட்டு போகுது!

அடுத்து அதுக்கான யூனிகோட் நம்பர் என்னன்னு கண்டு பிடிக்கணும். இது கொஞ்சம் கஷ்டம். கூகுளாரை கொஞ்சம் படுத்தினா பாவம் போனாபோறதுன்னு சொல்லிடுவார்.
எந்த மொழி ன்னு தெரிஞ்சிருந்தா இங்கே போய், ஸ்க்ரிப்டை கண்டுபிடிச்சு சொடுக்கி, அந்த மொழியை பத்தின விக்கி பக்கத்துக்கு போய் பாத்தா அங்கே மேலேயே வலப்பக்கம் இருக்கிற பெட்டியில பாத்து ரேஞ்ச் கண்டு பிடிச்சுடலாம். அப்புறம் இங்கே போய் அந்த ரேஞ்ச் இருக்கிற பக்கத்தை பாத்து எண்ணை கண்டுபிடிக்கலாம். உதாரணமா தமிழுக்கு
ன்னு போட்டு இருக்கு. அத்ருஷ்டம் இருந்ததால் பக்கத்திலேயே ஒரு பிடிஎஃப் லிங் இருக்கு. அதை தட்டி தரவிறக்கி பாத்தாலே எழுத்துருக்களும் அதன் கோட் உம் தெரியறது.



இந்த நாலு இலக்க எண்ணை கண்டு பிடிச்சுட்டா அப்புறம் சுலபம்தான்.

லீனக்ஸ் (gtk+ இருந்தா)  ரைட்டர்ல முதல்ல எழுத்தை டைப் செய்யலாம். Y. ஆச்சு. அப்புறம் ஸ்பேஸ்விடாம கண்ட்ரோல் ஷிப்ட் விசைகளை அழுத்திக்கிட்டு இன்னொரு கையால டைப் செய்யலாம். U அப்புறம் நாலு இலக்க எண். அவ்வளோதான் விசைகளை விட்டதும் சரியான குறி சேர்ந்துடும். உதாரணமா Ȳ க்கு Y கண்ட்ரோல் ஷிப்ட் U0304.

மைக்ரோசாப்ட் விண்டோஸ்ல :
ரைட்டர்ல .... சரி சரி ..... வேர்டில் கூடத்தான் ….
ஆல்ட் விசையை அழுத்தி பிடிச்சுக்கணும்.
வலது பக்கம் கீபோர்ட்ல இருக்கிற ந்யூமெரிக் கீபாட்ல + ஐ அழுத்தி அப்புறம் யூனிகோட் அறும எண் - ஹிஹி, அதான் ஹெக்ஸாடெசிமல் - யூனிகோட் எண்ணை ந்யூமெரிக் கீபாட்ல தட்டணும். ஆல்ட் விசையை விட்டுடலாம். முடிஞ்சது.
இது கஷ்டமா இருக்கு அல்லது வேலை செய்யலைன்னா இங்கே போய் பாத்து தரவிறக்கி நிறுவுங்க. இது நல்லாவே வேலை செய்யுது!
முயற்சி செய்து பாருங்க.
இதே போல எந்த யூனிகோட் அறும குறியீடு தெரிஞ்ச எழுத்துருவுக்கும் இதே மாதிரி டைப் செய்யலாம்.

Friday, November 16, 2012

அன்ட்ராயர் - 1

key words: android, ICS, beginners, elders, howto android phone.

ரொம்ப நாளாச்சு இல்லே பாத்து? லொக், லொக்! நல்லா குளிருது. அந்த ஷாலை எடும்மா! ரைட், எப்படி இருக்கீங்க? சௌக்கியமா? நான் நல்லா இருக்கேன். லொக், லொக்!

எவ்வளோ நாள் கணினியை கட்டிகிட்டு அழறது? இன்னும் சிம்பிளா ஏதாவது இருந்தா தேவலைன்னு நினைச்சா.... ஒரு அன்ட்ராயர் வாங்கலாம்.

