Wednesday, March 4, 2020

மின்னூல் உருவாக்கம் - 4



சரி, உங்கள் மின் புத்தகத்துக்கு படங்கள் அவசியம் என்று கொள்வோம். என்ன செய்யலாம்.
பரவாயில்லை. உங்கள் டாக்குமெண்டிலேயே இதை சேருங்கள். அது ஏற்கெனெவே தெரிந்து இருக்கும். சரியான இடத்தில் சொடுக்கி மெனுவில் இன்சர்ட் இமேஜ், பின் சரியான படத்தை சுட்டிக்காட்டி படத்தை புகுத்திவிடலாம்.
முதலில் படத்தை சரியாக வெட்டிக்கொள்ளுங்கள். தேவையானதை மட்டும் காட்டுவதாக இருக்கட்டும்.
படம் கருப்பு வெள்ளையா? வண்ணமா?
எதில் படிக்கப்போகிறார்கள் என்பதைப்பொருத்தது. கிண்டில் போல வன்பொருட்கள் பலதும் வண்ணங்களை காட்டுவதில்லை. வண்ண மயமான உங்கள் படம் அசிங்கமாக தெரிய வாய்ப்புண்டு! இந்த பிரச்சினை கணினியிலோ கைப்பேசியிலோ பார்க்கும் போது இராது.
ஆனால் வண்ணம் மொத்தமாக புத்தகத்தின் அளவை அதிகரிக்கப்போகிறது. இது பிரச்சினையாக வாய்ப்புள்ளது. என்ன செய்யலாம்?
இதன் அளவை சரி செய்ய வேண்டும்.
அளவு என்பது இங்கே இரண்டு விஷயங்கள். ஒன்று நீள அகலங்கள். இரண்டாவது கோப்பின் அளவு (image file size).
இப்போதைய அலைபேசிகள் சர்வ சாதாரணமாக அதிக பிக்சல் அளவு படங்களை எடுக்கின்றன. 3264×2448 எல்லாம் சர்வ சாதாரணம். ஆனால் யார் சூப்பர் ஹைடெபினிஷன் 30 இன்ச் மானிட்டரில் இதை படிக்கப்போகிறார்கள்?
ரைட். அப்ப நமக்கு வேண்டியது கையடக்க அலைபேசியிலோ மின்னூல் வன்பொருளிலோ படிக்க முடியும் படம். வன்பொருட்களில் சாதாரணமாக சிறிய பக்கம் 1600 பிக்சல்கள். அலைபேசியில் 600 பிக்சல்கள்.
உங்கள் ஆதர்ச பட எடிட்டரில் படத்தை திறந்து கொள்ளுங்கள்.
ரீ சைஸ் தேர்வு செய்து 600 முதல் 1600 வரை சிறிய பக்கம் வருமாறு அமைத்துக்கொள்ளுங்கள். கீப் ஆஸ்பக்ட் ரேஷியோ ஐ தேர்வு செய்ய மறக்க வேண்டாம். ஓகே சொன்ன பிறகு இதை சுருக்கி (compress) சேமிக்க வேண்டும். அதற்கு இதை எக்ஸ்போர்ட் செய்ய வேண்டும். பிஎன்ஜி அல்லது ஜேபெக் பார்மாட் நல்லது. அப்போது மென்பொருள் க்வாலிடி எவ்வளவு வேண்டும் என்று கேட்கும்.
இங்கே கொஞ்சம் பிரச்சினை உள்ளது. ஒவ்வொரு மென்பொருளும் ஒவ்வொரு மாதிரி சுருக்கும். குத்து மதிப்பாக செய்து பார்த்து பின் திருப்தி இல்லை என்றால் திருத்திக்கொண்டு என்று போவதே நல்லது. இறுதி கோப்பின் அளவு? தெளிவு அதிகமாக வேண்டுமெனில் 100-150 கேபி. இல்லை எனில் 50 கேபி போதுமானது.
ரைட்! இப்போ சுலபமான வழியை பார்க்கலாமா? நாசமாப்போச்சு இத முன்னாலேயே சொல்லப்படாதா என்கிறீர்களா? ஹிஹிஹி!
லிப்ரே ஆபீஸ் டாகுமெண்டில்தானே இதை எல்லாம் எழுதுகிறீர்கள்? நீங்கள் படத்தை இன்சர்ட் செய்யும்போதே அது சிறியதாக்கித்தான் புகுத்தும். தேவையான தெளிவை மனதில் கொண்டு அதன் ஒரு மூலையை பிடித்து இழுத்து அளவை (நீள அகலம்) மாற்றிக்கொள்ளலாம். பின் அதை வலது சொடுக்கு சொடுக்கி கம்ப்ரஸ் தெரிவு செய்யுங்கள்.






