Sunday, March 1, 2020

மின்னூல் உருவாக்கம் - 1


அப்பாடா! ஒரு வழியா குளிர் காலம் போச்சு. நம்மோட லொக் லொக் எல்லாம் போயே போச்சு.
இப்ப நாம் நம்ம வேலைய கொஞ்சம் நிம்மதியா பாக்கலாம்.
எத்தனை ப்ளாக் எழுதி இருக்கோம்! அது எல்லாம் ஒரு பொற்காலம்! இப்பல்லாம் எல்லாரும் ஃபேஸ்புக் ட்விட்டர்ன்னு இருக்காங்க. இருந்தாலும் நம்ம ஆதர்ச ப்ளாக் எல்லாம் மறக்கற விஷயமா? நாம பாட்டுக்கு அதப்பாப்போம்.
இப்போது நாம் மின்னூல் உருவாக்கம் பற்றி பார்க்க இருக்கிறோம்.
மின் புத்தகங்கள் வரத்துவங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அதில் இன்னும் குறைபாடுகள் உள்ளன. பல சமயங்களில் இவற்றை தரவேற்ற முயலுகையில் அவை ஒப்புக்கொள்ளப்படுவதில்லை (failed validation). பல ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய நூலை அல்லது வலைப்பூ படைப்புகளை மின்புத்தகம் ஆக்கும்போது இந்த தடங்கல்கள் சலிப்பைத்தருகின்றன.
ஆகவே எளிய வகையில் மின் புத்தகம் தயாரிக்க ஒரு வழியை பார்க்கலாமா?

இதற்கு தேவையான மென்பொருட்கள் பின்வருமாறு:
1. காலிப்ரே என்னும் மென்பொருள் https://calibre-ebook.com/ இல் கிடைக்கும். 2. எளிய டெக்ஸ்ட் எடிட்டர்.



நாம் முதலில் என்ன செய்ய வேண்டும் என்றால் எந்த டாக்குமெண்ட் ஐ நாம் மின் நூலாக்க வேண்டுமோ அதை திறந்து கொள்ள வேண்டும். அதிலிருக்கும் உரையை ஒத்தி எளிய டெக்ஸ்ட் 'எடிட்டர் ' இல் ஒட்டுங்கள். இப்படி செய்தபின் அதை பார்வையிடுங்கள். நமக்கு மிகவும் எளிய மின் நூல் போதும். ஏனெனில் நாம் இந்த மின்னூலை ஒரு அலைபேசியிலோ அல்லது கிண்டில் வன்பொருளிலோ படிக்கப் போகிறோம். ஆகவே நமக்கு இடம் என்பது ஒரு அரிதான விஷயம். அதை முடிந்தவரை சரியாக பயன்படுத்த வேண்டும்.

அதனால் நாம் குறைந்த அளவு வரும்படி உரையை திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு லைன் இன்டெண்டோ, ப்ரேக்கோ அல்லது அனாவசியமான வெற்று வரியோ நீக்கப்பட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் இவை அலைபேசியில் படிப்பதை கடினமாகும்.



இப்படி முடிந்தவரை கூடுதல் வெற்றிடங்கள் வெற்று வரிகள் ஆகியவற்றை நீக்க வேண்டும். பிறகு ஓப்பன் ஆபீஸ் அல்லது லிப்ரே ஆஃபீஸ் ஆகியவற்றில் ஒரு ரைட்டர் டாக்குமெண்டை திறந்து கொள்ள வேண்டும். அல்லது நீங்கள் விண்டோஸ் இல் வேர்ட் பயன்படுத்துவதாக இருந்தால் அதில் ஒரு டாக்குமெண்டை திறந்து கொள்ளலாம். இப்போது இந்த டெக்ஸ்ட் எடிட்டர் இல் இருக்கும் உரையை அப்படியே ஒத்தி இங்கே ஒட்டுங்கள். பிறகு இதை சேமியுங்கள். சேமிக்கும்போது அவசியமாக டாக்ஸ் (*.docx) பார்மாட்டில் சேமிக்க வேண்டும். அடுத்து...

நாம் காலிப்ரே மென்பொருளை துவக்க வேண்டும் இந்த காலிப்ரே உடன் ஒரு e-book எடிட்டர் நிறுவப்படுகிறது இப்போது அதை துவக்கி கொள்ளுங்கள் அடுத்து அதில் மெனுவில் ஃபைல் இல் சொடுக்க திறக்கும் விண்டோவில் தேவையான டாக்குமெண்டை திறந்து கொள்ளுங்கள்


இப்போது அது புதிய மின் புத்தகமாக திறக்கப்படும். இடப்பக்கம் நடுவில் இன்டெக்ஸ் எச்டிஎம்எல் (index.html) என்று இருப்பதை சொடுக்குங்கள். இப்போது நடுவில் இருக்கும் இடத்தில் எச்டிஎம் எல்லாகவும் வலது பக்கம் மின் புத்தக உரையாகவும் தெரியும். இப்போது மேலே வலது பக்கம் இருக்கும் ரன் செக் (run check) என்பதை சொடுக்குங்கள். இந்த மின் நூலில் தவறுகள் இருந்தால் அது காட்டப்படும். நாம் எளிய டெக்ஸ்ட் எடிட்டர் இலிருந்து உருவாக்குவதால் அனேகமாக தவறு ஏதும் இருக்காது. சில சமயம் இந்த புத்தகம் 240 கேபிக்கு மேல் இருக்கிறது; சில மின்நூல் மென்பொருட்கள் இதனை காட்டாமல் சரியாகக் காட்டாமல் போகலாம் என்று சொல்லலாம். பரவாயில்லை. இதை சிறியதாக பிரிக்க முடியும். அதை பின்னால் பார்க்கலாம். இப்போது நாம் இதை சேமிக்கலாம். இதில் இப்போது ஈபப் (EPUB) ஆகத்தான் இது சேமிக்கப்படும்
-தொடரும் 

 

No comments:

Post a Comment

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!