Wednesday, December 8, 2010

இப்படீஈஈஈஈ போலாமா?

சரி ஏதோ ஒரு நல்ல உலாவியை தேர்ந்தெடுத்து நிறுவச்சொல்லுங்க. ம்ம்ம்ம்! இன்னும் நிரல்கள் நிறுவறது எல்லாம் சொல்லித்தரலையே!

உலாவியோட விரைவு விசை டாஸ்க் பார்லே இருக்கும். அதை சொடுக்குங்க! அப்புறம் இப்படி ஈ ஈ ஈ  போயிட்டு வந்தா அது திறந்து ஏதோ ஒரு வலைப்பக்கத்தை காட்டிகிட்டு இருக்கும். வேற என்ன பக்கம் அதோட இல்ல பக்கம்தான். நம்ம அபிமான பயர்பாக்ஸை பாருங்க. [படம் சரியா தெரியலைன்னா அதன் மேலே சொடுக்குங்க]

From browser

அட ஆமாம். தமிழ்லே இருக்கு!
சரி, அடுத்து எங்கே போகனுமோ அந்த முகவரியை உள்ளே தட்டுங்க! எங்கேவா? மேலே காலி பெட்டி ஒண்ணு மையமா இருக்கே அதான்! http://techforelders.blogspot.com/ ன்னு தட்டியாச்சா?
அதானே பாத்தேன்! நீங்க யாரு? இதை காபி பேஸ்ட் பண்ணினீங்கதானே?
ஓ ஏற்கெனெவே இதை படிச்சுகிட்டு இருக்கிறதால ஒண்ணு உங்களுக்கே எப்படின்னு தெரியும்; இல்லை யாராவது திறந்து கொடுத்து இருக்காங்க. அப்படி யாரும் திறந்து கொடுத்து இருந்தா அவங்களை இனிமே தொந்திரவு பண்ணாம நாமளே திறந்துக்கலாம்.
சரி முகவரியை தட்டினதும் இந்த பக்கங்கள் திறந்தாச்சு. படிச்சுட்டு பின்னூட்டம் போட்டுட்டு மூடிடலாம்.

யாருய்யா இந்த http, அப்புறம் : ம்ம்ம் // இதெல்லாம் ஞாபகம் வெச்சுகிட்டு இருக்கிறதுன்னு கேட்டா,

நல்ல கேள்வி. இந்த வயசுக்கு இதெல்லாம் வேற ஞாபகம் வெச்சுக்கணுமா? தேவையே இல்லை!

மேலே வலது பக்கம் ஒரு தேடல் பெட்டி தெரியுது பாருங்க!
அதிலே techforelders மட்டும் அடிங்க!

From browser

கர்ர்ர்ர்ர்ர்ர்ர் நம்ம வலைப்பூ மூணாவது இடத்திலே இருக்கு! கூகுள் கொஞ்சம் அன்னியாயம் பண்ணி வேற ரெண்டு முன்னாடி காட்டுது.
சரி தொண்டுகிழங்களுக்குன்னு தமிழ்ல அடிச்சு பார்க்கலாம்! யாஹோ! எல்லாமே நம்ம லிங்க்தான்!

From browser

சொல்ல வந்தது என்னன்னா நிறைய விஷயங்களுக்கு சும்மா கூகுள் தேடல் பண்ணா போக வேண்டிய இடம் அனேகமா அகப்படும். சும்மா உங்க பேரை அடிச்சு பாருங்க!

5 comments:

  1. சரி தொண்டுகிழங்களுக்குன்னு தமிழ்ல அடிச்சு பார்க்கலாம்! யாஹோ! எல்லாமே நம்ம லிங்க்தான்!//

    :P:P:P:P:P:P

    ReplyDelete
  2. நன்னி எல்கே, கீ அக்கா!

    ReplyDelete
  3. அசத்தலாக இருக்கிறது

    ReplyDelete
  4. நன்றி ராஜேஸ்வரி அம்மா (அதான் என் அம்மா பேரும்கூட!) உங்கள் பாலோயிங் ப்ளாக் லிஸ்ட் பாத்து அசந்து போயிட்டேன்! நேரம் இருக்கு அத்தனையும் பார்க்க? :-)))))

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!