Showing posts with label மின்னாக்கம். Show all posts
Showing posts with label மின்னாக்கம். Show all posts

Friday, August 30, 2013

back saver!

மின்னாக்கத்தில போட்டோக்கள் எடுக்கிறப்ப எப்பவுமே ஒரு பிரச்சினை குனிந்து நிமிருவதுதான். கண்ணாடியை நிமிர்த்திவிட்டு பக்கத்தை புரட்ட குனிய வேண்டி இருக்கு. அப்புறம் காமிரா ஸ்க்ரீனை பார்க்க நிமிர வேண்டி இருக்கு.
இதை தவிர்க்க ரொம்ப நாள் முன்னேயே ஒரு ஐடியா யோசிச்சு வெச்சிருந்தேன். அதை சோதனை செய்து பார்க்க இன்னிக்குத்தான் வேளை வந்தது!
தாழ் பெஞ்சை நீக்கிட்டு கீழேயே உட்கார்ந்துட்டேன்.
இப்ப க,நி,ப,பு வுக்கு குனிய வேண்டிய அவசியம் இல்லாம போச்சு!
ம்ம்ம்ம்... ஆனா காமிரா ஸ்க்ரீனை பார்க்கணுமே!
அதுக்கு படத்துல காட்டி இருக்கறாப்போல ஒரு கண்ணாடியை செட் பண்ணிடேன்!
யூரேகா!



கண்ணாடிய தேவையான அளவு சாய்ச்சு வெச்சா அதுல காமிரா ஸ்க்ரீனோட பிரதிபலிப்பை பார்த்து பக்கம் முழுக்க அதுல வருதான்னு செக் செய்ய முடிஞ்சது. காமிரா விழாம இருக்க ஒரு கவுன்டர் வெய்ட் (இங்கே பேத்தியோட கிலு கிலுப்பை! ) அவ்ளோதான்!
இப்ப செஷன் மிடிஞ்சதும் முதுகு வலிக்கலை! வலது தோள்தான் ..... ஹிஹிஹி!
அடுத்து ப்ளாஸ்டிக் சந்திரா கிட்ட சொல்லி ஒரு ப்ரேமும் அதுல சைக்கிள் கியர் ஹாண்டில் பயன்படுத்தி காமிராவை கிளிக் பண்ண ஒரு சாதனம் செஞ்சு வாங்கணும்! அப்ப கையை தூக்க வேண்டிய அவசியம் இராது!

Saturday, August 24, 2013

புத்தக மின்னாக்கம் - அச்சிட....

