key words: android jelly bean copy paste tamil
----------------
ஹும்!
இவ்வளோ
சீக்கிரம் அடுத்த பதிவு
போடுவேன்னு நினைக்கலை.
தம்பி
பல்லாஜி அன்ட்ராயர் வாங்கினா
ஊஸ் பண்ணனும் அக்கு வேறா ஆணி
வேறன்னு ஆராயக்கூடாதுன்னு
சொன்ன அறிவுரையை சிர மேற்கொண்டு
தமிழ்ல டைப் பண்ணி காபி பேஸ்ட்
செய்யப்பாத்தா...... ஆப்ஷன்
எங்கேப்பா? என்ன
செய்தும் காணலை.
சரி
கூகுள் தேவதையை கேட்டா....
ஹிஹிஹி அதான்
எல்லாருமே செய்வாங்களே,
நீ பதிவு
வேற போடணுமா ன்னு கேட்கறீங்களா?
இருக்கட்டும்....
விஷயம்
புரிஞ்சது.
முன்னமேயே
சொன்னேன், கணினில
ரைட் க்ளிக் மாதிரி இங்கே
கொஞ்சம் அதிக நேரம் தொட்டா
வேற கன்டெக்சுவல் ஆப்ஷன்ஸ்
கிடைக்கும்ன்னு.... திரையில
ஒரு உரையை பாத்தா அதை காபி
செய்ய, அதை
கொஞ்சம் அதிக நேரம் தொடுங்க.
ரெண்டு
ப்ராக்கெட் தோன்றி சொல்லை
அணைச்சுக்கும்.
இதுகளை
இன்னும் அதிக உரையை சேர்த்துக்க
இழுக்க முடியும். இடது
பக்கம் இருக்கறதை மேலேயும்
கொண்டு போகலாம். வலது
பக்கம் இருக்கறதை கீழேயும்
கொண்டு போகலாம். உரையை
தேர்ந்தெடுத்தாச்சா!
இப்ப அதை
கொஞ்சம் அதி.நே.தொ.
அதாங்க அதிக
நேரம் தொடுங்க! அது
செலக்ட் ஆயிடும். அதுக்கு
ஒரு பாப் அப் அல்லது ஏதேனும்
ஒரு இடத்தில அறிவிப்பும்
கிடைக்கும். இப்ப
ஒட்ட வேண்டிய இடத்தில தொடுங்க.
பேஸ்ட் ஆப்ஷன்
முன்ன போலவே கிடைக்கும்.
அதை தொட்டா
வேலை முடிஞ்சது!
இவ்வளோ
சுலபமா? ஏன்
உனக்கு முதல்லேயே முடியலைன்னு
கேட்கறீங்களா?
ஹிஹிஹி!
No comments:
Post a Comment
உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!