Tuesday, December 4, 2012

மின்னாக்கம்


நல்லாயிருக்கீங்களா? ரொம்ப நாளாச்சு பாத்து.
(இது குறித்த முதல் பதிவு பிடிஎஃப் கோப்பாக இங்கே இருக்கிறது. முதலில் அதைப்படித்தால் இது சரியாக புரியும். திருத்தியது 31 மே 2021)

இன்னிக்கு மின்னாக்கம் பத்தி பேசபோறேன். பழைய நூல்கள் ஓலைச்சுவடிகள் இவற்றில் எழுதி இருக்கறதை பாதுகாக்கிற முயற்சியில சில வருஷங்களா ஈடுபட்டு இருக்கேன். 'புகைப்படம்' எடுக்கிற வழியில இதை முயற்சி செய்துகிட்டு இருக்கேன், இதற்கு முன் இருந்த பல வழிகளை விட நான் பின்பற்றிய வழி கொஞ்சம் நல்லா இருந்ததே ஒழிய இன்னும் திருப்தி ஏற்படலை. ஒண்ணாவது, புத்தகம் பழைய புத்தகம்தான் நான் ன்னு சொல்கிற விதத்தில வெறும் கருப்பு வெள்ளையா அமையாம பல சாயல்களில் இருந்தது. இரண்டாவது ஒவ்வொரு மென்புத்தகமும் ஒவ்வொரு மாதிரி இருந்தது. சிலதுல நல்லா ஜூம் செய்து பார்க்க முடியும். சிலதுல முடியாது. சிலதுல மொத்த கோப்பு அளவு குறைவா இருக்கும். சிலதுல அதிகமா இருந்தும் நல்லா இருக்காது. இப்படி ஒரு செந்தரமா இல்லாம இருந்தது.
தொடர்ந்து பல சோதனைகளை செய்துகிட்டு இருந்தேன்.

முதல் முன்னேற்றம் ஸ்கேன்டெய்லர் என்கிற மென்பொருள் தொடர்பானது. இதோட உள் பொதிந்த அன்பேப்பர் போன்றதை எல்லாம் தனித்த்னியே முன்னே பயன்படுத்த முயற்சி செய்து இருக்கேன். அவற்றில் இருந்த சிக்கல்களை எல்லாம் சரிசெய்து ஸ்கேன்டெய்லர் என்கிற இலவச மென்பொருளா இப்ப கிடைக்குது. முன்னே செய்த பக்கங்களை பிரிப்பது, சுழற்றுவது, கருப்பு வெள்ளையாக்குவது போன்ற பல படிகளை இது ஒண்ணே செய்து முடிக்குது. இது வேலையை சுலபமாக்கிவிட்டது. ஆகவே படங்களை ப்ராசஸ் செய்வது இப்ப படு சுலபமாகிவிட்டது.

இரண்டாவது முன்னேற்றம் காமிரா பத்தியது. ஸ்கேன் டெய்லரை பயன்படுத்தியும் இருந்த சில சிக்கல்களின் காரணம் புரிய வந்தது.

இதைப்பத்தி முதல்ல சொல்லிடறேன். அதிகமில்லை என்கிறதால இது கொஞ்சம் சுலபம்.
நல்ல தெளிவான பிம்பங்களா புத்தகம் இருக்க ஸ்கேன்டெய்லருக்கு தேவையான தெளிதிறன் 300டிபிஐ(DPI). அதாவது ஒரு இஞ்சுக்கு 300 புள்ளிகள். இவ்வளவு விவரம் வேணும். மென்பொருட்களாள இதை கொண்டுவரலாம்ன்னாலும் சட்டியில் இல்லாதது அகப்பையில் வராது என்பது போல மூல படத்தில் இல்லாத விவரம் வராது. ஒரு சின்ன ஏமாத்து வேலை போலத்தான் அது.
இப்ப வர சாதாரணமா ஒரு புத்தகத்தோட அளவு 7 இஞ்ச் உயரம் 4 ½ இன்ச் அகலம். பிரிச்சு வெச்சு படம் எடுக்கறதால பிம்ப அகலம் 9 இன்ச். ஆக பெருக்கினா 63 சதுர இன்ச். ஒருசதுர இன்ச்சுக்கு நமக்கு 300*300 90000 பிக்சல் வேணும். 63 க்கு 5670000 பிக்சல். மில்லியனால வகுத்தா தோராயமா மெகா பிக்சல். அதாவது 5.67 மெகாபிக்சல் காமிரா வேணும்.

அந்த காலத்து பல புத்தகங்கள் 9 இன்ச் உயரம். 6 இன்ச் அகலம். அதனால இதையே கணக்கு செய்யலாம். 9*12 = 108. இதுக்கு தேவை குறைந்தது 9.72 மெகாபிக்சல் காமிரா. இவ்வளவு சரியா காமிரா அமையாது! ஆனா நமக்கு தேவையானது இதுக்கு மேலேன்னு தெரிஞ்சுக்கலாம்!

