Thursday, January 6, 2011

மென்பொருள் நிறுவல்....


சரி, இணையத்துக்கு திரும்பலாம். நிறைய இலவச மென்பொருட்கள் இங்கே கொட்டிக்கிடக்கு. ஒண்ணு ரெண்டு தரவிறக்கி எப்படி நிறுவறதுன்னு பார்க்கலாம். பல எச்சரிக்கைகளை முன்னேயே சொல்லி இருக்கேன். முதல்லே ஆன்டி வைரஸ் ஐ அப்டேட் செய்துக்கணும். மென்பொருளை நம்பத்தகுந்த தளத்திலேந்து தரவிறக்கணும். தரவிறக்கின உடனே வைரஸ் இருக்கான்னு சோதிக்கணும். அப்புறமா நிறுவணும். சில தரவிறக்க மென்பொருட்கள் இதை தானியங்கியாவே செய்யும்.
சிலது ஸ்டாண்ட் அலோன் அப்ளிகேஷன் என்பாங்க. இதுக்கு நிறுவல் எல்லாம் ஒண்ணும் வேணாம். அது இயங்க தேவையான நூலகங்கள் அதிலேயே இருக்கு. நூலகங்கள்? இதென்னப்பா, மென் பொருள இயக்க லைப்ரரி எதுக்கு?
ம்ம்ம்ம்ம்ம்.... இப்படி யோசிச்சு பாருங்க.
மென்பொருட்களை நமக்கும் கேகய ராஜாவுக்கும் புரியாத சில பாஷையில எழுதறாங்க. கணினிகிட்டே வரிசையா இதை பண்ணு, அடுத்து இதை பண்ணு ன்னு சொல்லற ரீதியிலே இருக்கும். பல இடங்களில திருப்பி திருப்பி ஒரே மாதிரி இயக்கங்கள் ஒரு தொகுதியா வரும் இல்லையா? அதை ஒரே இடத்திலே போட்டு இங்க போய் என்ன செய்யனும்ன்னு பாத்து செஞ்சுட்டு வா ன்னு சொல்லும். இது ஒரு லைப்ரரிக்கு போய் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை எடுத்து என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுகிட்டு வர மாதிரி. அதான் லைப்ரரி.
எல்லா கட்டளைகளும் அடங்கி நிறுவல் தேவையில்லாதது ஒரு வகைன்னா இன்னொரு வகை, விண்டோஸ்லே இருக்கிற வசதிகள், நூலகங்கள் எல்லாத்தையும் பயன்படுத்தி வேலை செய்யறது. மற்றொரு வகை தேவையான லைப்ரரிகள் எல்லாத்தையும் புதுசா நிறுவறது. இதுக்குள்ளே ரொம்ப போக தேவையில்லை.
மெடாபேட் (metapad) ன்னு ஒரு நல்ல மென்பொருள் தரவிறக்கி இயக்கிப்பாருங்க! இது ஒரு ஸ்டாண்ட் அலோன் அப்ளிகேஷன். தனியாகவே பயன்படுத்தலாம். தரவிறக்கி இரட்டை சொடுக்கு சொடுக்குங்க! நோட்பேட் மாதிரியே திறக்கும். என் லினக்ஸ்லே கூட வைன் உடன் சேர்ந்து வேலை செய்யுது.
உங்க கணினியிலே இருக்கிற நோட்பேடை கண்டு பிடிச்சு அதுக்கு பேரை மாத்தி இதுக்கும் நோட்பாட் ன்னு பேரை மாத்தி அது இருந்த இடத்திலே இதை வெச்சுட்டா இன்னும் சூப்பர். உங்க நோட்பேட் இப்ப அட்டகாசமா வேலை செய்யும்... இன்னும் பல வசதிகளோட!