ம்ம்ம்ம்... மின்னாக்கம் பத்தி இங்கேயா பதிவு எல்லாம் போட்டேன்? இல்லை, அது சித்திரம் பேசுதடியா?
என்ன இப்ப? இங்கேயே போட்டா போச்சு!
அதாகப்பட்டது பழைய புத்தகங்களை காமிராவால போட்டா எடுத்து அதை ப்ராசஸ் பண்ணி பிடிஎஃப் ஆக்கற வேலையில கொஞ்சம் குப்பை கொட்டி இருக்கேன். போன வாரத்துல அதுக்கு ஒரு புது வேலை வந்தது. உபநிஷத் நாடகங்கள் ன்னு ஒரு பழைய புத்தகம். மொத்தம் 8 நாடகங்கள். அதுல நாலு மட்டும் மோசமாக ஜெராக்ஸ் காப்பியா கிடச்சது. அதோட மூலப்ப்ரதி கிடைக்குமான்னு தேடிகிட்டு இருந்தப்ப ஒத்தர் லைப்ரரி காப்பி ஒண்ணு கொண்டு வந்து கொடுத்தார். அதை கொடுத்தவர் ப்ராசஸ் முடிஞ்ச பிறகு தனக்கு ஒரு ப்ரிண்ட் அவுட் வேணும்ன்னு கேட்டார். நானும் சரின்னு சொல்லிட்டேன்.
போட்டோ வேலை எல்லாம் அவர் கிட்ட சொன்னது போல ரெண்டு நாள்ல முடிஞ்சது. பிடிஎஃப் உம் பண்ணியாச்சு.
ஆனா இப்ப அவருக்கு ப்ரிண்ட் அவுட் எடுக்கறதுலதான் சிக்கல் வந்தது!
மொத்தம் கிட்டத்தட்ட 784 பக்கங்கள்.
அந்த காலத்து பப்ளிகேஷன். கொடுத்தவர் கொஞ்சம் வயசானவர். படிக்க கஷ்டம் இருக்கலாம்; அதனால் முடிஞ்ச வரை பெரிசா ப்ரிண்ட் ஆகணும்.
சாதாரணமா புத்தகம் ஜெராக்ஸ் பண்ணா ரெண்டு பக்கமும் (back to back) செய்வாங்க. ஒரு ஷீட்ல நாலு பக்கம் அடங்கும். அந்த லேஅவுட் தான் தோது படும். இல்லைன்னா நிறைய செலவாகும்.
ஜெராக்ஸ் செய்ததை பைண்டும் பண்ணனும் இல்லையா?
வழக்கம் போல பிடிஎஃப் பண்ண பிறகு ஸ்கேன் டெய்லரை திருப்பி இயக்கி அதுல மார்ஜின் இல்லாம சேமிச்சுகொண்டேன். ஒரே ஒரு பக்கம் மட்டுமே கொஞ்சம் அதிகமா கட் ஆகிடுத்து. மத்தபடி சரியா வந்தது.
இப்ப ஒவ்வொரு பக்கமும் தனித்தனி பைலா இருக்கு. இதை ப்ரிண்ட் பண்ண கிடைமட்டமா ஏ4 சைஸ்ல பக்கத்துக்கு ரெண்டு படம் வரணும். முன் பக்கங்களில இடது பக்கமும், பின் பக்கங்களில வலது பக்கமும் பைண்டு பண்ண மார்ஜின் வரணும்! இந்த கடைசி விஷயம்தான் ப்ரச்சினையா போச்சு!
வலையில கேட்டப்ப சில உதவி குறிப்புகள் கிடைச்சது.
Manikandan B போட்டோஷாப் வழியா செய்யச்சொன்னார். ஆனால் 400 சொச்சம் பக்கங்களுக்கு இது சரி வரலை.
Rathinam Padmanaban க்யூட் ப்ரிண்டர் மூலமா செய்யச்சொன்னார். அதுல இரண்டு இமேஜ் ஒரு பக்கத்துக்கு கொண்டு வர முடிஞ்சது. ஆனா மார்ஜின் செட் பண்ண வழி இல்லை.
(போகிற போக்கில அவர் பழைய அட்ப்பி அக்ரோபாட் ஐ இலவசமா தரவிறக்க சுட்டி கொடுத்தார். www.techspot.com/downloads/4683-adobe-acrobat-8-free.html )
வலையில் இன்னும் தேடி இந்த மென்பொருளை கண்டு பிடிச்சேன்.
FotoSlate4 தரவிறக்க http://cnet.co/1dzUkmZ
22.24MB Free to try (30-day Trial Period); $29.99 to buy

30 நாள் ட்ரயல். போதுமே! 

புரிஞ்சுக்க சுலபமா இருந்தது. மைக்ரோசாப்ட் பப்ளிஷர்ல செய்ய முடியணும், அது எப்படின்னு கண்டு பிடிக்கறது சுலபமா இல்லை.
இடது பக்க பேனல்ல படங்களை லோட் செய்து கொண்டு வரலாம். வலப்பக்க பானல் டெம்ப்ப்லேட்டுக்கு.அதை சொடுக்க...