என்னது? அது ஏற்கெனெவே ஒரு டஜன் இருக்கா!

, நான் அந்த உள்ளாடையை சொல்லலை. ஆண்ட்ராய்ட் ன்னு சொல்லறாங்களே, அதைத்தான் சொன்னேன். அப்படித்தான் நம்மோட இன்னும் நாலு வருஷத்துல சேந்துக்கப்போற பல்லாஜி பாசுதேவ்மூர்த்தி பேர் வெச்சு இருக்கார். அது நல்லா இருக்கு. அதனால் அப்படியே வெச்சுக்கலாம்.

அதாவது இது கணினியும் இல்லை; சாதா செல்போனும் இல்லை; காமிராவும் இல்லை. ஆனா இது எல்லாமுமா இருக்கு. எல்லாமா இருக்கற இதுக்கு பரப்ரம்மம் ன்னு பேர் வெக்கக்கூட யோசிச்சேன். அப்புறம் வாணாம்ன்னு பல்லாஜி வெச்ச பேரையே வெச்சுட்டேன். இபப்டி நிறைய வேலையை செய்யறதாலே அத ஸ்மார்ட் போன் ன்னு சொல்லறாங்க. ஸ்மார்ட் கேர்ல் ன்னு நாம நம்ம பேத்தியை சொல்லறதில்லையா? அது மாதிரி.

அதாவது என்ன செய்யணும்ன்னா நம்ம பென்ஷன்லேந்து மாசா மாசம் ஒரு தொகையை பொண்டாட்டிக்கு தெரியாம சேத்து வெச்சு ஒரு பத்தாயிரம் பதினைஞ்சாயிரம் தேத்திடணும். சேத்தாச்சா? ரைட். அப்புறம் வலையில மேயணும். சாட்ல நாலு பேரை ஒபினியன் கேட்கணும். கூகுள் ப்ளஸ்ல ரெண்டு ப்ளச் விட்டு ஐபோன் அன்ட்ராயர் ரசிகர்களை எல்லாம் பகைச்சுகொண்ட பிறகு நாமா கடைக்கு போய் எத வாங்கலாம்ன்னு முடிவு எடுக்கணும்! அதானே நம்ம வழக்கம்? :-)

எத வாங்கலாம்ன்னு அப்புறம் பாக்கலாம். இப்ப அன்ட்ராயரை வெச்சுகிட்டு என்னெவெல்லாம் செய்யலாம்ன்னு பாத்துடலாம். அப்புறமா நம்ம தேவையை பாக்கலாம்.
அன்ட்ராயர் நம்ம கையில் வந்த பிறகு ச்சும்மா அத பாத்தா ஒண்ணும் அட்ராக்டிவ்வாவே இல்லாம இருக்கலாம். வெறும் கருப்பா ப்லாட்டா ஒரு கையடக்க கருவி. அது சும்மா வெளியே கிடந்தா என் பேத்தி கூட சீந்தறதில்லை.

எல்லாம் ஸ்விட்ச் ஆன் செய்யற வரைக்கும்!

அந்த ஸ்விட்ச் எங்கே இருக்குன்னு கடைக்காரரை நினைவா கேட்டு தெரிஞ்சுக்குங்க. அனேகமா நீளவாட்டுப்பக்கம் ஒண்ணுல (வலப்பக்கம்?) இருக்கும். கொஞ்சம் தடவிப்பாத்து ரெட்டை ஸ்விட்ச்சா இருந்தா அது ஒலிக்கான ஸ்விட்ச். சின்னதா வலது பக்கமா இருகிறது … ஆங் அதான். அமுக்குங்க. அட திரை ஜம்முன்னு ஒளிருதே! உடனே கைய வெச்சா ஒண்ணும் நடக்காது. திரைய பூட்டி வெச்சு இருக்கும். என் போனில தெரியர ஒளிவட்டத்தை தொட்டு... சும்மா தொடுங்க! ஒண்ணும் செய்யாது, பயமில்ல... வலப்பக்கமா இழுத்து பூட்டு மேலே விட்டா பூட்டு திறந்துடும்சிலதுல கீழே இழுக்கணுமின்னு சொல்றாங்க ரைட்!

