Monday, November 19, 2012

கோளாறான எழுத்துரு சமாசாரம்...

சில சமயம் திடீர்ன்னு சில பிரச்சினைகள் வரும். ஏதாவது டாக்குமென்ட் எழுதறப்ப வித்தியாசமான ஒண்ணு எழுத வேண்டி வரலாம். சரியா ஶிவன் ன்னு எழுத தோணலாம். எப்படி எழுதறது? shன்னு அடிச்சா ஷ் தான் வரும்
இதுக்குத்தான் இன்சர்ட் காரெக்டர் ன்னு ஒரு வசதி இருக்கு. ஓபன் ஆபீஸ் - என்ன வேர்ட்டுல வேணுமா? சார் எதுக்கு சார் வீணா கர்மாவை சேத்துக்கணும். காசு கொடுத்து மைக்ரோசாப்ட் ஆபீஸ் வாங்கறதுக்கு இலவசமா கிடைக்கிற ஓபன் ஆபீஸை நிறுவுங்க சார். நீங்க நினைக்கிறபடியே எல்லாம் எழுத முடியும்.
என்ன சொன்னேன்? ஓபன் ஆபீஸ் ரைட்டர்- அதான் வேர்ட் க்கு ஈக்வல் - ல டாக்குமென்ட் மெனு ல இன்சர்ட் ல கீழே பாருங்க. Special Character ன்னு இருக்கா அதை சொடுக்குங்க. இப்ப நீங்க பயன்படுத்தற எழுத்துரு - என்ன? புரியலையா? ஃபான்ட் சார் ஃபான்ட். அதான். எழுத்துரு தொகுதில இருக்கற எல்லா எழுத்துருவும் தெரியும். நீங்க தேடறது அதுல இருக்கான்னு பாத்து தேர்ந்தெடுத்து ஓகே கொடுத்தா வேலை முடிஞ்சது.

ஶ வேணாம் ஶி வேணுமே ன்னு சொன்னா, பிரச்சனையே இல்லை. முதல்ல ஶ வை தேர்ந்தெடுத்துட்டு அப்புறம் பக்கத்திலேயே இருக்கு பாருங்க ி அத தேர்ந்தெடுத்தா ரெண்டும் ஒட்டிக்கும், ஓகே கொடுக்க டாக்குமென்ட் ல என்டர் ஆயிடும்.






சரி. இப்படி இல்லாம நமக்கு தெரியாத எழுத்துரு வேணும்ன்னா?

ச்சும்மா க்ரீக் ஆல்பா ன்னு வெச்சுக்கலாமே? இத எப்படி எழுதறது?

என்னய்யா இப்படி கோளாறா எல்லாம் கேட்டா எப்படி? ஆல்பா ன்னு எழுதறது ன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான். இருந்தாலும் α ன்னு எழுத எப்படின்னு கொஞ்சம் யோசிக்கணும்.

இதுக்கு க்ரீக் எழுத்துரு என்ன நம்ம கணினில இருக்குன்னு தெரிஞ்சுக்கணும். கூகுளாரை கேட்டா சொல்லபோறாரு. நீங்க கேட்கச்சொல்லி கஷ்டப்படுத்தாம நானே சொல்லறேன். அது எந்த ஆங்கில எழுத்துருவிலேயுமே கூட இருக்கு. முன்னே சொன்ன மாதிரி எழுத்துருக்கள் பட்டியலை பாத்தா முதல்ல பேசிக் latin, அப்புறம் latin 1, latin extended ன்னு latin ஆ போய் அப்புறம் பேசிக் க்ரீக் வரும் ஆங்! அதுல பாருங்க, ஆல்பா இருக்கும். டபுள் க்ளிக் அல்லது தேர்ந்தெடுத்து ஓக்கே, முடிஞ்சது கதை.

இது போகட்டும். இன்னும் அட்வான்ஸ்ட் ஆ போகலாம். பின்ன தொண்டு கிழம்ன்னா சும்மாவா? மத்தவங்களுக்கு போறும் என்கிறது நமக்கு போறுமா?
கணக்கு எழுத எனக்கு மேக்ரான் வேணும்ன்னு கேட்கிறவங்களுக்கு என்ன செய்யலாம்?

