Wednesday, January 12, 2011

நிறுவல் நீக்கம்.

நிறுவல் நீக்கம்.
அதாங்க அன் இன்ஸ்டால்! ஒரு மென்பொருளை நிறுவறோம். அப்புறம் அதிலே பிரச்சினை; இல்லை காசு கேக்கிற மென்பொருள் - கொடுக்கிற காசுக்கு இது தகுதி இல்லைன்னு நினைக்கிறோம்; இல்லை சோதனை மென்பொருள் நிறுவிட்டு போதும் ன்னு நினைக்கிறோம். ஏதோ ஒண்ணு. மென்பொருளை நீக்கணும்.

நல்ல மென்பொருளா இருந்தா அதோட கோப்பிலேயே நிறுவல் நீக்கத்துக்கும் வழி - ஒரு லிங்க் கொடுத்து இருப்பாங்க. அதை சொடுக்கினா போதும். நிறுவ ஒரு வழி காட்டி வந்தது போல நிறுவல் நீக்க வழிகாட்டி ஒண்ணு வந்து நிச்சயப்படுத்திக்கொண்டு நீக்கிட்டு போயிடும். சில சமயம் ஃபீட் பேக் கேப்பாங்க; ஏன் நீக்கறீங்க? குறைபாடு ஏதாவது இருக்கான்னு. இஷ்டம் இருந்தா எழுதலாம், இல்லைன்னா வேணாம். மைக்ரோ சாப்ட் இன்ஸ்டாலர் வழியா நிறுவினதை கன்ட்ரோல் பானல் போய் நீக்கலாம்.

இந்த கன்ட்ரோல் பானல் என்கிறது கணினியோட அமைப்புகளை திருத்தி அமைக்க உதவும். ஒவ்வொரு பயன்பாட்டிலேயும் அதோட அமைப்பை திருத்த வழி இருந்தாலும் இங்கே எல்லா திருத்தங்களுக்கும் வழி இருக்கும். கன்ட்ரோல் பானல் போக:
Start➪Control Panel➪Add or Remove Programs.
ஸ்டார்ட் ➪ கன்ட்ரோல் பானல் ➪ ஆட் ஆர் ரிமூவ் ப்ரோக்ராம்ஸ்.


இதிலே வர பட்டியல்ல நாம் நீக்க நினைக்கற மென்பொருள் இருக்கணும். அப்படி இருந்தா அது மேலே சொடுக்க இன்னும் பெரிசா தெரியும். இதில சேஞ்ச், ரிமூவ் ன்னு தேர்வுகள் தெரியும். ரிமூவ் சொடுக்கினா முன் சொன்னது போல வழிகாட்டி திறந்து நிச்சயப்படுத்திக்கொண்டு நீக்கிடும்.



மைக்ரோசாப்ட் ஆபீஸ் போல சிலதில சேஞ்ச் தேர்வு இருக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்கு இது இல்லை. நிறுவல் நேரத்தில பலரும் எது வேணும்ன்னு யோசிச்சு நிறுவறது இல்லை. அதனால ஒரு வசதி வேணுங்கிறப்ப அது கிடைக்காது. ஆப்ஷன் எல்லாத்திலேயும் போய் பாத்தாலும் கிடைக்காது. ஹெல்ப் ஐ பாத்தா இந்த வசதியை நிறுவலைன்னு தெரியவரும். அது இந்த வழியாத்தான் நிறுவணும். சேஞ்ச் ன்னு இல்லாம ரிபேர் ன்னும் இருக்கலாம். அதை சொடுக்கும்போது நிறுவலுக்கு சிடியை தேடும் என்கிறதை நினைவு வெச்சுக்குங்க! திருப்பி நிறுவல் வழிகாட்டி துவங்கும். நமக்கு தேவையானதை நிறுவி தேவை இல்லாததை நீக்கலாம்.

விண்டோஸ் நிறுவல் போதே சில தேர்வுகள் இருக்கு. யாரும் அத கவனிச்சு நிறுவறது இல்லை! சாதாரணமா ரெண்டு நிரல் தவிர மீதியை நிறுவிடுவோம். விட்டுபோறது ஒண்ணு ஃபேக்ஸ் வசதி. ம்ம்ம்ம் என்னது! ஆமாம். ஃபேக்ஸ். யாரும் இத பயன்படுத்தறதா தெரியலை. இருக்கிறது ஒரு மோடம்; அது இன்டர்நெட்ல இருக்கும்.

இரண்டாவது தானியங்கி பேக் அப் வசதி. நிறைய கோப்புகளை உருவாக்கி கட்டாயமா பாதுகாக்க வேண்டிய நிலையில இருக்கிறவங்க இதை நிறுவிக்கலாம். ஆட் ரிமூவ் பக்கத்திலேயே அடுத்த டேப் ல இருக்கு பாருங்க! சிடியை தயாரா வெச்சுக்கவும்.

நீங்க சொல்லற வழியெல்லாம் பாத்தாச்சு. நிறுவலை நீக்க முடியலைன்னு சொல்லறீங்களா? பாவம்.... நீங்க நிறுவி இருக்கிறது நல்ல மென்பொருள் இல்லே! இத ஸ்கம்வேர் ன்னு சொல்வாங்க.

(மென்பொருள் எல்லாம் சுலபமா நிறுவலாம், மைக்ரோசாப்ட்டுது தவிர ன்னு எழுதணும் போல இருக்கு! எப்படி இருக்குன்னு பார்க்க இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர் 9 பீட்டா நிறுவப்பாத்தேன். மாட்டேங்குது. ஏதோ அப்டேட் இல்லையாம். சோதிச்சு பாத்தா எல்லாம் அப்டேட்டாதான் இருக்கு! ஹும்! சரி பீட்டா, மன்னிச்சுடுவோம்!)

5 comments:

  1. தானியங்கி வசதி இருக்கா?? சரி, போய்ப் பார்க்கணும். அப்புறம், எக்ஸ்ப்ளோரர் ஒன்பது சரியா இல்லைனு தான் சொல்றாங்க. நான் போறதே இல்லையா தெரியலை.

    ReplyDelete
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., ஃபாலோ அப் ஆப்ஷன் அப்புறமா வருதே மறுபடியும்?? இதுக்காக இன்னொரு கமெண்ட் போட வேண்டி இருக்கு! :P

    ReplyDelete
  3. ஹிஹி!
    அப்புறம் பாலோ அப் ஆப்ஷன் என் கன்ட்ரோல்ல இல்லை.

    ReplyDelete
  4. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 வேண்டாம். ரொம்ப ஸ்லோ

    ReplyDelete
  5. எல்கே, முதல்ல விண்டோஸ் ஏ என் டிபால்ட் ஓஎஸ் இல்லை. உபுண்டுதான் பயன்படுத்துகிறேன். அடுத்து பயர்பாக்ஸ்தான் எனக்கு பிடிச்ச, பயன்படுத்தற உலாவி. மத்தவங்களுக்கு சொல்லவும் என்னன்னு பார்க்கிற க்யூரியாசிடிக்கும்தான் அதை நிறுவ பார்த்தது.

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!