ரைட். இப்ப அடுத்த விஷயம் பார்ப்போம். ஒரு வலைத்தளத்துக்கு போறோம். அங்க நிறைய தொடுப்பு கொடுத்து இந்த மென்பொருளை இலவசமா தரவிறக்கிக்கலாம்ன்னு போட்டு இருக்கு. அட! நல்லதாச்சே! தரவிறக்கலாம்ன்னு பாக்கறீங்க. அதை எப்படி செய்யறது?
தரவிறக்கும் முன்னாடி சில விஷயங்களை கவனிக்கனும். free download ன்னு சொல்லறது பல இடங்களிலே இருக்கும். ஆனா அது உண்மையா இலவசம்தானான்னு பார்கணும். சில இடங்களில மட்டுமே இது free to try ன்னு தெளிவா இருக்கும். அதாவது ஒரு சில -10, 15 - நாட்களுக்கு இலவசமா பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்த அதை காசு கொடுத்து வாங்கணும். இப்படி தர மென்பொருட்களிலே சில சமயம் சில வசதிகளை முடக்கி வைக்கிறதும் உண்டு.
சிலதை தரவிறக்கி நிறுவறப்பத்தான் வண்டவாளம் வெளியாகும். விலாவரியா சமாசாரம் எல்லாம் கேட்டு அப்புறமா ரைட் நிறுவியாச்சு. ஆனா வேலை செய்யணும்ன்னா இங்க போய் ரெஜிஸ்டர் பண்ணு; இவ்வளோ டாலர்தான் ன்னு சொல்லும். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ன்னு கர்ஜனை பண்ணி பிரயோசனமில்லை. முன்னேயே கவனமா நிச்சயமா இலவசமான்னு பாத்து இருக்கணும். அதை வேணுமின்னே சின்ன எழுத்துக்களில ஒரு மூலைல போட்டு வெச்சு இருப்பாங்க!
சிலது தொணப்பல் கேஸ்! சின்ன கால்குலேட்டர், டைமர், கடிகாரம் மாதிரியான மென்பொருட்கள் இபப்டி இருக்கலாம். அதை இவ்வளோ நாள் இலவசமா பயன்படுத்தலாம். அப்புறம் காசு கொடுத்து ஒரு ரெஜிஸ்ட்ரேஷன் விசை வாங்கணும். இல்லைன்னாலும் தொடர்ந்து வேலை செய்யும். ஆனா படுத்தும். அதாவது வேலை செய்ய ஆரம்பிக்கும் முன்னே ரெஜிஸ்டர் பண்ணுங்களேன் அப்படின்னு செய்தியை காட்டும். இல்லை ரெண்டு கணக்கு போட்டதும் டாட்டா சொல்லிட்டு மூடிக்கும். திருப்பி அதை துவக்கணும். இல்லை தன்னோட இணைய தளத்துக்கு அழைச்சுட்டு போய் காசு கொடுக்க இந்த வசதியை பயன்படுத்துங்கன்னு சொல்லும். காசு கொடுக்கறோமோ இல்லையோ அந்த வலைப்பக்கத்தில இருக்கிற விளம்பரம் மூலமா சம்பாதிச்சுடுவாங்க! இப்படி செயல்படற மென்பொருட்களை Nagware அப்படிம்பாங்க. இன்னும் சிலது adware. அதாவது விளம்பரம் மூலமா சம்பாதிக்கறது. ஒரு தரவிறக்க மென்பொருளை பயன்படுத்தறதா வெச்சுக்கலாம். அதை பயன்படுத்தி தரவிறக்கறப்ப முதல்ல ஒரு விளம்பரத்தை தரவிறக்கும். அது அந்த மென்பொருள் சாளரத்தில காட்டப்படும். அஞ்சு நிமிஷத்தில வேலை முடியலைன்னா இன்னொரு விளம்பரம் தரவிறக்கப்பட்டு காட்டப்படும். இப்படியே அது திறந்து இருக்கிற வரை காட்டிக்கிட்டே இருக்கும்.
ரொம்ப பாப்புலரா இருக்கிற ஜிமெய்ல் ஹாட்மெய்ல் யாஹூ மெய்ல் எல்லாமும் ஒரு விதத்தில ஆட்வேர்தான். அவற்றோட வலைப்பக்கத்தில வலது பக்கம் மேலே கீழேன்னு விளம்பரங்கள் வரதை பாருங்க!
யானை இலவசம்; ஆனா அங்குசமும் கூட வாங்கணும். அது இத்தனை ஆயிரம் ரூபான்னு சொல்கிற மாதிரி, இசை இலவசம்; ஆனா என் மென்பொருள் மட்டுமே அதை இசைக்க முடியும். அதை இவ்வளோ காசு கொடுத்து வாங்கு ன்னு சொல்கிற மாதிரியான தளங்களும் உண்டு.
