இன்னிக்கு ஒரு அஞ்சல் வந்தது. நண்பர் ஒருவர்கிட்டேந்து வந்த மாதிரி இருந்தது.
From spam |
அட நம்ம நண்பர் நல்ல போட்டோ க்ராபராச்சே, நல்ல படங்கள் இருக்கும்ன்னு அங்கே போனேன். அந்த பக்கத்திலே என் மெய்ல் ஐடி போட்டு பதிவு செஞ்சுக்குங்கன்னு சொல்லித்து. பாஸ்வேர்டுக்கு ஒரு பெட்டி, கூடுதலா விவரம் நான் ஆணா பெண்ணா, கூடுதலா ஐ அக்ரீ டு ஆல் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் ன்னு ஒரு செக் பாக்ஸ். அவ்வளோதான். என்ன டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ? வழக்கமான ப்ளா ப்ளாதான். சரின்னு இதெல்லாம் நிரப்பி உள்ளே போனேன். உங்களைப்பத்தி இன்னும் கொஞ்சம் விஅவரங்கள் கொடுங்கன்னு சொல்லி வழக்கமான முதல் பேரு, ரெண்டாம் பேரு, பொறந்த நாள் ப்ளா ப்ளா எல்லாம் கேட்டுது. கொஞ்சம் சந்தேகம் வந்தது. ஹும், சரி பார்க்கலாம்ன்னு கொடுத்த பிறகு உங்க ஜிமெய்ல் கணக்கிலே இன்னும் யார் யார் எங்க மெம்பர்ன்னு சொல்லவா? கீழே இருக்கீறதை நிரப்புங்கன்னு சொல்லித்து. கீழே என் ஜிமெய்ல் கணக்கு பாஸ்வேர்ட் உள்ளிடச்சொல்லித்து.
ஹிஹிஹிஹி, ரொம்ப சாரி, வேற ஆளைப்பாருன்னு பக்கத்தை மூடிட்டு வெளியே வந்துட்டேன்.
திருப்பி நண்பரோட மெய்ல் க்குப்போய் show detailsன்னு சொல்லி, இப்ப அதை முழுமையா பார்த்தேன். அது அவரோட ஐடி லேந்து வரலை.
From spam |
அவர் பேரைப்போட்டு வலைத்தள ஐடிலேந்து வந்திருக்கு. (படத்திலே மெய்ல் ஐடி ஐ அழிச்சு இருக்கேன்!) இப்படி வரது புதுசு இல்லைன்னாலும் அஞ்சல் கணக்கு பாஸ்வேர்ட் கேட்டதுதான் ரொம்பவே மோசம்!
இது போல வலைப்பக்கம் ஏதேனும் உங்க அந்தரங்க விவரம் கேட்டா கொடுக்காதீங்க. உள்ளே நுழைஞ்சு உங்களோட தகவல் அத்தனையும் திருடிடுவாங்க.
இதைபோல எச்சரிக்கையா இருக்க வேண்டிய சமாசாரம் அடுத்த பதிவிலே.
ம்ம்ம் எனக்கு இந்த மாதிரி மெயில் சந்திரமெளலி பெயரிலே உங்க பெயரிலே, இன்னும் திராச பேரிலேனு இரண்டு வருஷமா நிறைய வந்திருக்கு. ஆனால் இது சரியானது இல்லைனு உள்மனசு சொல்லிடும். ஃபில்டர் போட்டுட்டேன். ஸ்பாமுக்குப் போயிடும். அங்கிருந்து திறக்காமலேயே குப்பைத் தொட்டிதான். இன்னிக்குக் காலையிலே ராஜசங்கர் பேரிலே வந்தது. நல்லவேளையா இன்பாக்ஸிலேயே தெரிஞ்ச ஒரு வரி விஷயத்தை வைச்சுக் கண்டு பிடிச்சேன். அதைத் திறந்தவங்க மாட்டிண்டு இருக்கிறதாச் சொன்னார். :( மறுபடியும் ஆரம்பிச்சிருக்கு போல!
ReplyDeleteதொடர
ReplyDeleteஎனக்கும் ரொம்ப தெரிஞ்ச ஃப்ரெண்ட் மூலமா இப்படி மெயில் வந்தது. பாதி தூரம் உள்ள போயிட்டு திரும்பிட்டேன்.
ReplyDeleteபதிலே கொடுக்கலைனா, அப்புறம் யாரும் வரமாட்டாங்க! :P
ReplyDeleteஅட! சாஅரி லக்ஷ்மி அக்கா! எப்படி விட்டுப்போச்சுன்னு தெரியலை
ReplyDeleteகீ அக்காவுக்கு நன்றி, சுட்டிக்காட்டினதுக்கு!