வலது பக்க பேனல்ல பக்கத்தோட டெம்ப்லேட். முன்னாலேயே செய்து வெச்சிருக்கிற டெம்ப்லேட் நிறைய. அதுல கிடைமட்டமா இருக்கறதையும் இரண்டு படம் இருக்கறதையும் தேர்ந்தெடுத்தேன். அப்புறம் அதுல வலது சொடுக்கி வர மெனுல அட்ஜஸ்ட் பிக்சர். இது பக்கத்தை பெரிசா காட்டித்து. அதை நகர்த்த முடிஞ்சது.  இடது பக்கம் அதிக மார்ஜின் விட்டு முதல் டெம்ப்லேட் செய்து மெனுல அக்சப்ட் ன்னு சொல்ல அது ஏத்துக்கிச்சு. அதுல படங்களை ஏத்தறதும் ஈசிதான். 
இடப்பக்க பேனல்ல லோட் பிக்சர்ஸ்ல சொடுக்கி திறக்கிற விஸார்ட்ல போல்டரை காட்டணும். அதுல இருக்கிற படங்களை தேர்ந்தெடுக்கணும். இதெல்லாம் வழக்கம் போல. செலக்ட் ஆல், ஆட். பிறகு கீழ் பேனலுக்கு எல்லாம் வந்துடும். அதுல செலக்ட் ஆல் கொடுத்த பிறகு கீழே ஒரு செக் பாக்ஸ். இதுல செக் செய்ய அது தானா படங்களை தேவையான புது பக்கங்களை உருவாக்கி போட்டுடும். அப்புறம் சேவ் ஆஸ் பிக்சர். ஜேபெக் ன்னு கொடுத்தேன். டிப் வகை அளவு ரொம்ப அதிகம்! 

பிறகு எல்லாத்தையும் நீக்கிட்டு புதுசா ஆரம்பிச்சு டெம்ப்லேட்ல வலது  மார்ஜின் அதிகம் விட்டு, பின் பக்க படங்களை எல்லாம் போடணும். அதை தனியா சேமிக்கணும்.
பக்கங்களை பழையபடி பிடிஎஃப் ஆக்க வேண்டியதுதான்! 
இதுல வந்த சிக்கல்கள் பத்தி பதிவு நாளைக்கு! 

Friday, December 7, 2012

மின்னாக்கம் -2 ஸ்கேன்டெய்லர்.


இந்த பதிவில நிறைய படங்கள் இருப்பதால பெரிசா தோணும். உண்மையில் அப்படி இல்லை.
---------------------------------------------------------------------------------------------------------------

ஸ்கேன் டெய்லர் சமாசாரம் பார்க்கலாம்.
இந்த மென்பொருள் இலவசம். விண்டோஸ், நிக்ஸ் ரெண்டுத்துக்கும் கிடைக்கும்.
புத்தகங்களை படமெடுத்த பிறகு நமக்கு பிம்பத்துக்கு இரண்டு பக்கங்கள் கிடைக்கும். இதை எல்லாம் மேலே ஸ்கேன்டெய்லர்லேயே ப்ராசஸ் செய்துக்கலாம். ந்யூ ப்ராஜக்டை மேலே இன்புட் போல்டர் புலத்தில ப்ரௌஸ் மேலே சொடுக்கி இந்த படங்கள் இருக்கிற போல்டரை காட்டிட்டா செலக்ட் ஆல் ன்னு சொன்னா எல்லா படங்களையும் அது எடுத்துக்கும்.







ஒகே சொன்ன பிறகு அடுத்து DPI பிக்ஸ் செய்ய சாளரம் திறக்கும்எல்லாம் ஒரே மாதிரி வரணும் என்கிறதால இதில் எல்லாத்தையும் தேர்ந்தெடுத்து கஸ்டம் ன்னு சொல்லி 300*300 ன்னு கொடுக்கலாம்அப்ளை தட்டி ஒக்கே ன்னு சொல்லிடுவோம்.




