அடுத்து நாம பார்க்ககூடியது இசை.
கணினின்னா என்னன்னே தெரியாம இருந்து, பேரன் தாத்தா உனக்கு ம்யூசிக் ரொம்ப பிடிக்குமே, இந்தான்னு... ஐபாட் கொடுப்பான்னு பாத்தா மடி கணினி வாங்கி கொடுத்துட்டான். சரி இதை எப்படி பயன்படுத்தறதுன்னு பாக்கப்போய் கணினி கத்துண்டவங்க உண்டு.
சரி சரி எனக்கு இசை ரொம்ப பிடிக்கும். கணினியை வெச்சுகிட்டு இசை கேட்க சொல்லித்தாங்க ன்னு சொன்னா...
ஓகே. ரொம்ப ஒண்ணும் பெரிய விஷயமில்லை.
விண்டொஸ்லே முன் பதிவா வரது விண்டோஸ் மீடியா ப்ளேயர். இதைத்தான் பயன்படுத்தனும்ன்னு ஒண்ணுமில்லே!
இணையத்துல பாத்தா ஆயிரத்தெட்டு இசைப்பிகள் இருக்கும். எனக்கு ரொம்ப பிடிச்சது வி.எல்.சி ப்லேயர். இது வெறும் இசைப்பி மட்டும் இல்லை. விடியோவும் அதங்க சினிமாப்படம் கூட - காட்டும். ரியல் பார்மாட் தவிர மத்த எல்லாத்தையும் இசைக்கும்! சிடி, டிவிடி, எஸ்விசிடி, ஆடியோ சிடி ஏதானாலும் சரி. அப்புறம் ஊடக ஒழுங்கு - அதாங்க மீடியா பார்மாட் எதானாலும் -MPEG (ES,PS,TS,PVA,MP3)AVI ASF / WMV / WMA MP4 / MOV / 3GP OGG / OGM / Annodex Matroska (MKV) WAV (incuding DTS) Raw Audio: DTS, AAC, AC3/A52 Raw DV FLAC FLV (Flash) MXF Nut Standard MIDI / SMF Creative™ Voice- இத்தனையும் இயக்கும்.
அடிப்படையிலே விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் லே பாக்கிற எந்த இசை கோப்பை சொடுக்கினாலும் அது தானே திறந்து இசைக்க ஆரம்பிச்சுடும். எது அதை இசைக்கும்ன்னு கேட்டா..... சாதாரணமா எதை கடைசியா நிறுவினோமோ அந்த நிரல்தான் இசைக்கும். ஏன்னா நிறுவும்போது நாம பாட்டுக்கு சரி சரி ன்னு பூம் பூம் மாட்டுக்காரனோட மாடு மாதிரி சொல்லிண்டு போயிருப்போம். எல்லா நிரலுமே கேட்கிறது - 'இதை முன்னிருப்பு இசைப்பியா வெச்சுக்கலாமா?" இதுக்கும் சரின்னு சொல்லி இருப்போம். அதானே அதுக்கும் வேண்டியது?
கொஞ்சம் சீரியஸா திரச சார் மாதிரி இருக்கிறவங்க இசை கேட்கிறதுன்னா கொஞ்சம் ஆர்கனைஸ் பண்ணி வெச்சுக்கணும்.
இசை உங்க கணினியிலே இருக்கலாம். இல்லை டிவிடி சிடி லே இருக்கலாம். டிவிடி சிடின்னா ஒண்ணும் பேச்சே இல்லை. யாரோட இசை/ எந்த சிடி கேட்கணுமோ அதை கண்டு பிடிச்சு வெச்சுக்குங்க. இதை டிவிடி ப்ளேயர்லே போடணும். எப்படி போடறது? முதல்ல டிவிடி ப்ளேயரோட ட்ரேயை திறக்கணும். அதுக்கு ஒரு பட்டன் இருக்கு. கணினியிலே இருக்கிற ப்ளேயர்லேயே அதுவும் இருக்கும். படத்தை பாருங்க.
அந்த பொத்தானை அமுக்கினதும் ட்ரே தானே வெளியே வரும். இப்ப டிவிடி/ சிடியை மாஹா விஷ்ணுவோட சக்ராயுதம் மாதிரி வெளியே எடுக்கணும். ஹிஹிஹி! அதாவது சிடி நடுவிலே இருக்கிற ஓட்டையில நம்ம விரலை நுழைச்சு வெளியே எடுக்கணும். இது ஒரு பாக்கெட்ல வர சிடி க்கு. அதுவே ஒரு சின்ன பெட்டியிலே வர சிடின்னா பெட்டியை திறந்ததும் சிடியோட நடு ஓட்டை ஒரு நாப்லே பொருத்தி இருக்கிறது தெரியும். வழக்கமா இந்த நாப் அழுத்தறா மாதிரி இருக்கும். அழுத்தினா சிடி ரிலீஸ் ஆகிடும். அப்புறம் மஹா விஷ்ணு...
ஏன் இப்படி பிடிக்கச்சொல்லறேன்னா..
நம்ம கை எப்பவும் சுத்தம்.... ஹிஹீஹி அந்த சுத்தம் இல்லை, சாதா சுத்தம்... ஆ இருக்கும்ன்னு சொல்ல முடியாது. ஏதேனும் எண்ணை பசை, அழுக்கு எல்லாம் ஒட்டிக்கொண்டு இருக்கலாம். அது சிடி மேலே பட்டு ஒட்டிக்கொண்டுதுன்னா சென்ஸார் அந்த இடத்திலே தடத்தை படிக்க கஷ்டப்படும். அதனால சிடியை சக்ராயுதாம் மாதிரியோ அல்லது விளிம்புலேயோ (படத்தை பாருங்க) பிடிச்சுக்கணும்.
சிடியை இப்ப அந்த ட்ரேல வைக்கணும். அது சரி எந்தப்பக்கம் மேலே எது கீழே?
ப்ரொபஷனல் ரெகார்டிங்க் ன்னா ஒரு பக்கம் படம் போட்டு யாரோட என்ன சிடின்னு எல்லாம் கலர் கலரா எழுதியிருக்கும். இந்தப்பக்கம் மேலே இருக்கணும். வேற யாரும் ரெகார்ட் பண்ணி கொடுத்ததுன்னா இப்படி இல்லாம போகலாம். ம்ம்ம்ம். ஒரு பக்கம்கண்ணாடி மாதிரி பிரதிபலிக்கும் இல்லையா? அது கீழே போகணும். சரியா?
-தொடரும்....

From தொண்டுகிழங்களுக்கு கணினி |

அதெல்லாம் கேட்கிறதில்லை, பிரச்னையே கிடையாது. தொலைக்காட்சியிலே வர இசையைக் கேட்கவே நேரம் இல்லை! :(
ReplyDeleteathaanee!
ReplyDelete