முதல்ல மேக்ரான்னா என்னய்யா?
Ȳ  ȳ  T̄  t̄
இதில மேலே சின்ன கோடு போட்டு இருக்கே, கோவில்ல கொடுக்கிற விபூதியை சின்னதா அரை சென்டிமீட்டர் இட்டுக்கிறா மாதிரி அதான் மேக்ரான். இதே போல இன்னொன்னு ஓவர் லைன். இது முக்கால் சென்டிமீட்டர். 
Y̅  y̅   T̅   t̅
ரெண்டுத்துக்கும் சடில் வித்தியாசம் இருக்கு இல்லே?
மேக்ரான் மேலே போடற சின்ன கோடு. ஒவர்லைன் கொஞ்சம் பெரிசு.
இத எப்படி தெரிஞ்சுக்கிறதுன்னா.... விஷயம் ஒண்ணுமில்லை. கூகுள்ள macron ன்னு டைப் பண்ணா சொல்லிட்டு போகுது!

அடுத்து அதுக்கான யூனிகோட் நம்பர் என்னன்னு கண்டு பிடிக்கணும். இது கொஞ்சம் கஷ்டம். கூகுளாரை கொஞ்சம் படுத்தினா பாவம் போனாபோறதுன்னு சொல்லிடுவார்.
எந்த மொழி ன்னு தெரிஞ்சிருந்தா இங்கே போய், ஸ்க்ரிப்டை கண்டுபிடிச்சு சொடுக்கி, அந்த மொழியை பத்தின விக்கி பக்கத்துக்கு போய் பாத்தா அங்கே மேலேயே வலப்பக்கம் இருக்கிற பெட்டியில பாத்து ரேஞ்ச் கண்டு பிடிச்சுடலாம். அப்புறம் இங்கே போய் அந்த ரேஞ்ச் இருக்கிற பக்கத்தை பாத்து எண்ணை கண்டுபிடிக்கலாம். உதாரணமா தமிழுக்கு
ன்னு போட்டு இருக்கு. அத்ருஷ்டம் இருந்ததால் பக்கத்திலேயே ஒரு பிடிஎஃப் லிங் இருக்கு. அதை தட்டி தரவிறக்கி பாத்தாலே எழுத்துருக்களும் அதன் கோட் உம் தெரியறது.



இந்த நாலு இலக்க எண்ணை கண்டு பிடிச்சுட்டா அப்புறம் சுலபம்தான்.

லீனக்ஸ் (gtk+ இருந்தா)  ரைட்டர்ல முதல்ல எழுத்தை டைப் செய்யலாம். Y. ஆச்சு. அப்புறம் ஸ்பேஸ்விடாம கண்ட்ரோல் ஷிப்ட் விசைகளை அழுத்திக்கிட்டு இன்னொரு கையால டைப் செய்யலாம். U அப்புறம் நாலு இலக்க எண். அவ்வளோதான் விசைகளை விட்டதும் சரியான குறி சேர்ந்துடும். உதாரணமா Ȳ க்கு Y கண்ட்ரோல் ஷிப்ட் U0304.

மைக்ரோசாப்ட் விண்டோஸ்ல :
ரைட்டர்ல .... சரி சரி ..... வேர்டில் கூடத்தான் ….
ஆல்ட் விசையை அழுத்தி பிடிச்சுக்கணும்.
வலது பக்கம் கீபோர்ட்ல இருக்கிற ந்யூமெரிக் கீபாட்ல + ஐ அழுத்தி அப்புறம் யூனிகோட் அறும எண் - ஹிஹி, அதான் ஹெக்ஸாடெசிமல் - யூனிகோட் எண்ணை ந்யூமெரிக் கீபாட்ல தட்டணும். ஆல்ட் விசையை விட்டுடலாம். முடிஞ்சது.
இது கஷ்டமா இருக்கு அல்லது வேலை செய்யலைன்னா இங்கே போய் பாத்து தரவிறக்கி நிறுவுங்க. இது நல்லாவே வேலை செய்யுது!
முயற்சி செய்து பாருங்க.
இதே போல எந்த யூனிகோட் அறும குறியீடு தெரிஞ்ச எழுத்துருவுக்கும் இதே மாதிரி டைப் செய்யலாம்.

No comments:

Post a Comment

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!