இதோட முன் பக்கம் மூணு ஸ்விட்ச்தான் வழக்கமா தெரியும். இடது பக்கம் வளைஞ்ச அம்புக்குறி முன்னே இருந்த இடத்துக்கு போலாம்ன்னு சொல்லுது. இதுவே கீபோர்டு அல்லது மெனுவில இருந்தா அதை மூடச்சொல்லுது. நடுவில் கட்டம் கட்டமா இருக்கறது மெனு லான்ச்சர் ஸ்விட்ச். வீடு மாதிரி படம் போட்டது வீட்டு … சாரி ஹோம் ஸ்விட்ச். அதாவது எங்கே இருந்தாலும் இந்த முதல்ல தெரியற ஸ்க்ரீனுக்கு திரும்பி வந்துடலாம். கொஞ்சம் பழைய செட்டுன்னா இது மென் பொத்தான் .... ஹிஹிஹி .... ஸாப்ட் பட்டனா இருக்கும். இன்னும் லேட்டஸ்ட் ன்னா முன் பக்கம் திரையை தவிர ஒண்ணுமே இருக்காது. இந்த மூணுமே அதுலதான் கீழே இருக்கும். ரைட்! அடுத்தது? அடுத்த பதிவில...

Monday, October 8, 2012

ப்லாக் பேக் அப்!

சமீபத்தில ஒரு சகோதரி அப்பப்ப வலைப்பூ பக்கங்கள் காணாம போகுது. அதனால் எப்படி இதை பேக் அப் செய்யறதுன்னு கேட்டார்.
இதெல்லாம் சின்ன பசங்களை கேட்டு பிரயோசனம் இல்லே! நம்ம மாதிரி தொண்டு கிழத்த கேக்கணும்.

இந்த வேலை ரொம்பவே சுலபம்தான்.
டேஷ் போர்ட் ல உங்க ப்லாகுக்கு போங்க.
இடது பக்கம் செட்டிங்க்ஸ் ல கீஈஈஈஈஈஈஈஈழே செட்டிங்க்ஸ் ன்னு இருக்கு. அத சொடுக்குங்க.
 


அது விரிஞ்சு இப்ப இடது பக்கம் செட்டிங்க்ஸ் ல கீஈஈஈஈஈஈஈஈழே  அதர் ன்னு இருக்கு. அதயும் சொடுக்குங்க.

 

கீழே ப்லாக் டூல்ஸ் இருக்கு.  இம்போர்ட், எக்ஸ்போர்ட், டெலீட். அதுல டெலீ..... ஹிஹி செஞ்சுறாதீங்க! இம்போர்ட்ன்னா கீழிறக்கறதுதானே? அத சொடுக்குங்க.


வழி காட்டி திறக்கும். எங்கே சேமிக்கணும்ன்னு கொடுத்து நாம இயந்திரம் இல்லன்னு நிரூபிச்சு - தப்பு தப்பா ஏதாவது பண்ணா இயந்திரம் இல்லைன்னு நிரூபணம் ஆகிடும். அத விட்டுட்டு....-  அங்க இருக்கற நம்பர் எழுத்தெல்லாம் எழுதச்சொல்லறாங்க! எழுதுவோம்.

 

அப்புறம் இம்போர்ட் ப்லாக்ன்னு சொடுக்கினா தரவிறங்கிடும். அப்புறமா ஏதாவது கோளாறாகி ப்லாக் காணாம போச்சுன்னு இதே விசார்ட்ல எக்ஸ்போர்ட் ன்னு சொல்லி தரவேத்திடலாம்.