இன்னும் சில இடங்களிலே ஒரு சாதா சோதா மென்பொருளுக்கு ரெஜிஸ்டர் பண்ணிக்க; அதுவும் இலவசம்தான்னு சொல்லும். சரின்னு ரெஜிஸ்டர் பண்ண போனா பேரு, ஊரு, முகவரி, அஞ்சல் முகவரின்னு சப்ஜாடா நிறைய விசாரிக்கும். என்னன்னா இந்த தகவலை காசு கொடுத்து வாங்க ஆள் இருக்கு. இந்த மாதிரி ரெஜிஸ்டர் பண்ணினா கொடுத்த முகவரிக்கு ஸ்பேம் அஞ்சலா வர ஆரம்பிக்கும். என்ன செய்யறது? கூடிய வரை இந்த மாதிரி எங்கேயும் ரெஜிஸ்டர் செய்யாம திரும்பிடலாம். நிச்சயமா வேற ஆப்ஷன் - தேர்வு மத்த இடங்களிலே இருக்கும். வெகு சில நேரங்களிலேதான் வேற தேர்வு இல்லாம இருக்கும். நான் இதுக்குன்னு ஒரு மின் அஞ்சல் முகவரி வெச்சு இருக்கேன்! அங்கே போய் அஞ்சல் பாக்கிறதே கிடையாது! :-)) ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் போய் எல்லாத்தையும் டெலீட் செய்துடுவேன்!
உலகத்திலே எதுவுமே இலவசம் இல்லைன்னு சொல்கிறதுண்டு. ஆனால் உண்மையிலே நிறையவே இலவசமாக வலையிலே கிடைப்பது உண்டு. லீனக்ஸ் மாதிரி இயங்கு தளமே இலவசமா கிடைக்கிறப்ப மென்பொருட்கள் என்ன? நிறைய மென்பொருள் தொழில் வல்லுனர்கள் அவங்களோட ஓய்வு நேரத்திலே நல்ல மென்பொருட்கள் தயார் பண்ணி வெளியிடறதுண்டு. சிலர் தனக்கு வேண்டியிருக்குன்னு தயார் பண்ணதை யாம் பெற்ற இன்பம் ... ரீதியிலே வெளியிடறதுண்டு.
சரி சரி தரவிறக்கற சமாசாரம் சொல்லுன்னா...
ஒண்ணும் அதிகம் செய்ய வேண்டாம். அவங்க டவுன்லோட் ன்னு கொடுத்து இருக்கிற பொத்தானையோ வார்த்தையையோ சொடுக்கினா பயர்பாக்ஸ்ல இருக்கிற தரவிறக்க மென்பொருள் சேமிக்கவா, இயக்கவா ன்னு துரியோதனன் பாணியிலே கேட்டுட்டு இறக்கி சேமிச்சு வெச்சுடும். இது இப்ப நிறையவே முன்னேறி இருக்கு. முன்னல்லாம் தரவிறக்கம் மெதுவா இருந்தா, சரி அப்புறம் பாத்துக்கலாம்ன்னு மூட முடியாது. உலாவியை மூடிட்டா தரவிறக்கி கொண்டு இருந்ததும் காணாம போயிடும். இப்ப அதை நிறுத்தி பின்னால மீண்டும் ஆரம்பிச்சுக்கலாம். பெரிய கோப்புக்களா தரவிறக்க dTa மாதிரி தரவிறக்க மென்பொருளை பயன்படுத்தறது நல்லது. அது கோப்பை பல பாகங்களா பிரிச்சு ஒரே நேரத்திலே பல துண்டுகளா தரவிறக்கி அப்புறம் ஒண்ணா தைச்சு கொடுத்துடும்.
இன்னும் அட்வான்ஸ்டா வேணும்ன்னா free download manager போல தரவிறக்கி பயன்படுத்துங்க. நிறுவல் பத்தி அப்புறம் சொல்லறேன்.
நான் இதுக்குன்னு ஒரு மின் அஞ்சல் முகவரி வெச்சு இருக்கேன்! அங்கே போய் அஞ்சல் பாக்கிறதே கிடையாது! :-)) ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் போய் எல்லாத்தையும் டெலீட் செய்துடுவேன்!//
ReplyDeleteம்ம்ம் agnihot3 ஐடி தானே??? அப்படித் தான் இருக்கும்னு நினைச்சேன். :P
பெரிய கோப்புக்களா தரவிறக்க dTa மாதிரி தரவிறக்க மென்பொருளை பயன்படுத்தறது நல்லது. அது கோப்பை பல பாகங்களா பிரிச்சு ஒரே நேரத்திலே பல துண்டுகளா தரவிறக்கி அப்புறம் ஒண்ணா தைச்சு கொடுத்துடும்.
இன்னும் அட்வான்ஸ்டா வேணும்ன்னா free download manager போல தரவிறக்கி பயன்படுத்துங்க. நிறுவல் பத்தி அப்புறம் சொல்லறேன். //
இதைப் பத்தி இன்னிக்குத் தான் தெரிஞ்சுண்டேன். நன்றி.
//
ReplyDeleteம்ம்ம் agnihot3 ஐடி தானே??? அப்படித் தான் இருக்கும்னு நினைச்சேன். :P// grrrrrrrrrrrrrrrrrrrrrrr!
இதைப் பத்தி இன்னிக்குத் தான் தெரிஞ்சுண்டேன். நன்றி.//
:-O