இப்ப
இந்த அன்ட்ராயர் கைப்பேசியோட
இணைப்புகளை பார்க்கலாம்.
முதல்
இணைப்பு சிம் கார்ட் மூலமா
டெலிபோன் கம்பெனியோட இணைப்பு.
அது என்ன
ப்ளான் என்கிறதைப்பொறுத்து
போன் வசதி, மெசேஜ்
வசதி, இணைய
வசதி இருக்கும். ஒரு
3 ஜி
ப்ளான் இருந்தா எல்லாத்துக்கு
நல்லா இருக்கும். பல
வலைத்தளங்களும் கைபேசிக்காகவே
தன் இணைய தளங்களை வடிவமைக்கறாங்க.
சட்ன்னு
கனென்க்ட் ஆகணுமில்ல!
இரண்டாவது
ப்ளூடூத். இது
வழியா நாம் ஹெட்போன்ஸ்,
பெரிய
விசைப்பலகை போல பல ப்ளூடூத்
சாதனங்களை இணைச்சுக்கலாம். கைய ஃப்ரீயா வெச்சுகிட்டு ஹெட்போன்ல பேசிக்கிட்டே காரியம் செய்யலாம். ஆன் - ஆஃப் ஹெட்போன்ஸ்ஸாலேயே செய்யலாம்!
மூணாவது
வைஃபை. வைஃபை
சாதங்களை இணைக்கலாம்.
வயர்லெஸ்
மோடம் வீட்டுல இருந்தா
இணையத்தையும் இணைச்சுக்கலாம்.
நாலாவது
ஹெட்போன்ஸ் இணைக்க. 3.5
எம்.எம்
ஜாக் இருந்தா நல்லா இருக்கும்!
கடைசியா
மைக்ரோ யூஎஸ்பி போர்ட்.
இது வழியா
கணினியை கனெக்ட் பண்ணலாம்.
கணினிக்கும்
கைப்பேசிக்கும் இடையே பைல்களை
நகர்த்தலாம். கேட்க
வேண்டிய ப்ரவசனமோ பாடல்களையோ
கைப்பேசிக்கு நகர்த்தலாம்.
கைப்பேசி
காமெரால எடுத்த விடியோக்கள்,
படங்களை
சேமிக்க கணினிக்கு மாத்திக்கலாம்.
இப்ப
வர பல கைப்பேசிகள் சார்ஜிங்கே
இப்படித்தான் செய்ய வகை
செய்திருக்கும். சார்ஜரே
ஒரு யூஎஸ்பி போர்ட்டோடத்தான்
இருக்கும். அதனால்
வீட்டு ஈபி ப்ளக்கில சொருகினாலும்
அது யூஎஸ்பி சார்ஜர்தான்.
சாதாரணமா
நாம் கணினில வேலை செய்துகிட்டு
இருக்கறப்ப சொருகிவிட்டா
அது பாட்டுக்கு சார்ஜ் ஆகும்.
திடுதிப்புன்னு
இந்த யூஎஸ்பி சாதங்களை
பிடுங்கக்கூடாதுனு தெரியும்
இல்லையா? டாடா
சேதமாக வாய்ப்பு இருக்கு.
அதனால யூஎஸ்பியை
சொருகினாலேயே என் கைப்பேசில
இந்த ஆப்ஷன்ஸ் வருது!
டாடா இடம்
மாத்தணும் எனும்போது இதை
மாத்தி ஸ்டோரேஜ் டிவைஸ் ன்னு
கொடுக்கணும். அன்மவுண்ட்
செய்யாம இதை பிடுங்காதீங்கன்னு
எச்சரிக்கை வரும். சரின்னு
சொன்ன பிறகு கனென்க்ட் செய்யும்.
அந்த சமயத்துல
கைப்பேசி நினைவகத்தை முழுக்க
கணினிக்கு இணைப்பதால பாட்டு
கேட்பதோ போட்டோ எடுத்து
சேமிப்பதோ முடியாது என்கிறதை
நினைவு வெச்சுக்குங்க!
டாடா மாத்தின
பிறகு திருப்பி இதை சார்ஜ்
ஒன்லி ன்னு அமைச்சுட்டா
பிரச்சினையே இருக்காது.
எப்ப வேணுமானாலும்
பிடுங்கலாம்.
No comments:
Post a Comment
உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!