Tuesday, December 4, 2012

அன்ட்ராயர் -5 ( android )


key words: android, ICS, beginners, elders, howto android phone.Tamil.
----------------------------------------------------------------------------

பபுச்சா என்று அன்பாக அழைக்கப்படும் கொல்லி மலை சித்தர், குருஜி, விவசாயி என்று பல அவதாரங்களை எடுக்கும் பலாபட்டரை ஷங்கர் ஆண்ட்ராய்ட் பத்தி வரலாறு, எதை வாங்கலாம் போன்ற பலதும் எழுதுகிறார். அவசியம் இதை படியுங்கள்.
------------------------------------------------------------------------
சரி, ஸ்மார்ட் போன் அதோட பேர் சொல்றா மாதிரி அடிப்படையில போன்தான். காமிரா உலாவி எல்லாம் எக்ஸ்ட்ரா பிட்டிங்தான்!

உங்க பழைய செல் போன்ல இருக்கிற டெலிபோன் நம்பர் எல்லாத்தையும் இதுல ஏத்தணுமே! அதுல எஸ்டி கார்ட் இருந்தா அதுக்கு பேக் அப் செஞ்சுட்டு கார்டை இதுல தூக்கிப்போட்டா முக்காவாசி வேலை முடிஞ்சது. பின்னால போன் நம்பர்களை சேர்க்க கான்டாக்ட்ஸ் ன்னு இருக்கிற ஐகானை தொட்டு உள்ளே போய் ஆப்ஷன்ஸ் வழியா உள்ளே வாங்கிக்கலாம். விவரங்களுக்கு படங்களை பாருங்க. ஒரு அப்ளிகேஷன்ல ஆப்ஷன்ஸ் எங்கே இருக்குன்னு கேக்கறீங்களா? நல்ல கேள்வி! android 4 ICS ல சாதாரணமா ஸ்க்ரீன்லேயே இருக்கும். இல்லைன்னா கீழ் படத்திலே கீழே வலது மூலையில 3 புள்ளிகள் ஒண்ணு மேல ஒண்ணா இருக்கு, பாருங்க, அதை அழுத்த ஆப்ஷன்ஸ் தெரியும்.


(மேலே) இம்போர்ட் எக்ஸ்போர்டை அழுத்துங்க.


(மேலே) எந்த இடத்துக்கு கான்டாக்ட்ஸ் இழுக்கணும்? செலக்ட் செய்து நெக்ஸ்ட் ஐ அழுத்துங்க.


(மேலே)  எங்கிருந்து கான்டாக்ட்ஸ் இழுக்கணும்? செலக்ட் செய்து நெக்ஸ்ட் ஐ அழுத்துங்க.


(மேலே) தேவையானதை மட்டுமோ எல்லாத்தையுமோ இழுத்துக்கலாம். செலக்ட் செய்து நெக்ஸ்ட் ஐ அழுத்துங்க.

அடிக்கடி பயன்படுத்தறது போனா இருக்கும்; அதனால அதோட ஐகானை அவசியமா ஹோம் ஸ்க்ரீன்ல வெச்சுக்கணும். அதை தொட டயல் பேட் வரும். நம்பரை ஒத்தவேண்டியதுதான். அது சரி! இந்த செல்போன் எல்லாம் வந்த பிறகு யாருக்கு எந்த நம்பர் நினைவிருக்கு? என் நம்பரே கூட எனக்குத்தெரியாது! யாரானா கேட்டா இப்ப உனக்கு மிஸ்ட் கால் கொடுக்கறேன், பாத்துக்கன்னு சொல்ல வேண்டி இருக்கு!

இதிலியே அடுத்து அடுத்து டேப்கள் இருக்கும். சாதாரணமா அடுத்த டேப் அடிக்கடி கூப்பிட்ட நம்பர்கள். அதுக்கு அடுத்து போன் நம்பர் புக். வலது பக்கம் ஏ, பி, சி தெரியும். தொடுகிற எழுத்துல ஆரம்பிக்கிற நபர்களோட எண்கள் தெரியும்கீழே பூதக்கண்ணாடி தெரிஞ்சா அது தேடல் உதவி. அதைத்தொட விசைப்பலகை திறக்கும் பெயரை உள்ளிட ஆரம்பிக்கும்போதே தேர்வுகள் தெரிய ஆரம்பிக்கும். எண்ணை தொட அது டயல் ஆகும். பேசும்போது ஸ்க்ரீன் ஆஃப் ஆயிட்டாலும் பேசி முடிச்சதும் டயலர் தெரியும். அதுல கீழே இருக்கும் சிவப்பு பட்டையை தொட கால் கட் ஆகும்.

இதே போல கால் வரும்போது ஸ்க்ரீன் ஒளிர ஆரம்பிக்கும். நடுவில் இருக்கிற ஒளி வட்டத்தை வலது பக்கம் இழுத்துப்போக அங்கே கால் ஏற்றுக்கொள்ள இடம் வரும். அங்கே விட்டுவிட கால் கனெக்ட் ஆகும். இடது பக்கம் இதே போல ஏற்க மறுக்கிற இடம் இருக்கு. மேலே ஹோல்ட்.

பேசும் போது சரியா கேட்கலைன்னா வால்யூம் பட்டன் - அதான் (இடது) சைட்ல இருக்கே- அத பயன்படுத்தி சத்தத்தை அதிகமாக்கி கேட்கலாம். எதிர் முனை ஆசாமி அந்த காலத்து ட்ரங்கால் பேசறாமாதிரி சத்தம் போட்டா குறைச்சுக்கலாம்.

9 comments:

  1. ஈஜி டு அண்டர் இஸ்டேண்ட்:))

    ReplyDelete
  2. serthu vaikkaren.. பின்னாடி உபயோகம் ஆகும்

    ReplyDelete
  3. ஒரு சீரியல் போட்டா வழக்கமா கடைசியில ஒரு பிடிஎஃப்ஆ போடுவேன்.

    ReplyDelete
  4. romba porumai vendum ji idayellampadikka

    ReplyDelete
  5. அடடே அஞ்சு இங்கே இருக்கே. கவனிக்காம ஆறிலே போய் அஞ்சு எங்கேன்னு வழக்கப்படி சொதப்பிட்டேனா? :)))

    ReplyDelete
  6. :-))))))))))))
    நடுவில கொஞ்சம் கேப்!

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!