இப்ப பாத்தா நமக்கு தேவையில்லாத படங்கள் சிலது சேர்ந்து இருக்குபடத்து மேலே வலது சொடுக்க தேர்வுகளில ரிமூவ் ஃப்ரம் ப்ராஜக்ட் ன்னு வருதுஇதை தேர்ந்தெடுத்தா நெஜம்மா நீக்கணுமான்னு உறுதிபடுத்திக்கிட்டு அதை நீக்கிடும். (இதை காட்ட வேணும்ன்னுதான் இப்படி செய்தேன்தேர்ந்தெடுக்கறப்ப கவனமா தேவையானதை மட்டும் தேர்ந்தெடுக்கணும்ஒரு வேளை வேண்டாத படம் வந்தா இப்படி நீக்கிடலாம்!)



ரைட் இப்ப பாருங்கபழுப்பு நிறத்துல சில படங்கள்ச்சும்மா சாம்பிளுக்கு சிலது மட்டும் சேர்த்தேன்.





ரைட், அடுத்து பார்க்க வேண்டியது இடது பக்கம் இருக்கிற பலகம்.

முதல் தேர்வு சாய்வா இருக்கக்கூடிய படத்த நேராக்கசும்மா அப்படியே சொடுக்கினா வலது பக்கம் ஹைலைட் ஆகியிருக்கிற படம் மட்டுமே நேராக்கப்படும்அடுத்து வரக்கூடிய எல்லாப்படிகளுக்கும் அப்படித்தான்அதனால் கீழே ஸ்கோப் ஐ சொடுக்கி தேர்வில் எல்லாத்தையும் தேர்ந்தெடுக்கணும்பின் வலப்பக்கம் அம்புக்குறியோட இருக்கிற பட்டனை சொடுக்க எல்லா பக்கங்களுக்கும் அது செய்யப்படும்.



அடுத்த படி பக்கங்களை வெட்டமுழு பக்கமா இருக்கலாம்அல்லது கடைசியா இருக்கிறது போல இரண்டு பக்கமாமூன்றாவதா இடப்பக்கம் ஒரு வேண்டாத ஒட்டோட ஒரு பக்கம்தானியங்கியா செய்வதே சரியாகவே இருக்கும்இருந்தாலும் அது அப்படி செய்த பிறகு ஒவ்வொரு படமா பார்த்து தேவையானால் சரி செய்யணும்.




 அடுத்தப்படி கோணல் சரி செய்யஅதான் முன்னேயே சரி செய்தோமேன்னாஇல்லைஅது வேறஇப்ப இரண்டு பக்கமா பிரிஞ்ச பிறகு திருப்பி சரி செய்ய வேண்டி இருக்கும்புத்தகங்களை பிரிச்ச பிறகு இரண்டு பக்கங்களும் சமமா இருக்கும்ன்னு சொல்ல முடியாது.

இதையும் தானியங்கியா செய்துடலாம்சரியாவே இருக்கும்.


அடுத்தப்படி செலக்ட் கன்டன்ட்அதாவது உரை பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை வெட்டிவிடும்இந்த படியில நமக்கு வேலை அதிகம் இருக்கும்தானியங்கியா செயல்பட்ட பிறகு நிறையவே சரி செய்ய வேண்டி இருக்கும்முதல் படத்தை பாருங்கதேர்வான இடம் ஊதா நிறத்துல இருக்குஇடது ஓரம் கருப்பா விளிம்பு தெரிவதால அதையும் சேர்த்துவிட்டதுவலது பக்கம் மற்ற பக்கங்களோட விளிம்புகள் கருப்பா தெரிவதால அதுவும்மேல் விளிம்பும் அப்படியேஆனால் கீழ் விளிம்பு அந்த பிரச்சினை இல்லாம இருப்பதால சரியா வெட்டுது பாருங்க. கீழே  அடுத்த படத்துல எல்லா பக்கத்திலேயும் அதன் தேர்வு சரியாவே இருக்குஇந்த படியில நாம் ஒவ்வொரு பக்கத்தையும் கவனமா பார்த்து சரி செய்யணும்எப்படி சரி செய்யறதுநாலு பக்கமும் ஊதா கோடு இருக்கு இல்லேஅவை சொடுக்கியால பிடிச்சு இழுத்தா இழுத்த இழுப்புக்கு வரும்இழுத்து சரியான இடத்தில விடுங்க.