இப்போது கிடைக்கும் மெனுவை பாருங்கள். படத்தின் அடர்த்தி (டிபிஐ) அதிகம். 96 க்கு மேல் இருந்து பிரயோசனமில்லை.





தேவையான க்வாலிடியை தேர்ந்து எடுங்கள். கால்குலேட் நியூ சைஸ் என்பதை அழுத்த கிடைக்கப்போகும் படத்தின் அளவு தெரியும். கூட்டியோ குறைத்தோ மாற்றுங்கள். திருப்தி ஆன பின் ஓகே சொன்னால் முடிந்தது கதை
படங்களை இப்படி அளவு குறைத்த பின் மொத்த மின் புத்தகத்தின் அளவு  குறைந்திருப்பதை பாருங்கள்! 
 
படங்களின் மெடா டேடாவை நீக்க மென்பொருட்கள் உள்ளன. தேவையாவர்கள் தேடிப்பிடித்து பயன்படுத்துங்கள். 20 கேபி வரை அளவை குறைக்கலாம்
-நிறைந்தது-  





Tuesday, March 3, 2020

மின்னூல் உருவாக்கம் - 3


மின்னூல் மிகவும் எளிதாக இருக்க வேண்டும் என்றால் அதில் அட்டைப்படம் அல்லது உள்ளடக்க அட்டவணை இருக்கவேண்டிய தேவை இல்லை. தேவையானால் ஒரு வெற்று பக்கத்தில் உரை மட்டும் இருக்கும் படி, தலைப்பு, ஆசிரியர் போன்ற விவரங்களை எழுதி ஒரு அட்டையாக ஆக்கிக்கொள்ளுங்கள். முதல் பக்கம் இங்கே அட்டை. சரிதானே?

---
ஒருவேளை அதெல்லாம் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இந்த மின் நூலில் அளவு அதிகமாகிவிடும். பரவாயில்லை என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் இதை எடிட் செய்யுங்கள் முன்னே நீங்கள் பார்த்தீர்களே அந்த ஈபுக் எடிட்டர்; அதுதான் இப்போது இதை திறக்க போகிறது அதை மேலே டூல்ஸ் இல் பார்த்தால் ஆட் கவர் என்று ஒரு தேர்வு இருக்கும்


 
அதை சொடுக்குங்கள் நீங்கள் முன்னதாகவே இதற்கான ஒரு படத்தை தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும். அதில் தேவையான நூல் பெயர், ஆசிரியர் பெயர் ஆகியவற்றை உள்ளிட்டு இருக்க வேண்டும். இப்போது எங்கிருந்து படத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற விவரத்தை மின் மென்பொருளுக்கு கொடுத்தால் அது ஒரு அட்டைப்படத்தை உருவாக்கிவிடும்.

அதேபோல நீங்கள் ஒரு உள்ளடக்க அட்டவணை அவசியம் வேண்டும் என்று நினைத்தால் இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். இப்போது நீங்கள் உருவாக்கி உள்ள இந்த மின் நூலில் அதற்குத்தேவையான விவரம் எதுவும் இருக்காது. ஆகவே இப்போது நாம் இந்தப் பெரிய பைலை சின்ன சின்ன பைல்களாக பிரிக்க வேண்டும். இப்படி பிரித்துவிட்டால் முன்னே பைல் அளவு 240 கேபிக்கு அதிகம் என்று சொன்ன பிழையும் வராது. இதற்கு நாம் உபயோகப்படுத்துவது வலது பக்கம் கீழே ஊதா கலரில் இரண்டு கட்டங்களாக இருக்கும் பட்டனைத்தான். அதை சொடுக்கி விட்டு நாம் டாக்குமெண்டை ஆரம்பத்திலிருந்து பார்க்கலாம். ஒரு பச்சை கோடு பிரிக்கும் இடத்தை காட்டும். முதலாவது அத்தியாயம் எங்கே முடிகிறதோ அங்கே சொடுக்க வேண்டும். இந்த இடத்தில் டாக்குமெண்ட் இரண்டாக பிரிக்கப்பட்டு விடும். நாம் சொடுக்கிய இடம் இப்போது மேலே போய்விடும். அதாவது இப்போது இந்த இரண்டாவது டாக்குமெண்ட் ஆரம்பத்திலிருந்து காட்டப்படுகிறது. கட்ட பட்டனை மீண்டும் சொடுக்கி இந்த அத்தியாயம் முடியும் இடத்தை தேடி கண்டுபிடித்து அந்த இடத்தில் மீண்டும் சொடுக்க மீண்டும் பிரிக்கப்படும். இப்படியே கடைசி வரை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பிரித்துக் கொள்ளலாம்



இப்படி செய்த பிறகு நாம் மேலே மெனுவில் டூல்ஸ் என்றிருப்பதை சொடுக்கி டேபில் ஆஃப் கன்டெண்ட்ஸ் ஐ சொடுக்கலாம். அதில் எடிட் டிஓசி (edit TOC) என்னும் முதல் பட்டனை தேர்வு செய்யுங்கள். படத்தை பாருங்கள்.




