Friday, December 3, 2010

அங்கிள் வைரஸ், ஆன்டி வைரஸ் ....

வைரஸ் என்கிறது ஒரு கெட்ட வஸ்து. அது சின்ன ப்ரோக்ராம். வைரஸ் மாதிரியே தொத்திக்கும், மத்த கணினிகளிலே! அங்கே போய் பல்கி பெருகும்.அப்புறம் புது இடம் தேடி போகும். அதனால்தான் வைரஸ்ன்னு பேர் வெச்சாங்க.


அதுக்கு ஒரு பாதுகாப்பு இல்லாம நெட்லே இறங்கினா 20 நிமிஷத்திலே நிச்சயமா கணினி பாதிக்கப்படும்ன்னு சொல்றாங்க.
ஒரு உதாரணம் பார்க்கலாம்.

Here is an example of just how fast a virus can spread. One of the fastest spreading computer viruses was the one known as the "Slammer Worm" It started when someone sent some code to a SQL server where it sneaked in through an open unprotected port. Once it was in that server, the Slammer generated a set of random Internet addresses and scanned them for other unprotected computers. Then it infected them. From the computers it infected, it generated more IP addresses, scanned them and infected them. Seems like a nightmare doesn't it?

The Slammer worm was relentless. In the first minute of existence, it doubled the number of machines that it infected every 8.5 seconds. In just three minutes it was scanning 55 million targets per second! Within 10-minutes, 90 percent of all unprotected computers in the world were infected. Luckily that is all that it did was spread. What a nightmare it would have been if it carried a payload that actually damaged computers.

ஸ்லாமர் ன்னு ஒரு வேர்ம் வகை வைரஸ். ரொம்ப சின்னது! (376 பைட்டுகள்தான்) பாதுகாப்பில்லாத ஒரு எஸ்க்யூஎல் சர்வருக்கு அனுப்பியதும் அங்கே போய் குறிப்பில்லாத இன்டர்நெட் அட்ரஸ்கள் பலது உருவாக்கி அதிலே பாதுகாப்பு இல்லாத கணினி எதெல்லாம்ன்னு பாத்து நுழைஞ்சதாம். ஒவ்வொரு 8.5 செகண்டுக்கும் பாதிக்கப்பட்ட கணினி நம்பர் இரட்டிப்பாச்சு. ச்சும்மா மூணே நிமிஷத்துல அது தன் சகாக்களோட 55 மில்லியன் கணினிகளை ஆரய்ஞ்சு கொண்டு இருந்தது. பத்தே நிமிஷத்திலே உலகத்தில இருக்கிற பாதுகாப்பு இல்லாத கணினிகளிலே 90 சதவிகிதம் (22,000) பாதிக்கப்பட்டது. நல்ல காலம்! இது பரவுகிறதைத்தவிர வேறு ஏதும் செய்யலை. இது கூட கணினியை பாதிக்கிற மாதிரி ஏதும் இருந்து இருந்தா அம்போதான்! அப்படியும் இதால பிஸியான வழிகள் எல்லாம் அடைஞ்சு போய் பாதிப்பு இருந்தது.
இதில என்ன பரிதாபம்ன்னா மைக்ரோசாப்ட் தன் எஸ்க்யூஎல் சர்வர் மென்பொருளிலே ஓட்டை இருக்குன்னு தெரிஞ்சு ஆறு மாசம் முன்னாடியே அதுக்கான தீர்வை வெளியிட்டு இருந்தது. பலரும் அதை நிறுவலை, மைக்ரோசாப்ட் லேயே வேலை செய்யறவங்க உட்பட!
ஸோ இதுக்கு பாதுகாப்பு இல்லாம நெட்லே இறங்கக்கூடாது.
பல ஆன்டி வைரஸ் இலவச மென்பொருட்கள் இதுக்காக இருக்கு. அதிகம் வித்தியாசம் இல்லை. எதை வேணுமானாலும் நிறுவிடலாம். முக்கியமா அதை ஒவ்வொரு முறை நெட்டுக்கு இறங்கும் போது அப்டேட் செய்யணும். இப்ப வர முக்கால்வாசி ப்ரோக்ராம் தானே அப்படி அப்டேட் செய்துக்கிறது போலத்தான் வெச்சு இருக்காங்க!சரி வைரஸ் தாக்கம் வந்தா என்ன ஆகும்? முன் காலத்துல என்ன வேண்ணா ஆகும். கணினி செயலிழக்கும். இல்லை திடீர்ன்னு ஒரு சாளரம் திறந்து ஏதாவது ஒரு செய்தியை சொல்லும். அனேகமா தப்பிக்கக்கூடியது நெட் இணைப்பு மட்டும்தான்! ஏன்னா அது பரவணுமே? :-)) இப்ப செய்தி சேகரிச்சு அனுப்பற மால்வேர்கள்தான் அதிகம்.
முன்னே ப்ளாப்பிதான் வைரஸோட அபிமான பரவு ஊடகம். இப்ப யூஎஸ்பி ட்ரைவ். ப்ரிண்டுக்காக கோப்பை வெளியே அனுப்பற ட்ரைவை பிறகு பார்மேட் செய்தே உபயோகிக்கணும். அதிலே வேற முக்கிய கோப்பு எதுவும் வெச்சு இருக்ககூடாது.
வைரஸ் பத்தி பிறகு விரிவா பார்க்கலாம். இப்போதைக்கு அந்த பாதுகாப்பு முக்கியம்ன்னு தெரிஞ்சா போதும்.

2 comments:

  1. ம்ம்ம்ம் சில நாட்கள் முன்னால் Kaspersky anti virus install பண்ணினவங்க எல்லாருக்குமே trozan le affect ஆச்சு, இது ஏன்?? இவங்க மெயில் வழியா மத்தவங்களுக்கும் ட்ரோஜான் தொந்திரவு ஏற்பட்டது.

    ReplyDelete
  2. ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா ஏதாவது வைரஸ் வந்துகிட்டே இருக்கும். இதை அப்டேட் பண்ணிகிட்டே இருக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். ஏதாவது ஒண்ணை கோட்டை விட்டாலும் பிரச்சினைதான். அதனால தெரியாதவங்க மெய்ல் பாக்கிறதில்லை, அவங்க மெய்ல் இணைப்புகளை தொடறதில்லை -இது போல இருக்கிற பொது எச்சரிக்கைகளை எப்பவும் கடை பிடிக்கணும்.நல்ல வழி ஹிஹிஹிஹி லீனக்ஸுக்கு மாறறதுதான்!

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!