அதிர்ஷ்டவசமா இப்ப இந்த கான்பிகரேஷன் காமிரா சுமார் 10 ஆயிரத்துக்கே கிடைக்குது. முன்னே 8 மெகாபிக்சல் காமிரா 13 ஆயிரத்துக்கு வாங்கினேன். (யாரும் காமிரா வாங்கறதா இருந்தா தைரியமா வாங்கலாம். நான் வாங்கினா ஒரு மாசத்துக்குள்ள விலை குறையும் என்கிறது நிச்சயம்!) இப்ப அதே விலைக்கு 16 மெகாபிக்சல் காமிரா வாங்கி இருக்கேன்!
மற்றபடி படமெடுக்கும் டெக்னிக் எல்லாம் அதேதான்; மாற்றமில்லை.

முன்னே தயார் செய்த அட்டைப்பெட்டி எனக்கு ரிடயர்மென்ட் கொடுன்னு கொஞ்சித்து. நல்லா உழைச்சுட்டே, போய் வா ன்னு அனுப்பிட்டேன்.




இப்ப சமீபத்தில பெட்டி தயார் செய்தப்ப நான்கு மூலைகளிலும் பொருத்த தகுந்தபடி மூணு பக்கம் உள்ள பை ஜாய்ன்ட் கிடைச்சது. (படத்தை பாருங்க) இது பெட்டி தயாரிப்பை சுலபமாக்கிவிட்டது. எந்த கடையில் இந்த மாதிரி ஜாய்ன்ட் கிடைக்கும்ன்னு தெரியலை. யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்க. பைப்பாலேயே ப்ரேம்வெர்க் மாதிரி செய்துவிட்டு எல்லா பக்கமும் டிஸ்யூ பேப்பர் சுத்தியிருக்கேன். இது இன்னும் அதிக வெளிச்சத்தை உள்ளே விடுது. கீழே வெள்ளை தெர்மோகோல் பலகம். மேலேயும். இதனால் வெள்ளை பேப்பர் ஒட்டறதை தவிர்த்துவிட்டேன். சிஎஃப்எல் பல்ப், பக்கவாட்டு வெள்ளை தடுப்பு, உள்ளே கண்ணாடி, இதில் எல்லாம் மாற்றமில்லை.
அடுத்து ஸ்கேன் டெய்லர்.






8 comments:

  1. உங்கள் முயற்சி பிரம்மாண்டமானது.நல்லபடியாக நடக்கணும்.

    ReplyDelete
  2. நன்றி அக்கா! பிரம்மாண்டம் எல்லாம் ஒண்ணுமில்லை! :-))

    ReplyDelete
  3. நீங்க டாக்டரா சைண்டீஸா:))

    ReplyDelete
  4. நான் சாமான்யன், சாமான்யன்! :-)))

    ReplyDelete
  5. சாமான்யன்னு சொன்னா ஞாபகமெல்லாம் எங்கோ போறதே!

    ReplyDelete
  6. நல்ல பதிவு. நானும் கேமரா மூலம் மின்நூல் செய்துவருகிறேன். இந்த பெட்டி பயன்படுத்தியதில்லை. ஒரு வெள்ளைபேப்பரில். புத்தகத்தை வைத்து அப்படியே ப்ளாஷ் இல்லாமல் இயற்கை வெளிச்சத்தில் எடுத்து. ஸ்கேன் டெய்லரில் திருத்துவேன். ஒரு சந்தேகம் பெட்டி ..பல்பு போன்றவை எதற்கு என்று புரிகிறது. கண்ணாடி எதற்கு என்று கூறுங்கள். இந்த முறையை பின்பற்றலாம் என்று இருக்கிறேன். நல்ல தகவலை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிகள்.
    என்றும் நட்புடன்
    தமிழ்நேசன்

    ReplyDelete
  7. நீங்களும் மின்னாக்கம் செய்கிறீர்களா? மிக்க மகிழ்ச்சி!
    கண்ணாடி புத்தகத்தை அழுத்தி கொஞ்சம் நேராக்கும்; பக்கம் காற்றிலோ வேறு காரணத்தாலோ திரும்பிவிடாமல் காக்கும். தனித்தாளாக இருந்தால் தேவையில்லை.

    ReplyDelete
  8. இதையும் பாருங்கள்:
    https://drive.google.com/file/d/0B0hsZOLFx-HfNDU1OWM1ZmUtYjk5MS00NGQ5LWFiMTUtMDAxY2Y3NmQ4M2Vh/view?usp=sharing&authkey=CMLHxJIO

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!