இந்த இடத்தில் நாம் ஜெனரேட் டாக் ஃப்ரம் பைல்ஸ் என்று இருப்பதை தேர்வு செய்தால் இடதுபக்கம் அத்தனை அத்தியாயங்களும் காட்டப்படும். ஓகே கொடுத்தால் வேலை முடிந்தது.




தொடரும்
 

Monday, March 2, 2020

மின்னூல் உருவாக்கம் - 2


உங்களுடைய டாக்குமெண்ட்ஸ் போல்டரில் போய் பார்த்தால் இது இருக்கும். அதை சொடுக்குங்கள். காலிப்ரே இதை திறக்கும். ஒருவேளை வேறு ஏதும் மென்பொருள் திறந்தது என்றால் காலிப்ரே மூலமாக 'ஆட் புக்' ஐ சொடுக்கி இந்த மின்னூலை திறவுங்கள். மேலே மெனுவில் பார்த்தால் எடிட் மெட்டாடேட்டா என்று இருக்கும். அதை சொடுக்குங்கள். புத்தகத் தலைப்பு (டைட்டில்), ஆசிரியர் (ஆதர்) பெயர், இது எந்த சீரிஸ் போன்ற விவரங்களை பூர்த்தி செய்யுங்கள், பூர்த்தி செய்து கீழே வலது பக்கம் ஓகே ஐ சொடுக்கினால் இது சரியாக சேமிக்கப்பட்டு விடும்.





இதை வேறு ஒரு பார்மட் க்கு மாற்ற வேண்டும் என்றால் மேலே மூன்றாவதாக கன்வர்ட் புக்ஸ் என்று பட்டன் இருக்கும்; அதை சொடுக்குங்கள். நீங்கள் கிண்டிலில் வாசிக்க விரும்பினால் அதை azw3 என்ற பார்மட்டில் சேமிக்கவேண்டும். இதற்காக நீங்கள் கன்வெர்ட் புக் ஐ சொடுக்கின பின் வலது பக்கம் மேலே இருக்கும் காம்போ பாக்ஸை பிடித்து இழுத்து அதில் இந்த பார்மட்டை தெரிவு செய்யுங்கள். அல்லது உங்களுக்கு தேவையான பார்மேட் ஐ தேர்ந்து கொள்ளுங்கள்.




மின்னூல் மிகவும் எளிதாக இருக்க வேண்டும் என்றால் அதில் அட்டைப்படம் அல்லது உள்ளடக்க அட்டவணை இருக்கவேண்டிய தேவை இல்லை. தேவையானால் ஒரு வெற்று பக்கத்தில் உரை மட்டும் இருக்கும் படி, தலைப்பு, ஆசிரியர் போன்ற விவரங்களை எழுதி ஒரு அட்டையாக ஆக்கிக்கொள்ளுங்கள். முதல் பக்கம் இங்கே அட்டை. சரிதானே
-தொடரும்  

Sunday, March 1, 2020

மின்னூல் உருவாக்கம் - 1


அப்பாடா! ஒரு வழியா குளிர் காலம் போச்சு. நம்மோட லொக் லொக் எல்லாம் போயே போச்சு.
இப்ப நாம் நம்ம வேலைய கொஞ்சம் நிம்மதியா பாக்கலாம்.
எத்தனை ப்ளாக் எழுதி இருக்கோம்! அது எல்லாம் ஒரு பொற்காலம்! இப்பல்லாம் எல்லாரும் ஃபேஸ்புக் ட்விட்டர்ன்னு இருக்காங்க. இருந்தாலும் நம்ம ஆதர்ச ப்ளாக் எல்லாம் மறக்கற விஷயமா? நாம பாட்டுக்கு அதப்பாப்போம்.
இப்போது நாம் மின்னூல் உருவாக்கம் பற்றி பார்க்க இருக்கிறோம்.
மின் புத்தகங்கள் வரத்துவங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அதில் இன்னும் குறைபாடுகள் உள்ளன. பல சமயங்களில் இவற்றை தரவேற்ற முயலுகையில் அவை ஒப்புக்கொள்ளப்படுவதில்லை (failed validation). பல ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய நூலை அல்லது வலைப்பூ படைப்புகளை மின்புத்தகம் ஆக்கும்போது இந்த தடங்கல்கள் சலிப்பைத்தருகின்றன.
ஆகவே எளிய வகையில் மின் புத்தகம் தயாரிக்க ஒரு வழியை பார்க்கலாமா?

