சரி! இதை ஏன் பண்ண சொன்னேன்னா வலையுடைய சக்தி எவ்வளோன்னு தெரிஞ்சுக்கத்தான். அனுமான் மாதிரி நாம! நமக்கே நம்மை பத்தி தெரியாது! திவா ன்னு தேடிப்பாத்தா .... அனியாய அக்கிரமத்துக்கு.... ஹிஹிஹிஹி!
| ||
From browser |
இப்ப நமக்கு ஒரு விஷ்யம் புரிஞ்சிருக்கும். வலையிலே சுலபமா விஷயங்களை கண்டு பிடிக்க செய்ய வேண்டியது தேடு பொறி உதவியை தேடறதுதான். ரொம்பவும் கூட தேட வேண்டாம். முன்னிருப்பாவே அதோட வசதி உலாவியிலே இருக்கு!
கூகுளார் தான் ரொம்ப பிரபலம். எவ்வளோ வார்த்தைகள் கூட கொடுக்கிறோமோ அவ்வளவு சுலபமா நமக்கு வேண்டிய தகவல் கிடைக்கும். ஆமா இன்டர்நெட் ஒரு தகவல் சுரங்கம்.
| ||
From browser |
345 USD in INR ன்னு தேடல் பெட்டியிலே தட்டச்சினா உடனே அது 345 U.S. dollars = 15 545.4423 Indian rupees ன்னு 0.22 வினாடிகளிலே லே தேடி சொல்லிடும். இந்த தேடலுக்கு ஆகிற நேரத்துக்கு நம்மோட இணைய இணைப்புதான் லிமிடிங் சமாசாரம்.
காலேஜ் படிக்கிறப்ப ஒரு சினிமா கிளப் ஆரம்பிச்சு தூதரக டாக்குமென்டரியிலேந்து பழைய ஹிந்தி படங்கள் ஈறா வாரம் ஒரு படம் போட்டு கொண்டிருந்தாங்க. 16 எம் எம் வெள்ளித்திரை! மாசத்திலே ஒரு தமிழ் படம், ஒரு ஹிந்தி படம் ரெண்டு ஆங்கிலப்படம் ன்னு கணக்கு. தமிழ் ஹிந்தி படங்கள் பிரச்சினை இல்லை. தமிழ் படம் புரிஞ்சுடும். ஹிந்தி எப்படியும் புரியாது!
ஆங்கிலப்படம்தான் பிரச்சினையே! என்ன பிரச்சினைன்னா கதை புரிஞ்சா மாதிரியும் இருக்கும். புரியாத மாதிரியும் இருக்கும். அதனால படம் பாத்துட்டு ஹாஸ்டலுக்கு திரும்பும் போது ஆளுக்கு அவங்க அவங்க வெர்சன் கதையை சொல்லிகிட்டு வருவோம்!
இப்ப நம்மகிட்டே உலாவி இருக்கே! பிரச்சினையே இல்லை. அபோகலிப்டோ கதை என்னன்னு தெரியணுமா? தேடு பொறி பெட்டியிலே தட்ட்ச்சுங்க. தேடு பொறியை விக்கிபீடியான்னு அமைங்க. சினிமா கதையை ஜாலியா படிக்கலாம்.
| ||
From browser |
ம்ம்ம்ம்ம்.. அது எப்படி "விக்கிபீடியான்னு அமைங்க"? படத்தை பாருங்க. அந்த பெட்டியிலே ஒரு சின்ன அம்புக்குறி இருக்கா? அதை அமுக்கினா என்ன என்ன தேடு பொறி இருக்குன்னு தெரிஞ்சுடும். அதில விக்கி முன்னிருப்பா இருக்கும். நமக்கு வேன்டியது அந்த பட்டியல்லே இல்லைன்னா manage search engines ஐ சொடுக்கினா கூடுதல் தேர்வுகள் கிடைக்கும். வார்த்தைக்கு அர்த்தம் பாக்க டிக்ஷ்னரி, அடிக்கடி ஏதாஅவது வாங்க ஆசாமிக்கு ஈபே, ஒரு விஷயம் பத்தி முழுக்க என்சைக்ளொபீடியா மாதிரி தெரிஞ்சுக்க விக்கிபீடியா ..இப்படி பல தேடு பொறிகள் இருக்கு.
ஆமா இன்டர்நெட் ஒரு தகவல் சுரங்கம். சட்டையிலே கொட்டின சாம்பார் கறையை போக்கறதுலேந்து ஆன்மீகத்தில ஆவரணம்ன்னா என்ன என்கிறது வரை எல்லா தகவலும் அங்கே இருக்கு! அதை சரியா பயன்படுத்திக்கிறது நம்ம சாமர்த்தியம்.
ஆமா இன்டர்நெட் ஒரு தகவல் சுரங்கம். சட்டையிலே கொட்டின சாம்பார் கறையை போக்கறதுலேந்து//
ReplyDeleteபுடவையிலே கொட்டிடுத்து, போகவே இல்லையே?? நல்ல புடைவை வீணாப் போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)))))))
எழுதி இருந்தேனே, எங்கே போச்சு??? :((((
ReplyDeleteபுடவையிலே கொட்டிடுத்து,//
ReplyDeleteரொம்ப வலிச்சதாமா? :P
// போகவே இல்லையே?? நல்ல புடைவை வீணாப் போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:))))))) //
என்ன புடவை, பாரம்பரா?
நெட்லே வழி தேடிப்பாத்தீங்களா, இல்லையா?
காக்கா தூக்கிண்டு போச்சு. இப்ப வந்துடுத்து!
ReplyDelete