சரி அடுத்த படிமார்ஜின். (படம் கீழே) முந்தைய படில தேவையில்லைன்னு வெட்டினதால இப்ப வெள்ளையா மார்ஜின் சேர்க்கணும்இல்லாட்டா புத்தகம் சரியா வராதுபடிக்க கஷ்டமா இருக்கும்இந்த படியில் எவ்வளவு மார்ஜின் வேணும்கீழேமேலேபக்கவாட்டிலேன்னு தேர்ந்தெடுத்து அம்புக்குறியோட உள்ள பட்டனை சொடுக்கி மார்ஜின் அமைக்க ஏறத்தாழ வேலை முடிஞ்சதுஆமாஒவ்வொரு படியிலேயும் அப்ளை டு பட்டனை சொடுக்கி ஆல் ன்னு தேர்வு செய்யறிங்கதானேஇல்லாட்டா ஒரு படம் மட்டுமே ப்ராசஸ் ஆகும்!



இந்த படியில கீழே இன்னொரு தேர்வு இருக்கு பாருங்க
. அலைன்மென்ட். இதால எல்லா பக்கங்களையும் ஒரே அளவா அமைக்கலாம்சில அத்தியாயங்கள் முடிகிற பக்கத்தில -உரைப்பகுதி கன்டென்ட் பாதி பக்கம்தான் வரும்இல்லையாஅதனால இந்த படி வேணும்.


கடைசியா இருக்கிற படி அவுட்புட்இங்க முதல் தேர்வு டிபிஐ அமைக்கிறதுநாம 300*300 ன்னு முன்னேயே தேர்ந்து எடுத்து இருக்கறதால அதையே அமைக்கலாம்
அடுத்து மோட்ப்ளாக் அன்ட் வைட் என்கிறது எல்லாம் உரைகளுக்குமானதுபடம் இருந்தா அந்த பக்கத்தை க்ரே ஸ்கேல்கலர் ல அமைக்கலாம்படம் உரை இரண்டும் இருந்தா மிக்ஸ்ட்இப்படி செய்யாட்டா பக்கம் கண்ணறாவியா இருக்கும்.



சரி தேர்வுகளை முடிச்சு அம்புக்குறி பட்டனை தட்டிட்டு அடுத்த வேலையை பார்க்க போகலாம். இது வரை மென்பொருள் தேவையான மாற்றங்களை குறிச்சு வெச்சுதே தவிர வேறு செயல் எதையும் செய்யலை. அதனால இப்ப வேறு மாறுதல்கள் வேணுமானா பின்னே போய் தேவையான படிகளில மாறுதல்களை செய்யலாம். இப்ப இந்த பட்டனை சொடுக்கிய பின்னால்தான் எல்லா மாறுதல்களும் செய்யப்பட்டு படங்கள் முன்னே தேர்ந்தெடுத்த வெளியீட்டு அடைவுக்கு சேமிக்கப்படும். இத்தனையும் செய்ய நேரமாகும் என்பதால நாம் கணினியை வேலை செய்யவிட்டு விட்டு வேறு வேலையை பார்க்க போகலாம். வேலை முடிஞ்ச பிறகு அது மணி அடிச்சு தெரிவிக்கும்!

முடிவா ப்ராஜக்டை சேமிக்கிறது நல்லது. நமக்கு வேண்டிய படங்கள் எல்லாம் இப்ப  கிடைச்சுட்டாலும் பின்னால் எதேனும் மாற்றம் தேவையானால் ப்ராஜக்டை திறந்து மாற்றங்களை செய்யலாம். விடு பட்ட பக்கங்கள், விடுபட்டு போன படம் உள்ள பக்கங்களை படத்துக்காக திருத்த... இப்படி பல மாற்றங்கள் தேவையாக இருக்கலாம்.

