Tuesday, December 7, 2010

உலாவி.....

சரி இப்ப உலாவிகளை பார்க்கலாம்.
விண்டோஸ் கூடவே வரது இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர்.
பெரும்பாலான பேர்கள் இதையே பயன்படுத்தறதாலே பிரச்சினை செய்ய விரும்பறவங்க இதையே குறி வைக்கிறாங்க. இந்த ஒரு காரணத்துக்காகவே இதை பயன்படுத்தாம இருக்கலாம்!
என் அபிமான நக்‌ஷத்திரம் .... ஹிஹிஹி .... உலாவி பயர்பாக்ஸ்!முதல்லே பினிக்ஸ் ன்னு பேர் வெச்சுண்டு இருந்தது. அப்புறம் பயர் பேர்ட். அப்புறம் பயர்பாக்ஸ்! இங்கே கிடைக்கும்.


இதோட இஞ்சின் வேற. அதனால இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரை பாதிக்கிற வைரஸ் மால்வேர் ப்லாப்லா எல்லாம் இதை பாதிக்கணும்ன்னு இல்லை.
முதன் முதல்லே வந்தப்ப பயர்பாக்ஸ் ஒரு அருமையான திட்டத்தோட இருந்தது. அடிப்படை பயர்பாக்ஸ் ன்னு வந்தது. எந்த கூடுதல் வசதி வேணும்னாலும் அதை ஒரு நீட்சியா (addon) நிறுவிக்க வசதி செஞ்சாங்க. ஜாவா வேணுமா? சேத்துக்கோ! ப்ளாஷை தடுக்கணுமா? அதுக்கு ஒரு நீட்சி. விளம்பரம் எல்லாம் தடுக்கணுமா? அதுக்கு இன்னொன்னு.
அடிப்படை பயர்பாக்ஸ் அளவு சின்னதுதான். தேவைக்கேட்ப பெரிசாக்கிக்கறதாலே, நமக்கு வேண்டியது மட்டுமே நிறுவிக்கொள்ளறதாலே - தரவிறக்கமோ திறக்கிறதோ சீக்கிரம் நடக்கும்.

இது திறந்த மூலம் (open source) என்கிறதால பலரும் நீட்சிகளை தயர் செய்து சேத்தாங்க. சமீப கணக்குப்படி  இது வரை தரவிறக்கின நீட்சிகள் 2 பில்லியனை தாண்டியாச்சு! சரியா இதை எழுதறப்ப 2,236,914,095 add-ons downloaded; 172,165,851 add-ons in use. இங்கே போய் பாத்தா தரவிறக்க  வகை வகையா பிரிச்சு நீட்சிகளை பார்கலாம். ஏறத்தாழ 13,000 இப்ப கிடைக்குது!


ஒபெரா நடுவில வந்தப்பறம் வேகம் வேகம் ன்னு போட்டி ஆரம்பிச்சது. இப்பவும் இந்த போட்டி நடந்துகிட்டுத்தான் இருக்கு! ஒபெராவும் நல்ல உலாவி. இங்கே கிடைக்கும். [அஷ்வின் அந்த பக்கத்திலே இருக்கிற படத்த பாருங்க!]

இந்த உலாவி சண்டையிலே லேட்டஸ்ட் பையன் க்ரோம். அதுவும் நல்லாவே இருக்கு. பயர்பாக்ஸ் மாதிரியே இதுக்கும் நீட்சிகள் உண்டு. இங்கே கிடைக்கும்.

சபாரி,  ஆப்பிள் மேக் கம்ப்யூட்டருக்கானது. விண்டோஸுக்கு தயார் செஞ்சு இருக்காங்க. இங்கே கிடைக்கும்.

என்ன நீங்க பாட்டுக்கு நல்லா இருக்குன்னு சொல்லிகிட்டே போனா என்ன அர்த்தம்ன்னு கேட்டா....
ஹிஹிஹி இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர் தவிர எல்லாமே நல்லா இருக்கும்.

ஒரு வேளை உலாவிகளைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்க அவசரம்ன்னா இங்கே போய் பாருங்க.
{பி.கு:  ஏன் எபிக் பத்தி எழுதலை? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ன்னா அது பயர்பாக்ஸ்தான். வேஷம் போட்டுகிட்டு இருக்கு. சில கூடுதல் வசதிகள் இருக்கிறதால பயர்பாக்ஸ் அபிமானிகள் எபிக்கையும் பயன்படுத்தலாம்! }

அடுத்த பதிவுல நிச்சயமா நெட் உள்ளே போயிடலாம்.

3 comments:

  1. அஷ்வினோட குருவி அங்கே பறக்குது, நல்லா இருக்கு, கேட்கணும்னு இருந்தேன், எபிக் பத்தி ஏன் எழுதலைனு, பிழைச்சீங்க! :P

    ReplyDelete
  2. அஷ்வினோட குருவி அங்கே பறக்குது, நல்லா இருக்கு, //

    எழுதக்காணோமே! ஓ அஷ்வின் எங்கே இருக்கீங்க?

    // கேட்கணும்னு இருந்தேன், எபிக் பத்தி ஏன் எழுதலைனு, பிழைச்சீங்க! :P //

    ஹிஹிஹிஹி! அப்பாடா தப்பிச்சேன்!

    ReplyDelete
  3. பயர்பாக்ஸ் உடைய க்ளோன் என்கிறதால எபிக் ல மாற்றங்கள் மெதுவாதான் வரும் என்கிறதை நினைவில் வைக்கவும்.

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!