இதற்கு தேவையான மென்பொருட்கள் பின்வருமாறு:
1. காலிப்ரே என்னும் மென்பொருள் https://calibre-ebook.com/ இல் கிடைக்கும். 2. எளிய டெக்ஸ்ட் எடிட்டர்.



நாம் முதலில் என்ன செய்ய வேண்டும் என்றால் எந்த டாக்குமெண்ட் ஐ நாம் மின் நூலாக்க வேண்டுமோ அதை திறந்து கொள்ள வேண்டும். அதிலிருக்கும் உரையை ஒத்தி எளிய டெக்ஸ்ட் 'எடிட்டர் ' இல் ஒட்டுங்கள். இப்படி செய்தபின் அதை பார்வையிடுங்கள். நமக்கு மிகவும் எளிய மின் நூல் போதும். ஏனெனில் நாம் இந்த மின்னூலை ஒரு அலைபேசியிலோ அல்லது கிண்டில் வன்பொருளிலோ படிக்கப் போகிறோம். ஆகவே நமக்கு இடம் என்பது ஒரு அரிதான விஷயம். அதை முடிந்தவரை சரியாக பயன்படுத்த வேண்டும்.

அதனால் நாம் குறைந்த அளவு வரும்படி உரையை திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு லைன் இன்டெண்டோ, ப்ரேக்கோ அல்லது அனாவசியமான வெற்று வரியோ நீக்கப்பட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் இவை அலைபேசியில் படிப்பதை கடினமாகும்.



இப்படி முடிந்தவரை கூடுதல் வெற்றிடங்கள் வெற்று வரிகள் ஆகியவற்றை நீக்க வேண்டும். பிறகு ஓப்பன் ஆபீஸ் அல்லது லிப்ரே ஆஃபீஸ் ஆகியவற்றில் ஒரு ரைட்டர் டாக்குமெண்டை திறந்து கொள்ள வேண்டும். அல்லது நீங்கள் விண்டோஸ் இல் வேர்ட் பயன்படுத்துவதாக இருந்தால் அதில் ஒரு டாக்குமெண்டை திறந்து கொள்ளலாம். இப்போது இந்த டெக்ஸ்ட் எடிட்டர் இல் இருக்கும் உரையை அப்படியே ஒத்தி இங்கே ஒட்டுங்கள். பிறகு இதை சேமியுங்கள். சேமிக்கும்போது அவசியமாக டாக்ஸ் (*.docx) பார்மாட்டில் சேமிக்க வேண்டும். அடுத்து...

நாம் காலிப்ரே மென்பொருளை துவக்க வேண்டும் இந்த காலிப்ரே உடன் ஒரு e-book எடிட்டர் நிறுவப்படுகிறது இப்போது அதை துவக்கி கொள்ளுங்கள் அடுத்து அதில் மெனுவில் ஃபைல் இல் சொடுக்க திறக்கும் விண்டோவில் தேவையான டாக்குமெண்டை திறந்து கொள்ளுங்கள்


இப்போது அது புதிய மின் புத்தகமாக திறக்கப்படும். இடப்பக்கம் நடுவில் இன்டெக்ஸ் எச்டிஎம்எல் (index.html) என்று இருப்பதை சொடுக்குங்கள். இப்போது நடுவில் இருக்கும் இடத்தில் எச்டிஎம் எல்லாகவும் வலது பக்கம் மின் புத்தக உரையாகவும் தெரியும். இப்போது மேலே வலது பக்கம் இருக்கும் ரன் செக் (run check) என்பதை சொடுக்குங்கள். இந்த மின் நூலில் தவறுகள் இருந்தால் அது காட்டப்படும். நாம் எளிய டெக்ஸ்ட் எடிட்டர் இலிருந்து உருவாக்குவதால் அனேகமாக தவறு ஏதும் இருக்காது. சில சமயம் இந்த புத்தகம் 240 கேபிக்கு மேல் இருக்கிறது; சில மின்நூல் மென்பொருட்கள் இதனை காட்டாமல் சரியாகக் காட்டாமல் போகலாம் என்று சொல்லலாம். பரவாயில்லை. இதை சிறியதாக பிரிக்க முடியும். அதை பின்னால் பார்க்கலாம். இப்போது நாம் இதை சேமிக்கலாம். இதில் இப்போது ஈபப் (EPUB) ஆகத்தான் இது சேமிக்கப்படும்
-தொடரும்