இப்ப படங்களை பார்த்தால் கருப்பு வெள்ளையாக தெளிவாக இருக்கும். இவற்றை அடுத்து உங்கள் அபிமான மென்பொருளால மென்நூலாக மாற்ற வேண்டியதுதான். அது தனி டாபிக், தனி பதிவு!




Tuesday, December 4, 2012

மின்னாக்கம்


நல்லாயிருக்கீங்களா? ரொம்ப நாளாச்சு பாத்து.
(இது குறித்த முதல் பதிவு பிடிஎஃப் கோப்பாக இங்கே இருக்கிறது. முதலில் அதைப்படித்தால் இது சரியாக புரியும். திருத்தியது 31 மே 2021)

இன்னிக்கு மின்னாக்கம் பத்தி பேசபோறேன். பழைய நூல்கள் ஓலைச்சுவடிகள் இவற்றில் எழுதி இருக்கறதை பாதுகாக்கிற முயற்சியில சில வருஷங்களா ஈடுபட்டு இருக்கேன். 'புகைப்படம்' எடுக்கிற வழியில இதை முயற்சி செய்துகிட்டு இருக்கேன், இதற்கு முன் இருந்த பல வழிகளை விட நான் பின்பற்றிய வழி கொஞ்சம் நல்லா இருந்ததே ஒழிய இன்னும் திருப்தி ஏற்படலை. ஒண்ணாவது, புத்தகம் பழைய புத்தகம்தான் நான் ன்னு சொல்கிற விதத்தில வெறும் கருப்பு வெள்ளையா அமையாம பல சாயல்களில் இருந்தது. இரண்டாவது ஒவ்வொரு மென்புத்தகமும் ஒவ்வொரு மாதிரி இருந்தது. சிலதுல நல்லா ஜூம் செய்து பார்க்க முடியும். சிலதுல முடியாது. சிலதுல மொத்த கோப்பு அளவு குறைவா இருக்கும். சிலதுல அதிகமா இருந்தும் நல்லா இருக்காது. இப்படி ஒரு செந்தரமா இல்லாம இருந்தது.
தொடர்ந்து பல சோதனைகளை செய்துகிட்டு இருந்தேன்.

முதல் முன்னேற்றம் ஸ்கேன்டெய்லர் என்கிற மென்பொருள் தொடர்பானது. இதோட உள் பொதிந்த அன்பேப்பர் போன்றதை எல்லாம் தனித்த்னியே முன்னே பயன்படுத்த முயற்சி செய்து இருக்கேன். அவற்றில் இருந்த சிக்கல்களை எல்லாம் சரிசெய்து ஸ்கேன்டெய்லர் என்கிற இலவச மென்பொருளா இப்ப கிடைக்குது. முன்னே செய்த பக்கங்களை பிரிப்பது, சுழற்றுவது, கருப்பு வெள்ளையாக்குவது போன்ற பல படிகளை இது ஒண்ணே செய்து முடிக்குது. இது வேலையை சுலபமாக்கிவிட்டது. ஆகவே படங்களை ப்ராசஸ் செய்வது இப்ப படு சுலபமாகிவிட்டது.

இரண்டாவது முன்னேற்றம் காமிரா பத்தியது. ஸ்கேன் டெய்லரை பயன்படுத்தியும் இருந்த சில சிக்கல்களின் காரணம் புரிய வந்தது.