தரவிறக்கினது googletamilinputsetup.exe ன்னு வெச்சுக்கலாம். செய்ய வேண்டியது எல்லாம் அதை கண்டு பிடிச்சு சொடுக்க வேண்டியதுதான். இது உங்க கணினியை பாதிக்கும், நிச்சயமா நிறுவணுமான்னு விண்டோஸ் கேக்கும். உங்க இஷ்ட தெய்வத்தை வேண்டிகிட்டு யெஸ் ன்னு சொடுக்குங்க. நிறுவி தேவையான கோப்பை எல்லாம் பிரிச்சு வெச்சுகிட்டு எங்க நிறுவ ன்னு கேக்கும். சாதாரணமா அது சொல்கிற இடத்தையே ஒத்துக்கலாம். C\Programs ன்னு சாதாரணமா சொல்லும். C லே இடம் இல்லைன்னு தோணித்துன்னா வேற பகிர்வுலே கூட நிறுவலாம். தப்பில்லை.
இடத்தை காட்டினதும் உன் அப்பா பேரென்ன அம்மா பேரென்னன்னு எல்லாம் கேட்டு - சரி சரி கொஞ்சம் ஓவரா போயிட்டேன் - மேலே தேவையான தகவல்கள் - மல்மேசையிலே ஐகான் வேணுமா, டாஸ்க் பாரிலே ஷார்ட்கட் வேணுமா; எல்லாம் கேட்டுட்டு, அது தப தபன்னு நிறுவிவிட்டு முடிச்சாச்! ன்னு சொல்லும். க்ளோஸ் பொத்தானை அமுக்கி வெளியேற வேண்டியதுதான்.
சில சமயம் நடுவிலே இலவசமா இந்த டூல்பார் நிறுவறேன்; செர்ச் இஞ்ஜின் நிறுவறேன்னு எல்லாம் சொல்லக்கூடும். வாணாம்ன்னு சொல்லுங்க. ஒரு வேளை இன்ஸ்டால் ப்ளா ப்லா ப்ளாஆன்னு சொல்லி பக்கத்திலே ஒரு சின்ன பொட்டி போட்டு அதில் டிக் அடிச்சு இருந்தா அந்த டிக் ஐ சொடுக்கி நீக்குங்க. அப்புறமா நெக்ஸ்ட் சொல்லிக்கலாம். நிறுவிட்டா அப்புறம் அதை நீக்கறது கஷ்டம்!
சிலது மேம்படுத்திய பதிப்பை நிறுவிக்கோயேன். அதுல பலான வசதிகளிருக்குன்னு சொல்லும். சரின்னா அது வலைதளத்துக்கு கொண்டு போய் தரவிறக்கும் முன்னேயோ பின்னேயோ காசு கேட்கும். சிலது இலவசமா ரிஜிஸ்டர் செய்துக்க சொல்லும்.
பயப்படாம செய்து பாருங்க!

2 comments:

  1. இதுக்கெல்லாம் பயப்பட்ட எப்பூடி?? அந்த மெடாபாட் தான் தெரியாது, முயற்சி பண்ணிப்பார்க்கலாம் , ம்ம்ம்ம்??அதை இன்னும் கொஞ்சம் விளக்கமாச் சொல்லி இருக்கலாமோ? ம.ம. ஏறுகிறது கஷ்டம்! :(

    ReplyDelete
  2. அந்த மெடாபாட் தான் தெரியாது, முயற்சி பண்ணிப்பார்க்கலாம் , ம்ம்ம்ம்??அதை இன்னும் கொஞ்சம் விளக்கமாச் சொல்லி இருக்கலாமோ? ம.ம. ஏறுகிறது கஷ்டம்! :( //
    ஒண்ணும் பெரிசா இல்லையே! உங்க டெஸ்க்டாப் ல இதை தரவிறக்கிவிட்டு சொடுக்குங்க. அது திறந்துடும். எப்ப இதை உபயோகிக்க வேணுமானாலும் இப்படியே செய்யலாம்.

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!