Wednesday, March 4, 2020

மின்னூல் உருவாக்கம் - 4



சரி, உங்கள் மின் புத்தகத்துக்கு படங்கள் அவசியம் என்று கொள்வோம். என்ன செய்யலாம்.
பரவாயில்லை. உங்கள் டாக்குமெண்டிலேயே இதை சேருங்கள். அது ஏற்கெனெவே தெரிந்து இருக்கும். சரியான இடத்தில் சொடுக்கி மெனுவில் இன்சர்ட் இமேஜ், பின் சரியான படத்தை சுட்டிக்காட்டி படத்தை புகுத்திவிடலாம்.
முதலில் படத்தை சரியாக வெட்டிக்கொள்ளுங்கள். தேவையானதை மட்டும் காட்டுவதாக இருக்கட்டும்.
படம் கருப்பு வெள்ளையா? வண்ணமா?
எதில் படிக்கப்போகிறார்கள் என்பதைப்பொருத்தது. கிண்டில் போல வன்பொருட்கள் பலதும் வண்ணங்களை காட்டுவதில்லை. வண்ண மயமான உங்கள் படம் அசிங்கமாக தெரிய வாய்ப்புண்டு! இந்த பிரச்சினை கணினியிலோ கைப்பேசியிலோ பார்க்கும் போது இராது.
ஆனால் வண்ணம் மொத்தமாக புத்தகத்தின் அளவை அதிகரிக்கப்போகிறது. இது பிரச்சினையாக வாய்ப்புள்ளது. என்ன செய்யலாம்?
இதன் அளவை சரி செய்ய வேண்டும்.
அளவு என்பது இங்கே இரண்டு விஷயங்கள். ஒன்று நீள அகலங்கள். இரண்டாவது கோப்பின் அளவு (image file size).
இப்போதைய அலைபேசிகள் சர்வ சாதாரணமாக அதிக பிக்சல் அளவு படங்களை எடுக்கின்றன. 3264×2448 எல்லாம் சர்வ சாதாரணம். ஆனால் யார் சூப்பர் ஹைடெபினிஷன் 30 இன்ச் மானிட்டரில் இதை படிக்கப்போகிறார்கள்?
ரைட். அப்ப நமக்கு வேண்டியது கையடக்க அலைபேசியிலோ மின்னூல் வன்பொருளிலோ படிக்க முடியும் படம். வன்பொருட்களில் சாதாரணமாக சிறிய பக்கம் 1600 பிக்சல்கள். அலைபேசியில் 600 பிக்சல்கள்.
உங்கள் ஆதர்ச பட எடிட்டரில் படத்தை திறந்து கொள்ளுங்கள்.
ரீ சைஸ் தேர்வு செய்து 600 முதல் 1600 வரை சிறிய பக்கம் வருமாறு அமைத்துக்கொள்ளுங்கள். கீப் ஆஸ்பக்ட் ரேஷியோ ஐ தேர்வு செய்ய மறக்க வேண்டாம். ஓகே சொன்ன பிறகு இதை சுருக்கி (compress) சேமிக்க வேண்டும். அதற்கு இதை எக்ஸ்போர்ட் செய்ய வேண்டும். பிஎன்ஜி அல்லது ஜேபெக் பார்மாட் நல்லது. அப்போது மென்பொருள் க்வாலிடி எவ்வளவு வேண்டும் என்று கேட்கும்.
இங்கே கொஞ்சம் பிரச்சினை உள்ளது. ஒவ்வொரு மென்பொருளும் ஒவ்வொரு மாதிரி சுருக்கும். குத்து மதிப்பாக செய்து பார்த்து பின் திருப்தி இல்லை என்றால் திருத்திக்கொண்டு என்று போவதே நல்லது. இறுதி கோப்பின் அளவு? தெளிவு அதிகமாக வேண்டுமெனில் 100-150 கேபி. இல்லை எனில் 50 கேபி போதுமானது.
ரைட்! இப்போ சுலபமான வழியை பார்க்கலாமா? நாசமாப்போச்சு இத முன்னாலேயே சொல்லப்படாதா என்கிறீர்களா? ஹிஹிஹி!
லிப்ரே ஆபீஸ் டாகுமெண்டில்தானே இதை எல்லாம் எழுதுகிறீர்கள்? நீங்கள் படத்தை இன்சர்ட் செய்யும்போதே அது சிறியதாக்கித்தான் புகுத்தும். தேவையான தெளிவை மனதில் கொண்டு அதன் ஒரு மூலையை பிடித்து இழுத்து அளவை (நீள அகலம்) மாற்றிக்கொள்ளலாம். பின் அதை வலது சொடுக்கு சொடுக்கி கம்ப்ரஸ் தெரிவு செய்யுங்கள்.






இப்போது கிடைக்கும் மெனுவை பாருங்கள். படத்தின் அடர்த்தி (டிபிஐ) அதிகம். 96 க்கு மேல் இருந்து பிரயோசனமில்லை.





தேவையான க்வாலிடியை தேர்ந்து எடுங்கள். கால்குலேட் நியூ சைஸ் என்பதை அழுத்த கிடைக்கப்போகும் படத்தின் அளவு தெரியும். கூட்டியோ குறைத்தோ மாற்றுங்கள். திருப்தி ஆன பின் ஓகே சொன்னால் முடிந்தது கதை
படங்களை இப்படி அளவு குறைத்த பின் மொத்த மின் புத்தகத்தின் அளவு  குறைந்திருப்பதை பாருங்கள்! 
 
படங்களின் மெடா டேடாவை நீக்க மென்பொருட்கள் உள்ளன. தேவையாவர்கள் தேடிப்பிடித்து பயன்படுத்துங்கள். 20 கேபி வரை அளவை குறைக்கலாம்
-நிறைந்தது-  





No comments:

Post a Comment

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!