இதைப்பத்தி முதல்ல சொல்லிடறேன். அதிகமில்லை என்கிறதால இது கொஞ்சம் சுலபம்.
நல்ல தெளிவான பிம்பங்களா புத்தகம் இருக்க ஸ்கேன்டெய்லருக்கு தேவையான தெளிதிறன் 300டிபிஐ(DPI). அதாவது ஒரு இஞ்சுக்கு 300 புள்ளிகள். இவ்வளவு விவரம் வேணும். மென்பொருட்களாள இதை கொண்டுவரலாம்ன்னாலும் சட்டியில் இல்லாதது அகப்பையில் வராது என்பது போல மூல படத்தில் இல்லாத விவரம் வராது. ஒரு சின்ன ஏமாத்து வேலை போலத்தான் அது.
இப்ப வர சாதாரணமா ஒரு புத்தகத்தோட அளவு 7 இஞ்ச் உயரம் 4 ½ இன்ச் அகலம். பிரிச்சு வெச்சு படம் எடுக்கறதால பிம்ப அகலம் 9 இன்ச். ஆக பெருக்கினா 63 சதுர இன்ச். ஒருசதுர இன்ச்சுக்கு நமக்கு 300*300 90000 பிக்சல் வேணும். 63 க்கு 5670000 பிக்சல். மில்லியனால வகுத்தா தோராயமா மெகா பிக்சல். அதாவது 5.67 மெகாபிக்சல் காமிரா வேணும்.

அந்த காலத்து பல புத்தகங்கள் 9 இன்ச் உயரம். 6 இன்ச் அகலம். அதனால இதையே கணக்கு செய்யலாம். 9*12 = 108. இதுக்கு தேவை குறைந்தது 9.72 மெகாபிக்சல் காமிரா. இவ்வளவு சரியா காமிரா அமையாது! ஆனா நமக்கு தேவையானது இதுக்கு மேலேன்னு தெரிஞ்சுக்கலாம்!

அதிர்ஷ்டவசமா இப்ப இந்த கான்பிகரேஷன் காமிரா சுமார் 10 ஆயிரத்துக்கே கிடைக்குது. முன்னே 8 மெகாபிக்சல் காமிரா 13 ஆயிரத்துக்கு வாங்கினேன். (யாரும் காமிரா வாங்கறதா இருந்தா தைரியமா வாங்கலாம். நான் வாங்கினா ஒரு மாசத்துக்குள்ள விலை குறையும் என்கிறது நிச்சயம்!) இப்ப அதே விலைக்கு 16 மெகாபிக்சல் காமிரா வாங்கி இருக்கேன்!
மற்றபடி படமெடுக்கும் டெக்னிக் எல்லாம் அதேதான்; மாற்றமில்லை.

முன்னே தயார் செய்த அட்டைப்பெட்டி எனக்கு ரிடயர்மென்ட் கொடுன்னு கொஞ்சித்து. நல்லா உழைச்சுட்டே, போய் வா ன்னு அனுப்பிட்டேன்.




இப்ப சமீபத்தில பெட்டி தயார் செய்தப்ப நான்கு மூலைகளிலும் பொருத்த தகுந்தபடி மூணு பக்கம் உள்ள பை ஜாய்ன்ட் கிடைச்சது. (படத்தை பாருங்க) இது பெட்டி தயாரிப்பை சுலபமாக்கிவிட்டது. எந்த கடையில் இந்த மாதிரி ஜாய்ன்ட் கிடைக்கும்ன்னு தெரியலை. யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்க. பைப்பாலேயே ப்ரேம்வெர்க் மாதிரி செய்துவிட்டு எல்லா பக்கமும் டிஸ்யூ பேப்பர் சுத்தியிருக்கேன். இது இன்னும் அதிக வெளிச்சத்தை உள்ளே விடுது. கீழே வெள்ளை தெர்மோகோல் பலகம். மேலேயும். இதனால் வெள்ளை பேப்பர் ஒட்டறதை தவிர்த்துவிட்டேன். சிஎஃப்எல் பல்ப், பக்கவாட்டு வெள்ளை தடுப்பு, உள்ளே கண்ணாடி, இதில் எல்லாம் மாற்றமில்லை.
அடுத்து ஸ்கேன் டெய்லர்.